காட்டுத்தீ முன்பு வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கிய மாடல் அழகி - என்ன நடந்தது.?

உண்மையை அறியாமல் என் மீது விமர்சனம் செய்கின்றார்கள் சிலர், அந்த தீயை நான் வைக்கவில்லை என்று விளக்க அளித்துள்ளார்.
Humaira Asghar
Humaira AsgharTwitter
Published on

பாகிஸ்தானின் மாடல் அழகியாக வலம் வரும் ஹுமைரா அஸ்கர் (Humaira Asghar) சமூகவலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர்.

தனது சமூக வலைத்தள பக்கத்தில் பல வீடியோக்களை பதிவிட்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய ஹூமைரா அஸ்கரா, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.

அதாவது பற்றி எரியும் காடுகளுக்கு முன்னாள் ஸ்டைலாக நடந்து வருவது போல வீடியோ ஒன்றை எடுத்து டிக் டாக்கில் பதிவிட்டார். அதோடு ‘’ நான் எங்க இருந்தாலும் அங்க தீ பற்றிக் கொள்ளும் ‘’ என்ற வரிகளோடு பதிவிட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்த வீடியோவினை பார்த்த சுற்றுசூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர். மேலும் தற்போது பாகிஸ்தானில்கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில் ஹூமைரா அஸ்கரா-ன் வீடியோ பாகிஸ்தான் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.

இதனால்,கடும் விமர்சனத்தை சந்தித்த காரணத்தால் இந்த சம்பவத்திற்கு விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Humaira Asghar
பாகிஸ்தான் முதல் ஜெர்மனி வரை - எந்த நாடுகளில் வேலை நேரம் குறைவு தெரியுமா?

அதில், உண்மையை அறியாமல் என் மீது விமர்சனம் செய்கின்றார்கள் சிலர், அந்த தீயை நான் வைக்கவில்லை என்று விளக்க அளித்துள்ளார்.

அதாவது தாங்கள் வசிக்கும் பகுதியில் பெரிய விஷபாம்புகள் உள்ளதாகவும் அவற்றை விரட்டவே சிலர் புதர்களுக்கு தீ வைத்தாக விளக்கமளித்தார்.

மேலும், இங்கு உள்ள பாம்புகளால் தங்கள் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை வருவதாகவும் அதனால் தான் பாம்புகளை விரட்ட புதர்களுக்கு தீ வைப்பது வழக்கம் என்றும் கூறியுள்ளார்.

இந்த வீடியோவுக்கு பின்னால் உள்ள தீயினை தான் உருவாக்கவில்லை என்பதை விளக்கியுள்ளார் பாகிஸ்தான் மாடல் ஹூமைரா அஸ்கரா.

Humaira Asghar
பாகிஸ்தான் வீட்டில் தரை இறங்கிய ஹெலிகாப்டர் - என்ன நடந்தது? பரபர நிமிடங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com