நவீன வளர்ச்சி மற்றும் நகரமயமாக்குதல் காரணமாக பசுமை என்ற ஒன்றையே நம்மால் பார்க்க முடியவில்லை. பசுமைக்காக பயணம் செய்ய வேண்டிய சூழல் இன்றைய தலைமுறைக்கு வந்துவிட்டது.
கிராமங்கள் அல்லது ஏதேனும் சுற்றுலா தலங்களுக்கு சென்று பசுமையை கண்டுவிட்டு வருகிறோம்.
ஆனால் நாம் தினம் வாழும் வீடு பசுமையாக இருந்தால் எப்படி இருக்கும்?
அப்படி பசுமையான புற்களால் மூடப்பட்ட வீடுகளில் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.
நாடு முழுவதும் புல் கூரையுடன் கூடிய சிறிய வீடுகளை பார்க்க முடியும். இந்த செழிப்பு மிகுந்த அழகான வீடுகள் குறித்தும், அவை எப்போது கட்டப்பட்டன என்பது குறித்தும் இந்த கட்டுரையில் காணலாம்.
இந்த தரை வீடுகள் புல் கூரையுடன் கட்டப்படுகிறது. புல் மற்றும் தாவர வேர்களால் உருவாக்கப்பட்ட இந்த வீடுகள் ஐஸ்லாந்தில் அதிக அளவில் காணப்படும். தரை வீடுகள் பொதுவாக தட்டையான கற்களால் ஆன அடித்தளத்தைக் கொண்டவையாகும்.
கி.பி 9 ஆம் நூற்றாண்டில், வைக்கிங்ஸ் இனத்தை சேர்ந்தவர்கள் ஐஸ்லாந்தில் குடியேறினர். அதனோடு அவர்களின் கட்டிடக்கலை மரபுகளையும் சேர்த்துக் கொண்டு வந்தனர்.
இந்த கட்டமைப்புகளை ஐஸ்லாந்து காலநிலைக்கு ஏற்றவாறு, தீவில் கிடைக்கும் இயற்கை வளங்கள் கொண்டு இயற்கையாகவே அமைத்தனர்.
ஐஸ்லாந்தில் உள்ள பணக்காரர்களும் ஏழைகளும் இயற்கையாக உள்ள பாறைகளின் மீது புற்கள் இருந்தாலும் அதனை அகற்றாமல் அதிலேயே வீடுகளை அமைத்து வாழ்ந்து வந்தனர்.
வீடுகளை கட்ட மரத்தையே பயன்படுத்துகின்றனர். தட்டையான கற்களால் ஆன அடித்தளத்தை கொண்டாலும் வீட்டினை மாற்றியமைக்க மரத்தையே பயன்படுத்தியுள்ளனர். வீட்டின் கூரை பகுதிக்கு சதுப்பு நிலங்களில் உள்ள புற்களை பயன்படுத்தினர்.
இந்த வீடுகள் 20 ஆண்டுகள் வரை மட்டுமே நீடிக்கும் என்று கூறப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டு வரை ஐஸ்லாந்தில் தரை வீடுகள் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
1915 பிறகு ஐஸ்லாந்தில் தரைவீடுகள் மாற்று வடிவம் பெற்றன. அங்கு ஏற்பட்ட பெரும் தீ விபத்து காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்தது.
அதன் பின்னர் கான்கீரிட் வீடுகள் அதிக அளவில் வரத்தொடங்கின. ஐஸ்லாந்து டென்மார்க்கிடமிருந்து சுதந்திரம் பெற்றவுடன் நவீன கட்டிடங்களுக்கு ஆதரவாக தரை வீடுகளை நாட்டிலிருந்து அகற்ற ஒரு தேசியவாத பிரச்சாரம் தொடங்கப்பட்டது என கூறப்படுகிறது.
இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டில், டர்ஃப் ஹவுஸ்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய அந்தஸ்துக்கு அங்கீகரிக்கப்பட்டது.
ஐஸ்லாண்டிக் தரை வீடுகளின் முக்கியத்துவம் தேசிய பாரம்பரியத்தின் ஒரு அழகியல் என்று பல வருடங்களாக தரை வீடுகளை ஆய்வு செய்த ஐஸ்லாந்திய கட்டிடக்கலை நிபுணர் ஹ்ஜோர்லீஃபர் ஸ்டீபன்சன் கூறியுள்ளார்.
மனித வாழ்வில் முக்கியமானது வசிக்கும் இருப்பிடம். அதில் எப்போதுமே ஐஸ்லாந்தின் பசுமையான புற்களால் மூடப்பட்ட தரைவீடுகளுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதுதான் நிதர்சனமான உண்மை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust