நேற்று பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் புதிய பெய்ட் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை அறிவித்தார்.
அதன் படி கட்டணம் கட்டுவதன் மூலம் உங்கள் ப்ரோபைலுக்கான வெரிஃபிகேஷனைப் பெற முடியும்.
இதே கட்டண வெரிஃபிகேஷன் சேவைகளை ஏங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? ஆம் சில வாரங்களுக்கு முன்னர் தான் எலான் மஸ்க் இதே போல ட்விட்டரில் கட்டணம் செலுத்தி வெரிஃபிகேஷன் பெறும் முறையை அறிமுகப்படுத்தினார்.
ஆனால் ஒரு மாற்றம் என்னவெனில், ஏற்கெனவே வெரிஃபிகேஷன் பெற்றவர்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது என பேஸ்புக் அறிவித்துள்ளது.
இந்த திட்டம் முதல்கட்டமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கட்டணம் செலுத்தி அரசு அடையாள அட்டையுடன் வெரிஃபை செய்துகொள்பவர்களுக்கு ஆள்மாறாட்டம் விஷயங்களில் அதிக பாதுகாப்பு வழங்கப்படும். மற்றும் நேரடியாக வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகவும் முடியும்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், 'பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை' அதிகரிக்க முடியும் என மார்க் சக்கர்பெர்க் கூறியுள்ளார்.
இந்த மெட்டா வெரிஃபைடு சேவை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும். வணிக கணக்குகளுக்கு இது வழங்கப்படாது.
மேலும் இந்த சப்ஸ்கிரிப்ஷனைப் பெற இணையத்தில் 11.99 அமெரிக்க டாலருக்கும், ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டில் 14.99 டாலரும் மாதத்துக்கு செலுத்த வேண்டியது இருக்கும்.
ட்விட்டர் நிறுவனத்தைத் தொடர்ந்து மெட்டாவும் நிதிச் சிக்கலை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக நிறுவனத்தில் ஊழியர்களை பணிநிக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
மெட்டா நிறுவனத்தின் பங்குகளும் இந்த ஆண்டு வீழ்ச்சியை சந்தித்துள்ளன. நிறுவனத்தை மீட்க இந்த புதிய நடவடிக்கை உதவுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust