Facebook: 20 ஆண்டுகளுக்கு முந்தைய Profile-ஐ பகிர்ந்த மார்க்!

20 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒன்றை தொடங்கினேன். இந்த செயல்பாட்டில் அற்புதமான மனிதர்களைச் சந்தித்தேன், சிறப்பான விஷயங்களை உருவாக்கியுள்ளோம். இன்னும் இதைச் செய்கிறோம், மிகவும் சிறப்பானது இனிதான் வரவிருக்கிறது
Facebook: 20 ஆண்டுகளுக்கு முந்தைய Profile-ஐ பகிர்ந்த மார்க்!
Facebook: 20 ஆண்டுகளுக்கு முந்தைய Profile-ஐ பகிர்ந்த மார்க்!Twitter

20 ஆண்டுகளுக்கு முன்பு ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இணைந்து உருவாக்கிய வலைத்தளம் பேஸ்புக். இது பலகலைக்கழக மாணவர்களை மட்டும் இணைக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியவர்களில் ஒருவர் தான் மார்க் சக்கர்பெர்க்.

பேஸ்புக் விரைவாகவே உலக அளவில் மிகப் பெரிய வலைத்தளமாக வளர்ந்தது. இன்று உலகின் மிகப் பெரிய தொழிலதிபராக இருக்கிறார் மார்க். அவரது சொத்து மதிப்பு பில்கேட்ஸை விட அதிகம்!

பேஸ்புக் உருவாகி 20 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இருபதாவது ஆண்டை சமீபத்தில் கொண்டாடிய மார்க், தனது ஆரம்ப காலத்தை நினைவுபடுத்தும்விதமாக 2004ம் ஆண்டு இருந்த தனது பேஸ்புக் புரொஃபைலை பகிர்ந்துள்ளார்.

இது பேஸ்புக் பயனர்களுக்கு மிகவும் நாஸ்டாலஜியான உணர்வை வழங்கியது.

மார்க் பகிர்ந்த புரொஃபைலில் அவரது பெயர், பள்ளி, முகவரி, பிறந்தநாள் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருந்தன.

இன்ஸ்டாகிராமில் மார்க் ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார். அதில். "20 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒன்றை தொடங்கினேன். இந்த செயல்பாட்டில் அற்புதமான மனிதர்களைச் சந்தித்தேன், சிறப்பான விஷயங்களை உருவாக்கியுள்ளோம். இன்னும் இதைச் செய்கிறோம், மிகவும் சிறப்பானது இனிதான் வரவிருக்கிறது" என கேப்ஷனில் குறிப்பிட்டிருந்தார்.

Facebook: 20 ஆண்டுகளுக்கு முந்தைய Profile-ஐ பகிர்ந்த மார்க்!
நல்ல கறி சாப்பிடுவதற்காக பியர் ஊற்றி மாடு வளர்க்கும் மார்க் சக்கர்பெர்க்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com