நான் தோற்றுவிட்டேனா? : வருந்திய மார்க் - என்ன காரணம் தெரியுமா?

தங்களது உருவாக்கம் குறித்து கேள்வி எழுப்பும் ஒரே தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர் மார்க் மட்டுமல்ல. மிகவும் ஆச்சரியமான ஐந்து தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்களின் கவலைகளை இங்கே பார்க்கலாம்.
Mark
Mark NewsSense
Published on

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், "இணைக்கப்பட்ட உலகத்திலிருந்து" மக்கள் எவ்வாறு வெளியேறுகிறார்கள் என்பது குறித்து பிபிசியிடம் பேசியுள்ளார். இந்த ஆண்டு ஃபேஸ்புக்கிற்கு கொஞ்சம் வருத்தமான ஆண்டுதான். ஏனெனில் அது உருவாக்கிய காலம் முதல் அதன் வளர்ச்சி குறைந்திருப்பது இந்த ஆண்டுதான்.

பிபிசி நேர்காணலில் ஃபேஸ்புக்கின் எதிர்காலம் குறித்த 5,500 வார்த்தைகள் கொண்ட கடிதத்துடன், உலகமயமாக்கலின் தோல்விகளையும் அவர் பரிசீலிக்கிறார்.

அதை வருத்தம் என்று அழைக்க முடியாது. ஆனால் ஃபேஸ்புக்கின் உரிமையாளர் நிச்சயமாக கலவையான உணர்வுகளுடன் திரும்பிப் பார்க்கிறார்.

தங்களது உருவாக்கம் குறித்து கேள்வி எழுப்பும் ஒரே தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர் மார்க் மட்டுமல்ல. மிகவும் ஆச்சரியமான ஐந்து தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்களின் கவலைகளை இங்கே பார்க்கலாம்.

இரட்டை சாய்வு கோடுகள்

சர் டிம் பெர்னர்ஸ் லீ, உலகளாவிய இணையத்தின் பின்னணியில் இருப்பவர். உலகளாவிய இணைய வலைப்பின்னலின் (World Wide Web) கண்டுபிடிப்பாளராக அறியப்பட்ட ஒரு ஆங்கில கணினி விஞ்ஞானி ஆவார். அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியராகவும், மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பேராசிரியராகவும் உள்ளார்.

2009 ஆம் ஆண்டில், அவருக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால் அவர் வித்தியாசமாக என்ன செய்வார் என்று கேட்கப்பட்டது.

இணையத்தைப் பற்றி நாம் மாற்ற விரும்பும் விஷயங்களை நாம் எப்போதும் அசைபோட்டு வருகிறோம். ஆனால் அவருடைய பதில் மிகவும் அலட்சியமாக அல்லது சின்ன விசயம் குறித்து மட்டும் இருந்தது.

இணைய முகவரிகளின் தொடக்கத்தில் "http:" க்குப் பிறகு "//" ஐ அகற்றுவதாக அவர் கூறினார். அவ்வளவுதான்.

ஆரம்ப நாட்களில் இணைய முகவரிகளுக்கான நிரலாக்கத்தில் இரட்டை சாய்வு கோடுகள் பொதுவானது. ஆனால் உண்மையில் அந்த சாய்வுக் கோடுகளால் எந்த பயனுமில்லை.

சர் டிம் வாதிடுகையில், அந்த இரட்டைக் கோடுகளை தவிர்த்திருந்தால் நாம் எண்ணற்ற மணிநேர உழைப்பையும், எண்ணற்ற மரங்களையும் காகிதம் தயாரிப்பதில் இருந்து காப்பாற்றியிருக்கலாம் என்கிறார். அதாவது கணினி நிரலாக்கம் மற்றும் பல அச்சு ஊடகங்கள், நூல்கள் என அச்சிடப்பட்ட அனைத்திலும் இடம்பெற்றிருக்கும் இணைய முகவரிகளில் இந்த சாய்வான இரட்டைக் கோடுகள் இடம்பெறுவதால் நேர மற்றும் பொருள் விரயம் என்று கூற வருகிறார்.

Mark
ஃபேஸ்புக் : ஒரே நாளில் பல்லாயிரம் கோடி இழப்பை சந்தித்தது ஏன்? - விரிவான தகவல்கள்


சிறகடிக்கும் பறவை வீடியோ கேம்

ஃபிளாப்பி பேர்ட் Flappy Birdஎன்பது வியட்நாமிய வீடியோ கேம் கலைஞரும், மென்பொருளாளருமான டோங் நுயென் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு மொபைல் கேம் ஆகும். இந்த விளையாட்டில் விளையாடுபவர் ஒரு பறவையைக் கட்டுப்படுத்துகிறார். பச்சைக் குழாய்களின் நெடுவரிசைகளுக்கு இடையில் அவற்றைத் தாக்காமல் பறக்க முயற்சிக்கிறார்.

பொதுவில் குறுகிய கால மொபைல் கேம் ஆர்வம் குறைந்து போக, Flappy Bird மட்டும் கொஞ்சம் கவனம் பெற்றது.

நீங்கள் அதை ஒருபோதும் விளையாடவில்லை என்றால் என்ன காரணமாக இருக்க முடியும்? மோசமான அனிமேஷன் செய்யப்பட்ட சில குழாய்கள் மூலம் ஒரு மோசமான அனிமேஷன் செய்யப்பட்ட பறவையை வழிநடத்த வேண்டும் என்ற விருப்பம் இல்லாததுதான்.

