அமேசான் : 6,400கி.மீ ஓடும் நதி; ஒரு பாலம் கூட கட்டப்படாதது ஏன்? - ஆச்சரிய உண்மைகள்!

இந்த நதியை நம்பியிருக்கும் மில்லியன் கணக்கான மக்கள், படகு மூலம் மட்டுமே இந்த ஆற்றைக் கடந்து செல்கின்றனர்.
Facts about the amazon river
Facts about the amazon river Twitter
Published on

உலகின் நீளமான நதி பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால், இதுவரை நீங்கள் அறியாத தகவல்கள் பல இன்னமும் உள்ளன.

அமேசான் நதியைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில அற்புதமான உண்மைகள் இங்கே உள்ளன.

பெரிய நதியான அமேசானில் ஏன் எந்த பாலமும் கட்டப்படவில்லை?

அமேசான் நதி என்பது மூன்று வெவ்வேறு நாடுகளில் பாய்கிறது. அதாவது பிரேசில், பெரு, கொலம்பியா ஆகிய மூன்று நாடுகளில் இந்த நதி பாய்கிறது.

இந்த நதியை நம்பியிருக்கும் மில்லியன் கணக்கான மக்கள், படகு மூலம் மட்டுமே இந்த ஆற்றைக் கடந்து செல்கின்றனர். அதேசமயம் உள்கட்டமைப்பு இல்லாததால் இப்பகுதி அதன் இயற்கையான கவர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்கிறது.

பாலங்கள் இல்லாததற்கு அமேசான் ஆற்றுப்படுகையின் பருவகால மாற்றங்கள் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அமேசான் நதியின் இருபக்கமும் அடர்ந்த மழைக்காடுகளே இருக்கின்றன. எந்த நகரத்தையும், சாலையையும் இருபுறமும் இணைக்க வேண்டியது இல்லை என்பதால் அங்கு எந்த பாலமும் கட்டப்படவில்லை.

உள்ளூர் மக்கள் ஒரு கரையிலிருந்து மற்றொன்றுக்கு பயணிக்க விரும்பினால் படகுகளையே பயன்படுத்துகின்றனர்.

நீரின் அளவு மூலம் உலகின் மிகப்பெரிய நதிஅமேசான்

அமேசான் மற்றும் நைல் இடையே நீண்ட காலமாக உலகின் மிக நீளமான நதி தொடர்பான விவாதங்கள் உள்ளன. நீரின் அளவு மூலம் உலகின் மிகப்பெரிய நதி அமேசான் என்று கூறப்படுகிறது.

209,000 m3/s சராசரி வெளியேற்ற அளவைக் கொண்ட உலகின் மிகப்பெரிய நதியாகும். அமேசான் ஆற்றின் இந்த பரந்த நன்னீர் வெளியேற்றம் நேராக அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் செல்கிறது, இது சுமார் 2500000 கிமீ² பரப்பளவில் கடலின் உப்புத்தன்மையைக் குறைக்க உதவுகிறது

Facts about the amazon river
'இரவில் ஒளிரும் காடு' - மேற்கு தொடர்ச்சி மலையின் அதிசயக் காடு - அறிவியல் சொல்வது என்ன?

உலகின் இரண்டாவது நீளமான நதி

நைல் நதி 6695 கிமீ நீளம் கொண்ட உலகின் மிக நீளமான நதி என்ற பட்டத்தை பெறுகிறது. அமேசான் 6400 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.

புகழ்பெற்ற ஆய்வாளர்கள் தலைமையில் பல பயணங்கள் மேற்கொண்டு அதன் மொத்த நீளம் நைல் நதியின் நீளத்தை விட அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தனர்.

இருப்பினும், நைல் நதியை விட அமேசான் நதியின் தூரம் குறைவாக இருப்பதாகக் கூறி பல விவாதங்களை முன்வைக்கின்றனர் ஆய்வாளர்கள்.

பல நாடுகளைக் கடக்கிறது

அமேசான் நதி கொலம்பியா, பிரேசில், வெனிசுலா மற்றும் பெரு வழியாக செல்கிறது, பிரேசில் மிகப்பெரிய பகுதியைக் கொண்டுள்ளது. அமேசான் நதியின் நீர்நிலைகள் இன்னும் பல நாடுகளில் இருந்து நன்னீர் பெறுகிறது.

Facts about the amazon river
வறண்ட நதி, வெளியே தெரிந்த 3000 ஆண்டு பழமையான நகரம் - ஓர் ஆச்சர்ய வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com