சீனாவில் இருக்கும் ’Forbidden City’ - அரசக் குடும்பத்துகே இங்கு தடையா? காரணம் என்ன?

ஏன் அரசக் குடும்பத்தினருக்கு கூட இந்த கட்டுபாடு இருக்கிறது. அரசரின் குடும்பத்தவர்களும் இந்த வளாகத்திற்குள் சில பகுதிகளை அணுக, பயன்படுத்த தடை இருக்கிறது.
சீனாவில் இருக்கும் ’Forbidden City’ - அரசக் குடும்பத்துகே இங்கு தடையா? காரணம் என்ன?
சீனாவில் இருக்கும் ’Forbidden City’ - அரசக் குடும்பத்துகே இங்கு தடையா? காரணம் என்ன?twitter
Published on

வித்தியாசமான, உலகப் புகழ்பெற்ற கட்டிடக்கலைக்காக பெயர்பெற்ற சீனாவில், தடைசெய்யப்பட்ட நகரம் ஒன்றும், அங்கு மாளிகை ஒன்றும் இருக்கிறது.

அதைப்பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

சீன தலைநகரான பீஜிங்கில் அமைந்திருக்கிறது இந்த நகரம். இதனை Forbidden City என்று குறிப்பிடுகின்றனர். இதுவும் உலகப்புகழ்பெற்ற வளாகம் தான். எப்படி என்று கேட்கிறீர்களா?

இது தான் சீன அரசரின் மாளிகை!

இதனை இம்பீரியல் அரண்மனை என்றும் அழைக்கின்றனர். மிங் மற்றும் கிங் வம்சத்தினருக்கு, சுமார் 1644ஆம் ஆண்டில் இருந்து 1912ஆம் ஆண்டு வரை ஒரு முக்கிய இடமாக விளங்கியது.

இதனை தடைசெய்யப்பட்ட நகரம் என்று அழைக்க ஒரு காரணம் இருக்கிறது.

இந்த இம்பீரியல் அரண்மனை வளாகத்தில் தான் சீன அரசர் வசித்தார். ஆகையால் இந்த இடத்திற்கு கண்காணிப்பு பலமாக இருக்கும்.

இந்த வளாகத்திற்குள் சாதாரண ஆட்கள் நுழைவது கிட்டத்தட்ட நடவாத காரியமாகும்.

அரசு சார்ந்த நபர்களும் கூட இந்த வளாகத்துக்குள் நுழைய, பல கட்ட பாதுகாப்பு சோதனைகளை கடந்து செல்லவேண்டும்.

ஏன் அரசக் குடும்பத்தினருக்கு கூட இந்த கட்டுபாடு இருக்கிறது. அரசரின் குடும்பத்தவர்களும் இந்த வளாகத்திற்குள் சில பகுதிகளை அணுக, பயன்படுத்த தடை இருக்கிறது.

தங்கு தடையின்றி, இந்த இம்பீரியல் பேலஸ் வளாகத்துக்குள் உலா வர சுதந்திரம் உள்ள ஒரே நபர் அரசர் மட்டுமே!

சீனாவில் இருக்கும் ’Forbidden City’ - அரசக் குடும்பத்துகே இங்கு தடையா? காரணம் என்ன?
கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை: Muthunandini Palace பற்றி தெரியுமா?

சுமார் 178 ஏக்கர் பரந்து விரிந்திருக்கும் இந்த வளாகமானது, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலங்களுள் ஒன்று.

ஐந்து நூற்றாண்டுகளாக சீன அரசியலமைப்பின் மத்தியப்புள்ளியாக இருந்த இந்த இம்பீரியல் பேலஸ், தற்போது வரலாற்றுச் சிறப்பு மிக்க அடையாளமாக திகழ்கிறது.

சீன அரண்மனை கட்டிடக்கலையின் எடுத்துக்காட்டாக இருக்கும் இந்த இம்பீரியல் பேலஸ் வளாகத்தில் சுமார் 1000 கட்டடங்கள் இருக்கின்றன. இதுவே உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகமாகும்.

நுணுக்கமான வேலைபாடுகள், மஞ்சள் நிற கூரைகள் இந்த கட்டடங்களில் காணமுடிகிறது. பாரம்பரியமான ஃபெங் சுயி கொள்கைகளை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது.

தற்போது சுற்றுலா தலமாக மாறியுள்ளது இந்த Forbidden City. சீன பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் கலைப்பொருட்கள், ஓவியங்கள், சிலைகள் போன்றவை மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், குறிப்பாக அரசரின் தனிப்பட்ட சேகரிப்புகளையும் கொண்டுள்ளது இந்த சீனாவின் மிக பெரிய அருங்காட்சியகம்.

இந்த வளாகத்துக்குள் எந்த இடத்திற்கும் இன்று யாவரும் அனுமதிக்கப்படுகின்றனர்

சீனாவில் இருக்கும் ’Forbidden City’ - அரசக் குடும்பத்துகே இங்கு தடையா? காரணம் என்ன?
36 மாடிகள், 30,000 பேர் - சீனாவின் ’மினி சிட்டி’ என்றழைக்கப்படும் கட்டடம் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com