டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியதிலிருந்து, கூகுளில் How To Delete Twitter? என்ற கேள்வி அதிகம் தேடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற நிறுவனங்களின் சொந்தக்காரரான எலான் மஸ்க் கடந்த வாரம் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.
அவருக்கும் டிவிட்டர் முன்னாள் தலைவருக்கும் சுமுகமான உறவு இல்லை என்பதும் அவ்வப்போது வெளியில் தெரியவந்தது. இந்நிலையில், டிவிட்டரை வாங்கியவுடன் முன்னாள் தலைவர் பராக் அகர்வாலை வெளியேற்றினார் மஸ்க்.
ஊழியர்கள் வாரம் முழுவதும் வேலை செய்ய வேண்டும், ப்ளூ டிக் பெற கட்டணம் செலுத்தவேண்டும் போன்றவை தற்போதைய நிலவரங்கள். இந்நிலையில், லேட்டஸ்டான தகவல் என்னவென்றால், "டிவிட்டரை எப்படி டிலீட் செய்யவேண்டும்" என்று கூகுளில் அதிகம் தேடப்பட்டது தான்.
அக்டோபர் 24 முதல் 31 வரை How to Delete Twitter, Boycott Twitter ஆகியவற்றுக்கான கோரிக்கைகள் கணிசமாக அதிகரித்தாக VPN Overview நிறுவனம் தெரிவித்தது.
கூகுள் தரவுகளின் படி, அக்டோபர் 26 முதல் நவம்பர் 2 வரை 'Boycott Twitter' தேடல்கள் 4,800 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மேலும் 'How To Delete Twitter' என்ற தேடல் 500 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust