Emirates Flight
Emirates FlightTwitter

பெரிய ஓட்டையுடன் 14 மணி நேரம் வானில் பறந்த விமானம் - எங்கு? ஏன்?

விமானம் புறப்பட்ட 45 நிமிடங்களில் பலத்த இடிபோன்ற சத்தம் கேட்டதாகவும், விமானத்தில் இருந்த சில ஊழியர்கள் விமானத்தின் இறக்கைகளை ஆய்வு செய்ததாகவும் கூறினார்.
Published on

துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் 14 மணி நேரமாக ஒரு பெரும் துளையுடன் பறந்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பகுதிக்கு எமிரேட்ஸ் விமானம் புறப்பட்டது. ஜூலை 1 ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் தரையிறங்கிய பயணிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் விமானத்தின் ஒரு பகுதியில் பெரிய ஒட்டை இருந்துள்ளது.

இந்த பெரும் துளையுடன் விமானம் 14 மணி நேரம் பயணம் செய்துள்ளது தான் கூடுதலாக அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும்.

Flight
FlightTwitter

இந்த சம்பவம் குறித்து விமானத்தில் பயணம் செய்த பேட்ரிக் என்ற பயணி ஒருவர் கூறியுள்ளார்.

அதில் விமானம் புறப்பட்ட 45 நிமிடங்களில் பலத்த இடிபோன்ற சத்தம் கேட்டதாகவும், விமானத்தில் இருந்த சில ஊழியர்கள் விமானத்தின் இறக்கைகளை ஆய்வு செய்ததாகவும் கூறினார்.

Emirates Flight
மோனிகா கன்னா : தீ பிடித்த விமானம், 185 பேரை காப்பாற்றிய பைலட் - திக்திக் நிமிடங்கள்

இந்த சம்பவம் குறித்து எமிரேட்ஸ் விமான நிறுவனம் கூறுகையில்,

விமானத்தின் 22 டயர்களில் ஒன்று பயணத்தின் போது வெடித்தன் காரணமாக விமானத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்ததாகத் தெரிவித்தது. அதே சமயம் இது விமானத்தின் உள் அமைப்பிற்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை என அந்த நிறுவனம் கூறியுள்ளது. நல்ல வேளையாக விமானமும் அதில் உள்ள பயணிகளும் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டனர்.

Emirates Flight
உடைந்த விண்ட்ஷீல்டுடன் வானில் பறந்த SpiceJet விமானம் - ஒரே நாளில் இரண்டாவது பழுது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com