வெடிக்கும் எரிமலை : 4000 நிலநடுக்கங்களை எதிர்கொண்ட அச்சத்தில் ஐஸ்லாந்து - அச்சத்தில் உலகம்

ஐஸ்லாந்து நாட்டில் ரேக்ஜேன்ஸ் தீபகற்பத்தில் (Reykjanes Peninsula) தான் கடந்த 24 மணி நேரத்துக்குள் இத்தனை அதிக எண்ணிக்கையில் பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. இப்போதும் தொடர்ந்து நில நடுக்கங்கள் ஐஸ்லாந்தில் பதிவாகி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
Volcanic Eruption
Volcanic EruptionPexels
Published on

ஒரு நாட்டில் ஒரு நில நடுக்கம் வந்தால் நமது சப்த நாடியும் அடங்கிவிடும். ஆனால் இங்கு ஒரு நாட்டில் 4,000 பூகம்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த நில நடுக்கம் வெறுமனே வந்து போகக் கூடியது அல்ல. இந்த நாட்டில் பூகம்பம் வந்தால் கிட்டத்தட்ட பூமியின் வட அரை கோளத்தில் இருக்கும் அனைத்து வல்லரசு நாடுகளும் பயப்படும் அளவுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தக் கூடியது.

சரி எந்த நாட்டில் இத்தனை அதிக பூகம்பங்கள் வந்தன...? இந்த பூகம்பத்துக்கு புவியின் வட அரைகோளமே அஞ்சி நடுங்குவது ஏன்?

ஐஸ்லாந்து நாட்டில் ரேக்ஜேன்ஸ் தீபகற்பத்தில் (Reykjanes Peninsula) தான் கடந்த 24 மணி நேரத்துக்குள் இத்தனை அதிக எண்ணிக்கையில் பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. இப்போதும் தொடர்ந்து நில நடுக்கங்கள் ஐஸ்லாந்தில் பதிவாகி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நில நடுக்கங்கள் பூமிக்கு அடியில் இருக்கும் மாக்மா எரிமலைக் குழம்பு நகர்வால் ஏற்பட்டிருக்கலாம் என சிவியர் வெதர் என்கிற ஐரோப்பாவைச் சேர்ந்த வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டு வருவதால், அப்பகுதியில் எரிமலை வெடிப்பு ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட அட்லாண்டிக் கண்டத்தில் இருக்கும் ஐஸ்லாந்து ஒரு எரிமலை பூமி . உலகிலேயே செயல்பாட்டில் இருக்கும் செறிவான எரிமலை பூமிகளில் ஐஸ்லாந்தும் ஒன்று. வரலாற்று ரீதியில் பார்க்கும் போது ஐஸ்லாந்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகள் ஐரோப்பியக் கண்டம், வட அமெரிக்கா உட்பட ஒட்டுமொத்த பூமியின் வட அரைகோளத்தில் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

Volcanic Eruption
கடலுக்கு அடியில் வெடிக்கும் எரிமலை; அதிலும் உயிர் வாழும் சுறாக்கள் - என்ன நடக்கிறது?

ஐஸ்லாந்து நாடு அமைந்திருக்கும் இடமும் பூகோள ரீதியில் அத்தனை சுமுகமான இடமில்லை. அத்தீவு யூரேசியா மற்றும் வட அமெரிக்கக் கண்ட தகடுகள் மீது அமர்ந்திருப்பதால் தான் அடிக்கடி நில நடுக்கத்தையும் எதிர்கொண்டு வருகிறது.

மிட் அட்லாண்டிக் ரிட்ஜ் (Mid-Atlantic Ridge) என்று அறிவியலாளர்கள் மற்றும் பூகோளவியலாளர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது ஐஸ்லாந்தை குறுக்குவெடடாக கடந்து செல்கிறது. ரேக்ஜேன்ஸ் தீபகற்பத்தின் தென்மேற்குப் பகுதி வழியாக நுழைந்து, கிழக்கு மற்றும் வடக்கு வழியாக வெளியேறுகிறது. மிட் அட்லாண்டிக் ரிட்ஜ் கடக்கும் இடங்களில் எல்லாம் பல மைய எரிமலைகள் அமைந்திருக்கின்றன.

எனவே தான் அதிக எண்ணிக்கையில் நிலநடுக்கங்களும், நிலநடுக்கங்களின் போது, எரிமலையும் வெடிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

இதே ஐஸ்லாந்தில் கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபக்ராடல்ஃஜல் (Fagradalsfjall) எரிமலை வெடித்து சுமார் ஆறு மாதங்களுக்கு மாக்மா குழம்பைக் கக்கிக் கொண்டிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

கடந்த 2014 - 15 காலகட்டத்தில் பாரோர்புங்கா (Bárðarbunga) என்கிற எரிமலை வெடித்தது. ஐஸ்லாந்து வரலாற்றில் இது கிட்டத்தட்ட கடந்த 200 ஆண்டுகளில் காணப்படாத மிகப்பெரிய வெடிப்பாக பதிவானதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்போது தான் கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து உலகம் மீண்டு கொண்டிருக்கிறது. அதற்குள் எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைப் பேரிடர்கள் மனிதர்களைத் தாக்கினால்... அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளைச் சொல்லில் அடக்க முடியாது

Volcanic Eruption
விண்வெளியில் ஏற்பட்ட பூகம்பம் - என்ன நடக்கிறது? மனிதகுலத்திற்கு ஆபத்தா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com