நம் வீடுகளில் எதிர்பாராத விதமாக பாம்புகள் போன்ற உயிரினங்கள் வருவது சகஜம். அதன் மேல் நமக்கு பயமிருந்தாலும், அவற்றை பத்திரமாக வீட்டிலிருந்து வெளியேற்றுவோம். சிறிய பிராணிகள் வருகிறதென்றால் சிக்கலில்லை தான்.
ஆனால் சமயத்தில் வீட்டிற்குள் முதலை, ராட்சத பல்லி, சிங்கம் கூட வந்திருக்கிறது சில நாடுகளில். இது ஒரு புறம் இருக்க, வீட்டின் கழிவறைக்குள்ளும் ஆபத்தான விலங்குகள் வருகின்றன.
ஃபுளோரிடா மாகாணத்தில் புரூஸ் ப்லேயர் என்ற நபர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் கழிவறையில் தான் இகுவானா ஒன்று இருந்துள்ளது. அதுவும், இப்படி அவர் கழிவறையின் இருக்கையில் இகுவானாவைப் பார்ப்பது மூன்றாவது முறை.
முதல் முறை வந்தபோது, அது நகைச்சுவையாகப் பார்க்கப்பட்டதென்றும், இரண்டாம் முறை யோசிக்கவேண்டிய விஷயமாக மாறியதென்றும் கூறினார், அந்த இகுவானாவை மீட்க வந்த நபர். தற்போது மூன்றாவது முறையாக, அதுவும், ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக இந்த விலங்கு தென்படுவது சற்று அதிர்ச்சிகரமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
வீட்டினுள் நுழைய எந்த வழிகளும் இல்லை என்ற போதிலும், இந்த இகுவானா எப்படி கழிவறையில் நுழைகிறது என்பதும் புதிராகவே இருக்கிறது. இவர்களது கவனத்தில் சிக்காமல், கழிவு நீர் வெளியேற்றம் ஏதாவது இருக்கிறதா என்று ஆராய்ந்து வருகின்றனர் மீட்புக்குழுவைச் சேர்ந்தவர்கள்.
இதுவரை அப்படி எதுவும் தென்படவில்லை என்றும், யாருக்கேனும் ஆபத்து ஏற்படும் முன், கண்டறிந்து இதற்கான தீர்வைக் காணவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இவர்களது கவலை இதுவாக இருக்க, அந்த கழிவறையைப் பயன்படுத்த புரூஸுக்கு தயக்கம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. "அவை மீண்டும் எப்போது வரும் என்று யாருக்கு தெரியும்?" என்கிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust