ஐரோப்பா : இத்தாலி முதல் நார்வே வரை - இயற்கை அழகுமிகுந்த பகுதிகள் எங்கிருக்கின்றன?
ஐரோப்பா : இத்தாலி முதல் நார்வே வரை - இயற்கை அழகுமிகுந்த பகுதிகள் எங்கிருக்கின்றன?Twitter

ஐரோப்பா : இத்தாலி முதல் நார்வே வரை - பூலோக சொர்கமாக இருக்கும் இடங்கள் பற்றி தெரியுமா?

ஐரோப்பாவின் பருவகாலம் காரணமாக அங்கு மிக மிக அழகான நிலப்பரப்புகள் இருக்கின்றன. குறைவான மக்கள் தொகை, செழிப்பான அரசுகள் இயற்கையழகைப் பாதுகாக்கின்றன.
Published on

உலகின் மையமாக ஐரோப்பா கண்டம் விளங்கியிருக்கிறது. ஸ்பெயின், போர்ச்சுகள், பிரான்ஸ், இங்கிலாந்து காலனி ஆதிக்கத்தின் கீழ் பல நாடுகள் இருந்த வரலாற்றை நாம் அறிவோம்.

பிற நாடுகளுக்கு முன்னதாகவே பல அறிவியல் கண்டுபிடிப்புகள் இங்கு தோன்றியிருக்கின்றன. உலகில் முதன்முதலாக நாகரீகம் அடைந்த கண்டமாகவும் ஐரோப்பாவைக் கூறலாம். இதனால் அங்கே பல வரலாற்றுச் சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பாவின் பருவகாலம் காரணமாக அங்கு மிக மிக அழகான நிலப்பரப்புகள் இருக்கின்றன. குறைவான மக்கள் தொகை, செழிப்பான அரசுகள் இயற்கையழகைப் பாதுகாக்கின்றன.

Amalfi, Italy
Amalfi, Italy

அமல்ஃபி (Amalfi), இத்தாலி

இந்த நகரத்தைப் போல அமைப்புடைய வேறொரு நகரம் இந்த உலகில் இருக்க முடியாது. மலைப்பள்ளத்தாக்கில் கடலுக்கு மேலே இந்த நகரம் அமைந்துள்ளது வியப்பளிக்கிறது. 

சினிமாக்களில் அதிகம் காட்டப்படும் இந்த நகரம் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்று.

கோட்டார் விரிகுடா (Bay of Kotor), மொண்டெனேகுரோ 

தெற்கு ஐரோப்பாவில் உள்ள மொண்டெனேகுரோ  நாட்டில் அமைந்துள்ளது இந்த கண்கவரும் கோட்டார் விரிகுடா. சுற்றிப்பார்த்து மெய்மறந்து போவதற்கு இதைவிட சிறந்த இடம் இருக்க முடியாது.

Cliffs of Moher
Cliffs of Moher

க்ளிஃப்ஸ் ஆஃப் மொஹெர், அயர்லாந்து

இயற்கையை விரும்பும் எவரும் அதன் அழகிய பகுதிகளை சென்று பார்க்க விரும்புவர். அப்படி சென்று அனுபவிக்க வேண்டிய இடம் தான் க்ளிஃப்ஸ் ஆஃப் மொஹெர். அயர்லாந்திலேயே அழகான பகுதி என்றும் கூறலாம்.

Dolomites
Dolomites

டோலோமிட்ஸ், இத்தாலி

மலைகள் இயற்கைக்கு பேரழகு சேர்ப்பவை. டோலோமிட்ஸ் மலைகள் இத்தாலியின் அழகான மலைகள் என்றே கூறலாம். கூர்மையான மலை உச்சிகள், ஆழமான பசுமையான பள்ளத்தாக்குகள், காடுகள் இங்கு உள்ளனர். 

Lapland
Lapland

லேப்லாண்ட், பின்லாந்து

நார்தன் லைட் பார்ப்பதற்கு சிறந்த இடமாக அறியப்பட்டாலும், இங்குள்ள காடுகளையும் வளங்களையும் ரசிப்பதற்கு ஆட்கள் குவிகின்றனர்.

Hallstatt
Hallstatt

ஹல்ஸ்டாட் (Hallstatt), ஆஸ்திரியா

உலகில் இருக்கும் அழகான நகரங்களில் ஒன்று ஹல்ஸ்டாட். ஐரோப்பாவின் அழகுக்கு சரியான சாம்பிள் இந்த நகரம் எனலாம். இங்கும் சுற்றுலாப்பயணிகள் குவிகின்றனர்.

Kirkjufell
Kirkjufell

கிர்க்ஜுஃபெல், ஐஸ்லாந்து

இந்த மலைக்கு சர்ச் மவுண்டைன் என்ற பெயரும் உண்டு. உலகில் அதிகமாக புகைப்படம் எடுக்கப்பட்ட மலை இது. இதன் தனித்துவமான வடிவத்தைப் பார்வையிட இங்கும் மக்கள் வருகை தந்த வண்ணம் இருப்பர்.

