டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் சீஇஓ எலான் மஸ்க். உலகின் மிகப்பெரிய பணக்காரராக இவர் அறியப்படுகிறார். விண்வெளி வாழ்வு, ஆட்டோமடிக் எலெக்ட்ரிக் கார் என எதிர்காலத்துக்கான தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார் எலான் மஸ்க்.
சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் மஸ்க் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் வித்தியாசமான ஐடியாக்களையும் பதிவிடுவார். மஸ்க்குக்கு என ட்விட்டரில் தனி ஃபேன் பேஸ் இருக்கிறது. அவரது நிறுவனங்களில் வேலை செய்வது உலகம் முழுவதும் தொழில்நுட்ப துறைகளை விரும்பி படிக்கும் பல இளைஞர்களின் கனவாக இருக்கிறது.
உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டம் தனக்குப் பொருந்தாது என்றும் அது ரஷ்ய அதிபர் புடினுக்கு தான் சரி எனத் தான் நினைப்பதாகவும் கூறியுள்ளார்.
எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு 260 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தோராயமாகக் கூறப்படுகிறது. ஆனால் ரஷ்ய அதிபரின் சொத்து மதிப்பு துல்லியமாக இதுவரை கணக்கிடப்படவில்லை. அவருக்குக் கருங்கடல் பகுதியில் 1 பில்லியன் டாலர் பதிப்பில் அரண்மனை, 4 பில்லியன் டாலர் மதிப்பில் அடுக்குமாடிக்குடியிருப்பு முதலியவை உள்ளன. அவரின் உறவினர்கள், காதலிகள் எனப் பலரும் ஐரோப்பிய நாடுகளில் செல்வந்தர்களாக உள்ளனர்.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போரினால் உலகம் முழுவதும் இருந்து புடினுக்கு எதிர்ப்புகள் வந்திருக்கின்றன. மேற்குலக நாடுகள் ரஷ்யாவின் மீது பல விதமான பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கின்றன.
உக்ரைனுக்கு வெளிப்படையான ஆதரவு அளித்து வருகிறார். உக்ரைனுக்கு ஸ்டார்லின்க் மூலம் இணையச் சேவை வழங்கியும் பொருளாதார உதவிகளும் செய்துள்ளார்.