Bikini killer: சீரியல் கில்லர்; ஏகப்பட்ட காதலிகள்; தாலிபான்கள் தொடர்பு- ஒரு கொடூரனின் கதை

20 பெண்களை கொலை, தாலிபான்களுடன் தொடர்பு பல நாடுகளில் தேடப்படும் குற்றவாளி இந்த பிகினி கில்லரின் பின்னிருக்கும் மர்மங்கள் என்ன?
Bikini killer: 20 பெண்கள் கொலை; பல நாடுகளில் தேடப்படும் குற்றவாளி - யார் இந்த கொடூரன்?
Bikini killer: 20 பெண்கள் கொலை; பல நாடுகளில் தேடப்படும் குற்றவாளி - யார் இந்த கொடூரன்?சார்லஸ் சோப்ராஜ்
Published on

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல பெண்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ் என்பவரை நேற்று தாண்டனைக் காலம் முடியும் முன்னரே விடுதலை செய்தது நேபாள நீதிமன்றம்.

1975ம் ஆண்டு அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவரை நேபாளத்தில் கொலை செய்ததற்காக 2003ல் இவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

2014ம் ஆண்டு அவர் கனடாவைச் சேர்ந்த மற்றொரு நபரையும் கொலை செய்திருக்கிறார் என தெரிய வந்தது.

இதன் காரணமாக அவரது தண்டனைக் காலம் 20 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. தற்போது 78 வயதாகும் அவர் மூப்பு காரணமாகவும் உடல் நிலை காரணமாகவும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

யார் இந்த சீரியல் கில்லர்? இவர் 'பிகினி கில்லர்' எனவும் 'பாம்பு' எனவும் அழைக்கப்பட காரணம் என்ன?

1944ம் ஆண்டு வியட்நாமில் பிறந்தவர் சார்லஸ் சோப்ராஜ்.

இவரது தந்தை ஒரு இந்தியர் மற்றும் தாய் வியட்நாமி.

வியட்நாமின் சைகோன் பகுதி அப்போது பிரஞ்சு கட்டுப்பாட்டில் இருந்தது.

சார்லஸின் தாய் ஒரு பிரஞ்சு இராணுவவீரரை திருமணம் செய்துகொண்டு பிரான்ஸுக்கு குடியேறினார்.

தந்தையும் கைவிட, சிறுவனாக இருந்த சார்லஸ் சோப்ராஜ் திருட்டு, ஏமாற்றுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறை செல்வதும் வருவமாக இருந்தார்.

ஒரு கட்டத்தில் வியட்நாமை விட்டு பிரான்ஸுக்கு தப்பி ஓடினார். ஆனால் அவர் தாயின் புதிய குடும்பத்துடன் இணையவில்லை.

பிரான்ஸில் வளர்ந்த அவர் அங்கிருந்து பல உலக நாடுகளுக்கு பயணம் செய்ய ஆரம்பித்தார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அவர் வந்த போது அவரது கொலைக்கணக்கு தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர் 20க்கும் மேற்பட்ட கொலைகளுக்கு பொறுப்பாளியாக இருக்கிறார்.

அதில் பெரும்பாலானோர் பெண்கள்.

கொலை செய்யப் போகும் நபர்களுடன் நெருக்கமாக பழகி அவர்களின் உணவு அல்லது மதுவில் நச்சு கலந்து கொலை செய்து வந்துள்ளார்.

இவற்றையும் படியுங்கள் :

Crime Thriller Series பார்ப்பதால் மன அழுத்தம் ஏற்படுமா?- இளைஞர்களை எச்சரிக்கும் ஆய்வு!

அட்டிலா முதல் தைமூர் வரை : செங்கிஸ்கானை விட கொடூரமான 5 அரசர்கள் - நடுங்க வைக்கும் கதைகள்!

நடுங்க வைக்கும் ஜப்பான் சிறைகள் - என்ன நடக்கிறது அங்கே? - அதிர வைக்கும் தகவல்கள்

கொல்லப்பட்டவர்களின் பாஸ்போர்டைத் திருடி அவர்களின் அடையாளத்தையே தப்பிக்க பயன்படுத்தியுள்ளார்.

பார்ப்பதற்கு படித்தவர் போலவும் மென்மையானவராகவும் இருப்பதனால் இவர் மீது பாதிக்கப்பட்டவர்கள் எளிதாக நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

இவரது தோற்றமும் பழகும் விதமும் இவர் கொலை செய்தவர் என யாராவது கூறினாலும் நம்ப முடியாதபடி இருக்கும்.

செய்த குற்றத்திலிருந்து தப்பிக்கவும் இவரது மென்மையான குணம் இவருக்கு உதவியிருக்கிறது.

பல முறை பல நாடுகளில் கைதும் செய்யப்பட்டிருக்கிறார். லஞ்சம் கொடுத்து தப்பித்துள்ளார். சில முறை சிறையில் இருந்தும் தப்பித்து ஓடியிருக்கிறார்.

சோப்ராஜ் அதிக கொலை குற்றங்கள் செய்தது 1970 - 1980 ஆண்டுகளில் தான்

இந்த கொலைகளுக்கு காரணமும் இல்லை.

கொலை செய்யப்பட்ட பெண்களின் உடலை மறைக்க கொடூரமான யுக்திகளை கையாண்டதால் இவருக்கு பிகினி கில்லர் என்ற பெயர் வந்திருக்கிறது.

இவரது தந்திரங்கள் மற்றும் ஏமாற்று வேலைகளுக்காக பாம்பு அதாவது the serpentine என்ற பெயரும் இருந்திருக்கிறது. இதுவே பின்னாளில் அவர் பற்றிய புத்தகத்தின் பெயராகவும் வைக்கப்பட்டது.

Bikini killer: 20 பெண்கள் கொலை; பல நாடுகளில் தேடப்படும் குற்றவாளி - யார் இந்த கொடூரன்?
Mary Bell: பாலியல் தொழிலாளியின் மகள் சீரியல் கில்லரான கதை - ஒரு விறுவிறு வரலாறு

1976ல் கைது செய்யப்பட்டார்

இந்தியாவில் சோப்ராஜ் மூன்று பெண் கூட்டாளிகளுடன் இணைந்து பிரஞ்சு மாணவர்களுக்கு வழிகாட்டியாக சென்று அவர்களின் உணவில் நச்சு கலந்து கொடுத்திருக்கின்றனர்.

அவர்களிடம் இருந்து தப்பிய சில மாணவர்கள் காவல்துறைக்கு போன் செய்ததால் டெல்லியில் கைது செய்யப்பட்டார் சோப்ராஜ்.

அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்த காலத்தில் சோப்ராஜ் அவரது வழக்கில் இருந்து விடுபட வழிகள் இருக்கிறதா என தெரிந்துகொள்ள அடிக்கடி வழக்கறிஞர்களை சந்தித்து வந்திருக்கிறார்.

அவரை பேட்டி எடுக்க பத்திரிக்கையாளர்களும் வந்திருக்கின்றனர்.

மேலும் அவர் தனது புத்தகமான 'the serpentine' பற்றிய வேலைகளிலும் ஈடுபட்டு வந்தார்.

இவைத் தவிர அவரை காண பல பெண்கள் சிறைக்கு வந்துள்ளனர். அவரது பெரும்பாலான காதலிகள் வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கின்றனர்.

சிலர் அவரை திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும், அவர் அந்த பெண்களிடம் இனிமையாக நடந்துகொண்டதாகவும் அப்போது திகார் சிறை காப்பாளராக இருந்த ஜெ.பி.நைதானி கூறியிருக்கிறார்.

1986ம் ஆண்டு அவரது பிறந்த நாளில் சிறை காவலர்களுக்கு இனிப்புகளை வழங்கிவிட்டு திகார் சிறையில் இருந்து வெற்றிகரமாக தப்பி ஓடினார்.

அவரது சிறை தண்டனை முடியும் நேரத்தில் அவர் தப்பி ஓட வேண்டிய அவசியம் என்ன?

சார்லஸ் சோப்ராஜ் குறித்த பிபிசி கட்டுரை ஒன்று, "அவர் சரியாக 10 ஆண்டுகளில் தப்பு ஓடியதால் அவருக்கு கூடுதல் சிறை தண்டனை கிடைக்கும் என திட்டமிட்டு தான் அவ்வாறு செய்திருக்கிறார்" எனக் கூறியுள்ளது.

Bikini killer: 20 பெண்கள் கொலை; பல நாடுகளில் தேடப்படும் குற்றவாளி - யார் இந்த கொடூரன்?
10 ஆயிரம் பேரின் கொலைக்கு காரணமான 97 வயது பெண் - அதிர்ச்சி தகவல்

கோவாவில் அவர் மீண்டும் பிடிபட்ட போது அவருக்கு மேலும் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.

இதன் மூலம் அவர் தண்டனை முடிந்து தாய்லாந்து அனுப்பப்படுவதில் இருந்து தப்பித்தார்.

தாய்லாந்தில் அவர் மீது 5 கொலைக் குற்றங்கள் இருந்தது. இதனால் அவருக்கு மரண தண்டனை கூட கிடைத்திருக்கலாம்.

மொத்தமாக 20 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டு 1997ம் ஆண்டு அவர் வெளியான போது தாய்லாந்தில் அவர் வழக்கை விசாரிப்பதற்கான கெடு முடிந்திருந்தது.

இந்தியாவிலிருந்து அவர் மீண்டும் பிரான்சுக்கு திரும்பினார். அங்கிருந்து 2003ம் ஆண்டு நேபாளம் திரும்பினார்.

1975ம் ஆண்டு அவர் நேபாளத்தில் செய்த கொலைகளுக்காக அப்போது கைது செய்யப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.

திகார் சிறையில் இருந்த போது ஜெய்ஷ் இ-முகமத் அமைப்பின் தலைவர் மசூத் அசாருடன் இவர் நெருங்கி பழகியிருக்கிறார். அதன் விளைவாக தாலிபான்களுக்கு ஆயுதங்களை கடத்தும் பணியிலும் தொடர்பு வைத்திருக்கிறார்.

அவருக்கு அமெரிக்க உளவு அமைப்பான CIA உடனும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

நேபாளிலும் இவருக்கு Nihita Biswas என்ற மனைவி இருந்திருக்கிறார். Nihita இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 5ல் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bikini killer: 20 பெண்கள் கொலை; பல நாடுகளில் தேடப்படும் குற்றவாளி - யார் இந்த கொடூரன்?
போர், பெண்கள் : பழங்கால கிரீஸ் குறித்த அதிர வைக்கும் 30 உண்மைகள் - Wow Facts!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com