Feeling adventurous? These 5 floating bridges ought to give you an experience of a lifetime
Feeling adventurous? These 5 floating bridges ought to give you an experience of a lifetimeTwitter

சாகச விரும்பிகளா நீங்கள்? உலகின் டாப் மிதக்கும் பாலங்கள் லிஸ்ட் இதோ - எங்கே இருக்கிறது?

ஒரு பெரிய நீர்நிலைக்கு மத்தியில் பாலங்கள் கட்டப்பட்டிருக்கும், அந்த மிதக்கும் பாலங்கள் போன்டூன் பாலங்கள் (floating bridge) என்று அழைக்கப்படுகின்றன. அவை போர்க்காலங்களில் பயன்படுத்தப்பட்டன.
Published on

நீர்நிலைகளுக்கு நடுவே மிதக்கும் சாலையில் வாகனம் ஓட்டினால் எப்படி இருக்கும்? பயமாக இருந்தாலும் அட்வெஞ்சராக இருக்கும் இல்லையா? அப்படி உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட கவர்ச்சிகரமான சில மிதக்கும் பாலங்கள் இருக்கின்றன.

ஒரு பெரிய நீர்நிலைக்கு மத்தியில் பாலங்கள் கட்டப்பட்டிருக்கும், அந்த மிதக்கும் பாலங்கள் போன்டூன் பாலங்கள் (floating bridge) என்று அழைக்கப்படுகின்றன. அவை போர்க்காலங்களில் பயன்படுத்தப்பட்டன.

உலகில் பல மிதக்கும் பாலங்கள் உள்ளன. நிச்சயம் பார்க்க வேண்டிய ஐந்து மிதக்கும் பாலங்கள் குறித்து இங்கு தொகுத்துள்ளோம்.

ஷிசிகுவான் மிதக்கும் பாலம்

ஷிசிகுவான் மிதக்கும் பாலம், சீனாவின் தென்மேற்கு ஹூபே மாகாணத்தில் உள்ள சுவான் கவுண்டியில் அமைந்துள்ளது. இது உலகின் மிகவும் பிரபலமான மிதக்கும் பாலங்களில் ஒன்றாகும். பசுமையான மரங்கள் மற்றும் நதியால் சூழப்பட்ட இந்த பாலம் நிச்சயம் பிரம்மிக்க வைக்க தவறாது. இந்த பாலத்தில் இருக்கும் மரத்தாலான பலகை, நீர் மேற்பரப்பில் நகர்வது போன்ற அற்புதமான அனுபவத்தை பயணிகளுக்கு வழங்குகிறது.

நார்ட்ஹார்ட்லேண்ட் பாலம்

நார்வேயின் வெஸ்ட்லேண்ட் கவுண்டியில் உள்ள கிளாவனசெட் மற்றும் பிளாட்டே தீவு இடையே சல்ஹுஸ்ஃப்ஜோர்ட என்ற நீர்நிலை உள்ளது.

அதை கடக்க நார்ட்ஹார்ட்லேண்ட்(Nordhordland ) பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 5,295 அடி நீளம் கொண்ட, இந்த மிதக்கும் பாலம் நார்வே நாட்டு கடல்சார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.

ஹோமர் எம். ஹாட்லி மெமோரியல் பாலம்

மூன்றாவது ஏரி வாஷிங்டன் பாலம் என்றும் அழைக்கப்படும் ஹோமர் எம். ஹாட்லி மெமோரியல் பாலம், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சியாட்டில் பெருநகரப் பகுதியில் உள்ளது. இது உலகின் ஐந்தாவது நீளமான மிதக்கும் பாலமாகும். இது 5,811 அடி நீளம் கொண்டது. தற்போதைய பாலம் 1993 இல் கட்டப்பட்டது.

வில்லியம் ஆர். பென்னட் பாலம், பிரிட்டிஷ் கொலம்பியா

வில்லியம் ஆர். பென்னட் பாலம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் உட்புறத்தில் உள்ள ஒகனகன் ஏரியின் குறுக்கே அமைந்துள்ளது. மொத்தம் 1,060 மீட்டர் நீளம் கொண்ட இந்த மிதக்கும் பாலம் காற்றின் வேகத்திற்கு ஏற்ப வளைந்துகொடுக்குமாம்.

Feeling adventurous? These 5 floating bridges ought to give you an experience of a lifetime
Sky Bridge : 3,000 அடி உயரத்தில் உலகின் நீளமான தொங்கும் பாலம் - கட்டணம் 1,100 ரூபாய் தானா?

கோழிக்கோடு பேப்பூர் மெரினா கடற்கரை மிதக்கும் பாலம்

கேரளாவில் கடந்த ஆண்டுதான் மாநிலத்தின் முதல் மிதக்கும் பாலம் கட்டப்பட்டது. 100 மீட்டர் நீளமும் 3 மீட்டர் அகலமும் கொண்ட மிதக்கும் பாலத்தில் அலைகளுக்கு மேல் மிதக்க விடப்பட்டுள்ளது. அலைகளுக்கு நடுவே நடக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவமாக இது இருக்கும்.

Feeling adventurous? These 5 floating bridges ought to give you an experience of a lifetime
Travel: வேர் பாலம் முதல் மாஸ்மாய் குகைகள் வரை - Cherrapunji யில் மிஸ் செய்யகூடாத இடங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com