Lake Bled
Lake Bled

லேக் ப்லெட், ஸ்லோவேனியா

உலகில் உள்ள அழகான நீர்நிலைகளில் ஒன்று லேக் பிலெட். 2 கி.மீ நீளமும் 1.5 கிலோமீட்டர் அகலமும் உள்ள இந்த ஏரியின் நடுவில் ஒரு கண்ணீர்துளி வடிவ தீவு உள்ளது. 

Lauterbrunnen
Lauterbrunnen

லௌடெர்ப்ரன்னன் (Lauterbrunnen), சுவிட்சர்லாந்து

இங்குதான் 300 மீட்டர் உயரமான Staubbach நீர்வீழ்ச்சி இருக்கிறது. இங்கு ஒருமுறை வருவது நிச்சயம் வாழ்நாள் அனுபவமாக மாறும் என்கின்றனர். 

Lofoten
Lofoten

லொஃபோடென், நார்வே

லொஃபோடென் ஒரு அற்புதமான தீவுக்கூட்டமாகும். வைக்கிங் சீரிஸ் பிரியராக இருந்தால் இது உங்கள் பக்கெட் லிச்டில் நிச்சயமாக இருக்கும். இப்படி ஒரு இடம் இருப்பதை நேரில் பார்க்கும் வரை மனம் நம்பமறுப்பது ஆச்சரியமில்லை. 

Meteora
Meteora

மெடோரா (Meteora), கிறீஸ்

இது மலை உச்சியில் இருக்கும் ஒரு நகரமாகும். இங்குள்ள பாறைகளின் அமைப்பு வியக்க வைப்பதாக இருக்கும். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த பாறைகள் ஊர்வானதாகக் கூறப்படுகிறது.

Santorini
Santorini

சண்டோர்னி, கிறீஸ்

இந்த இடத்துக்கு ஒருமுறை சென்றுவிட்டால் அங்கிருந்து திரும்பவே மனம் வராது. இது கிரேக்க பெருநிலத்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 200 கிமீ தொலைவில் இருக்கின்றது. இங்கிருக்கும் பலவண்ண பாறைகளும் கட்டடக்கலையும் அழகூட்டுகிறது.

the Faroe Islands
the Faroe Islands

தி ஃபெரோ தீவுகள்

ஐஸ்லாந்துக்கும் நார்வேவுக்கும் நடுவில் அமைந்துள்ளது. இயற்கை விரும்பிகளுக்காகவே கடவுளால் செதுக்கப்பட்டதைப் போலிருக்கும் இந்த தீவுகள். 

ஐரோப்பா : இத்தாலி முதல் நார்வே வரை - இயற்கை அழகுமிகுந்த பகுதிகள் எங்கிருக்கின்றன?
வெனிஸ் முதல் மெக்சிகோ வரை : விரைவில் கடலில் மூழ்கப்போகும் அழகிய நகரங்கள் - ஏன் தெரியுமா?
ட்ரோல்டுங்கா, நார்வே
ட்ரோல்டுங்கா, நார்வே

ட்ரோல்டுங்கா, நார்வே

நார்வேயில் அதிகமாக புகைப்படம் எடுக்கப்பட்ட பாறை இதுவாகத்தான் இருக்க வேண்டும். இந்த பாறை நாடுமுழுவதும் பிரபலமானது. இந்த பாறையில் இருந்து செல்ஃபிகள் எடுப்பது மிகவும் ஆபத்தானதும் கூட!

துலிப்வெளி, நெதர்லாந்து
துலிப்வெளி, நெதர்லாந்து

துலிப்வெளி, நெதர்லாந்து

இது ஒரு சீசனல் பகுதியாகும். பூக்கள் பூத்திருக்கும் போது மனதை மயக்கும் இடமாக இந்த தோட்டம் இருக்கும்,. மார்ச் அல்லது மே மாதத்தில் இங்கு பூக்கள் பூத்திருப்பதைப் பார்க்கலாம்.

வெனிஸ், இத்தாலி
வெனிஸ், இத்தாலி

வெனிஸ், இத்தாலி

அழகான நகரம் என்றாலே நம் நினைவுக்கு வெனிச் நகரம் தோன்றலாம். வெனிஸில் எங்கே கேமராவை வைத்தாலும் ஒரு கிளாசிக்கான புகைப்படத்தை உங்களால் எடுக்க முடியும். அந்த அளவு அழகான நகரமாக இருக்கிறது.

ஐரோப்பா : இத்தாலி முதல் நார்வே வரை - இயற்கை அழகுமிகுந்த பகுதிகள் எங்கிருக்கின்றன?
ஆஸ்திரேலியா ஆதிக்குடிகள் அழிக்கப்பட்ட வரலாறு: பழங்குடிகளிடமிருந்து ஐரோப்பா திருடிய நாடு
ஐரோப்பா : இத்தாலி முதல் நார்வே வரை - இயற்கை அழகுமிகுந்த பகுதிகள் எங்கிருக்கின்றன?
சிங் ஷி : ஒரு பாலியல் தொழிலாளி உலகை உலுக்கிய கடற்கொள்ளையர் ஆன கதை - ஒரு விறுவிறு வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com