உலகின் மிகவும் நீளமான தொங்கும் நடை பாலம் செக் குடியரசு நாட்டின் மவுன் டெய்ன்ரிசார்ட் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,100 மீட்டர், அதாவது, 3 ஆயிரத்து 610 அடி உயரத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த பாலத்தினை ஸ்கை பிரிட்ஜ் என அழைக்கின்றனர்.
இந்த பாலத்தில் ஒரே நேரத்தில் 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த பகுதியில் காற்றின் வேகம் 135 கி.மீ வேகத்தை தாண்டும் போது பாதுகாப்பு காரணங்களுக்காக பாலம் மூடப்பட்டு பின்பு காற்றின் வேகம் குறைந்த பிறகு பாலம் திறக்கப்படும்.
இந்த ஸ்கை பிரிட்ஜை இரண்டு ஆண்டுகளில் செக் குடியரசுகட்டி முடித்துள்ளது. இதற்கான செலவு 8.3 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது. இந்த பாலத்திற்கான நுழைவு கட்டணம் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ 1,100 ஆகும்
இந்த பாலத்திற்கு முன்பு நேபாள நாட்டின் கண்டகி நதியில் உள்ள 567 மீட்டர் தொங்கும் பாலமே மிக நீளமான தொங்கும் பாலமாக கூறப்பட்டது, தற்போது அதன் சாதனையினை செக் குடியரசு நாட்டின் ஸ்கை பிரிட்ஜ் முறியடித்துள்ளது.
இந்த பாலம் மூலம் அந்நாட்டின் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் உயரத்தை கண்டு பயப்படுபவர்கள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.
இந்த பாலம் போலாந்து நாட்டின் எல்லைக்கு அருகே உள்ளதால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளும் இந்த பாலத்தை காண வருவதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust