ரூ.1.5 கோடிக்கு விலைக்கு வரும் ஆளில்லா தீவு - எங்கே? என்னென்ன வசதிகள் உள்ளன?

இந்த தீவிலிருந்து மனிதர்கள் வாழும் நிலபரப்பு வெகு தூரத்தில் இருக்கிறது. நிலபரப்பை அடையவே 6 மைல் தூரம் நாம் கடக்கவேண்டும்.
ரூ.1.5 கோடிக்கு விலைக்கு வரும் ஆளில்லா தீவு - எங்கே?
ரூ.1.5 கோடிக்கு விலைக்கு வரும் ஆளில்லா தீவு - எங்கே? twitter

காதை துளைக்கும் ஹாரன் சத்தங்களிலிருந்தும், எதற்கென்றே தெரியாமல் அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேலைகளிலிருந்தும், இந்த அமைதியற்ற சூழலிலிருந்தும் கொஞ்ச நாளாவது தப்பித்து கொள்ளவேண்டும் என நினைப்பவர் நீங்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது!

ஸ்காட்லாந்தில் அமைந்திருக்கும் பர்லொக்கோ என்கிற தீவு விலைக்கு வந்திருக்கிறது. அதுவும் ஆளில்லா பாலைவனம்.

வசதிகள் என்ன?

இந்த தீவின் விலை 190,000 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.1.5 கோடி. சி என் என் தளத்தின் அறிக்கையின்படி இந்த தீவு சுமார் 25 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இங்கு ஒரு குளம் இருக்கிறது. இது மட்டுமே இந்த மொத்த தீவுக்குமான நீர் ஆதாரம். இங்கு மிக அரிதான விலங்கினங்கள், தாவரங்கள் இருக்கின்றன. அதனால் இந்த பர்லொக்கோ தீவு சிறப்பு அறிவியல் ஆர்வமுள்ள தளம் - Site of Special Scientific Interestன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது

இந்த தீவுக்கு நடந்தோ, அல்லது டிராக்டர் அல்லது குவாட்பைக் மூலமாகவோ செல்லலாம். இந்த குவாட்பைக்குகளை ரேசர்கள் பயன்படுத்தி நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இங்கு ஒரு கூழாங்கல் கடற்கரையும் உள்ளது. ஆகையால் இங்கு பயன்படுத்தக்கூடிய போக்குவரத்து சாதனங்களில் போட்டும் (boat ) உண்டு.

ரூ.1.5 கோடிக்கு விலைக்கு வரும் ஆளில்லா தீவு - எங்கே?
தெருக்களே இல்லாத ஒரு அதிசய கிராமம்! ஒரே வீதியில் ஒன்றாக வாழும் 6000 பேர் - எங்கே?

இந்த தீவிலிருந்து மனிதர்கள் வாழும் நிலபரப்பு வெகு தூரத்தில் இருக்கிறது. நிலபரப்பை அடையவே 6 மைல் தூரம் நாம் கடக்கவேண்டும்.

தீவின் அருகில் உள்ள ரயில் நிலையம், டம்ஃபிரைஸ். இந்த ரயில் நிலையத்துக்கு செல்ல ஒரு மணி நேரம் நாம் பயணிக்கவேண்டும் மேலும், லண்டன் போன்ற பெருநகரங்கள் 350 மைல் தொலைவில் இருக்கிறது

இந்த தீவினை விற்கும் பொறுப்பு கால்பிரிந்த் குழுமம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த தீவினை சொந்தமாக்குபவர்கள், உள்ளூர் திட்டமிடல் ஆணையத்திடம் கலந்தாலோசித்து பின்னர் இங்கு கட்டடங்கள் அமைத்துக்கொள்ளுமாறு குழுமம் தெரிவித்துள்ளது.

ரூ.1.5 கோடிக்கு விலைக்கு வரும் ஆளில்லா தீவு - எங்கே?
Switzerland: புதிதாக குடியேறுபவர்களுக்கு 50 லட்சம் கொடுக்கும் மலை நகரம்- கண்டிஷன்ஸ் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com