வீட்டில் புகுந்த எட்டுக்கால் பூச்சி - வெளியேற்ற காவலர்களை அழைத்த பெண்

மேற்கு யார்க்சையர் பகுதியில் ஒரு பெண், காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து தனது வீட்டில் ஒரு ராட்சத ஸ்பைடர் இருப்பதாகவும், அதை வெளியேற்றிட காவலர்களின் உதவி வேண்டும் என்று ஒரு வினோத கோரிக்கையை வைத்துள்ளார்.
Spider
SpiderPexels
Published on

நாம் எந்த விஷயத்துக்காகக் காவலர்களை அழைப்போம்? வீட்டில் திருடர்கள் வந்துவிட்டால். அல்லது ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால்.

ஆனால் இங்கு ஒரு பெண், ஹாலிவுட் படங்களில் வருவது போல தனது வீட்டில் ஒரு ராட்சத ஸ்பைடர் இருப்பதாகக் கூறி அதை அகற்றக் காவலர்களின் உதவியை நாடியுள்ளார். அந்த பெண் கூறுவதை வைத்துப்பார்த்தால், அனைத்து முயற்சிகளை மேற்கொண்ட பின்பும் அந்த எட்டுக்கால் பூச்சியை வீட்டை விட்டு வெளியேற்ற முடியவில்லை என்பது போல தான் தோன்றும்.

மேற்கு யார்க்சையர் பகுதி காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த பெண் கூறியதாவது;

"நான் சொல்வதை கேட்டால் நீங்கள் என்மீது கோவப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் நான் எல்லா முயற்சி செய்த பின் தான் உங்களிடம் வந்துள்ளேன். நீங்கள் தான் என் கடைசி நம்பிக்கை. யாராவது வந்து என் வீட்டில் இருக்கும் பெரிய ஸ்பைடரை வெளியேற்ற வேண்டும்" என்றார்.


மேலும், "அது ரொம்ப பெரிதாக இருக்கிறது. நான் மிகைப்படுத்தி கூறவில்லை" என்றார்.

அந்த பெண் பேசிய ஆடியோவை டிவிட்டரில் பகிர்ந்திருந்தது யார்க்சையர் காவல் துறை.

அதில் இது போன்ற விஷயங்களுக்கு எங்களை அழைக்காதீர்கள், மாறாக இதுபோன்ற நிறைய கால்கள் எங்களுக்கு வரும் என்றனர்.

உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை எனும் பட்சத்தில் அந்த அழைப்புகளை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு சிலர், அந்த பெண்ணின் வீட்டிற்கு காவலர்கள் சென்று அந்த எட்டுக்கால் பூச்சியை அகற்றியிருக்கவேண்டும். அகற்றிய பிறகு அவருக்கு அபராதம் விதித்திருக்கவேண்டும் என்று கூறினர்.


ஆனால், இப்போது அந்த எட்டுக்கால் பூச்சியை அந்த பெண் வீட்டிலிருந்து அகற்றினாரா இல்லையா என்பது தெரியவில்லை.

Spider
மதில் மேல் ஏறும் போது மதி மறந்த பூனை - இணையத்தில் வைரலாகும் நகைச்சுவை வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com