மிகவும் எளிமையான, ஆனால் மிகவும் வெறுப்பூட்டும் இந்த வீடியோ கேம் செயலி 50 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டது.

2013 இல் அதன் பிரபலத்தின் உச்சத்தில், அதன் வியட்நாமிய படைப்பாளி டாங் நுயென் ஒரு நாளைக்கு 50,000 டாலர் விளம்பரம் மூலம் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் இந்த விளையாட்டு அவர்களின் வாழ்க்கையை நாசமாக்குகிறது என்று அவருக்கு எழுதும் நபர்களின் எண்ணிக்கையை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை.

பாப்-அப் விளம்பரங்கள்

ஒருவேளை இந்தப் பிரச்சனை உங்களுக்கு குறைவான ஆச்சரியமாக இருக்கலாம். 2014 இல், ஈதன் ஜுக்கர்மேன் என்ற நபர், இணையத்தின் அசல் பாவம் என்ற கட்டுரையை எழுதினார்.

அதில் அவர் 1990 களில் இணையத்தில் "[புதிய] சாளரத்தைத் தொடங்குவதற்கும் அதில் ஒரு விளம்பரத்தை இயக்குவதற்கும் குறியீட்டை எழுதியதாக" விளக்கினார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால் - அவர் பாப்-அப் விளம்பங்களுக்கான அடிப்படையைக் கண்டுபிடித்தார்.

"மன்னிக்கவும். பாப் அப் விண்டோக்களை உருவாக்கும் போது எங்கள் நோக்கம் நல்லதாக இருந்தது," என்று அவர் தொடர்கிறார். ஆனால் தற்போது பாப் அப் விளம்பரங்கள் இல்லாத இணைய தளங்கள் இல்லை. பார்வையாளர்களின் மவுசை அல்லது விசைப்பலகையை இயக்கும் விரல்களை பதம் பார்க்கும் இந்த பாப் அப் விளம்பரங்களை மக்கள் அதிகம் வெறுக்கிறார்கள்.

Mark
உலக Emoji தினம் : நீங்கள் பயன்படுத்தும் எமோஜி எப்படி உருவானது தெரியுமா?

எமோஜிகள் - இணைய உணர்ச்சிக் குறிப்பான்கள்

பேராசிரியர் ஸ்காட் ஃபால்மேனை ஈமோஜியின் மிகச் சிறந்த முன்னோடி என்று அழைக்கலாம். அவரை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

19 செப்டம்பர் 1982 அன்று காலை 11:44 மணிக்கு, அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் போது, ​​அவர் இந்த மின்னஞ்சலை அனுப்பினார்:

"ஜோக் மார்க்கர்களுக்கு - நகைச்சுவை குறிப்பான்களுக்கு பின்வரும் எழுத்து வரிசையை நான் முன்மொழிகிறேன்: :-) பக்கவாட்டில் படிக்கவும்."

இது ஸ்மைலியின் முதல் அறியப்பட்ட பயன்பாடாகும். மேலும் இது தீவிரமான மற்றும் காமடியான அல்லது முட்டாள்தனமான செய்திகளை வேறுபடுத்துவதை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் பேராசிரியர் ஃபஹ்லாம் அவரது கண்டுபிடிப்பு பின்னர் சிறிய மஞ்சள் முகங்களாக மாறியதைப் பொறுத்தவரை அவர் அதை ரசிக்கவில்லை.

"நிலையான விசைப்பலகை எழுத்துக்களைப் பயன்படுத்தி உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஒரு புத்திசாலித்தனமான வழியைக் கொண்டு வர முயற்சிக்கும் சவாலை அவை அழிக்கின்றன," என்று வருத்தப்படுகிறார்.

காமிக் சான்ஸ் எழுத்துரு

சில ஆண்டுகளுக்கு பிறகு, காமிக் சான்ஸ் என்ற எழுத்துருவைத் தடை செய்ய உலக அளவில் ஒரு இயக்கம் இருந்தது என்பது கிட்டத்தட்ட நம்ப முடியாததாகத் தெரிகிறது.

2010 இல் மக்கள் இந்த எழுத்துருவை தடை செய்வதற்கு நேரத்தை செலவழித்தார்கள். ஏன் தங்கள் நேரத்தை இப்படி ஒன்றுமில்லாத விஷயத்திற்காக செலவழித்தார்கள் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

இருப்பினும், "உலகின் மிகவும் வெறுக்கப்படும் எழுத்துருவை" கண்டுபிடித்தவர், அவர் உருவாக்கியதில் தனக்கும் அதிருப்தி இருப்பதாக ஒப்புக் கொண்டார்.

வின்சென்ட் கானரே 1990 களின் முற்பகுதியில் மைக்ரோசாப்ட் பாப் என்ற குறுகிய கால கணினி நாயை மிகவும் உற்சாகத்துடன் கொண்டு வந்தார். ஆச்சரியப்படத்தக்க வகையில், கணினி உதவிக் குறிப்புகளை வழங்கும் நாய் என்ற கருத்து விரைவில் மரணமடைந்தது.

இருப்பினும், அந்த நாயுடன் வந்த காமிக் சான்ஸ் எழுத்துரு மட்டும் இன்றுவரை வெறுக்கத்தக்க வகையில் வாழ்ந்து வருகிறது.

Mark
Internet Explorer வரிசையில் காணாமல் போன 5 முக்கிய தளங்களை தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com