"பேக்கரிய டெவெலப் பண்ணதுல இருந்து பன்னு வேணு வெண்ண வேணு னு" என்று வடிவேலு கூறுவது போல, டிவிட்டரை விலைக்கு வாங்கினாலும் வாங்கினார் மஸ்க், சர்ச்சைகளுக்கு குறைபாடில்லை.
கடந்த அக்டோபர் மாதம் பல குழப்பங்களுக்கு பிறகு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றினார். அதன் பிறகு, முதல் வேலையாக சிஇஓ இருந்த பராக் அகர்வாலை வெளியேற்றினார். டிவிட்டர் ஊழியர்களை 12 மணி நேரம், வாரத்தில் 7 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்றார். அதன் பிறகு டிவிட்டரில் அங்கீகாரம் பெற கணக்குகள் மாதம் 8 டாலர் கட்டணம் செலுத்தவேண்டும் என்றார். கூடவே, 50% பணியாளர்களை லே ஆஃப் செய்தார் மஸ்க். இதில் இந்தியர்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமே.
இந்நிலையில், தற்போது எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் ட்வீட் செய்து வருவது வைரலாகி வருகிறது. போஜ்பூரி மொழியில் பாடல் ஒன்றின் வரிகளை அவரது கணக்கில் ட்வீட் செய்து வருகிறார் மஸ்க்.
போஜ்பூரியில் பிரபலமான பாடலான லாலிபாப் லகேலு என்ற பாடலின் வரிகளை தான் ட்வீட் செய்துள்ளார் மஸ்க். இதனை பார்த்த பல இந்திய பயனர்கள், மஸ்க் நம் நாட்டின் ஒரு மொழியை தெரிந்து வைத்திருக்கிறார் என்று பாராட்டி வரவேற்று வந்தனர்.
ஆனால், அது அவர் ட்வீட் செய்யவில்லை என்ற செய்தி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும் அந்த அக்கவுண்ட் ஒரு போலி ஐடி எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க் எனப் பெயரிட்டு அருகில் ப்ளூ டிக் இருந்ததை பார்த்து பலரும் அது எலான் மஸ்கின் கணக்கு தான் என நினைத்து ஏமாந்துள்ளனர்.
பேசப்படும் அந்த அக்கவுண்ட், இயான் வுல்ஃபோர்ட் என்பவருடையது. அவர் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஆவார். அவர் பல்கலைக்கழகத்தில் இந்தி மொழி திட்டம் மற்றும் தெற்காசிய கலாச்சார படிப்புகளை வழிநடத்தி வருபவர். அவர் இந்தி, உருது, சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழிகளில் சரளமாக பேசுவார். கூடுதலாக, அவர் போஜ்புரி மற்றும் மைதிலியையும் புரிந்து கொள்பவர். தற்போது அந்த கணக்கு சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust