அமெரிக்கா - ரஷ்யா அணு ஆயுத போர் நடந்தால் எத்தனை பேர் உயிரிழப்பர்? : அதிர வைக்கும் தகவல்

இதுவரை நடந்த 6 அணுசக்தி போர்களின் விளைவுகளை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு நடைபெற்றது. ஆய்வு முடிவுகள் Nature Food என்ற இதழில் வெளியாகின.
Nuclear Bomb
Nuclear BombTwitter

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் சமரசமின்றி போரிட்டு வருவதனால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை போர் நடைபெறுகிறது.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் உதவி வருகின்றன. ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பது மற்றும் உக்ரைனுக்கு உதவுவது போன்ற விஷயங்களை அமெரிக்கா செய்கிறது.

இந்த போரை முன்னிட்டே அணு ஆயுத போர் குறித்த ஆய்வும் நடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் இந்த ஆய்வை நடத்தியிருக்கின்றனர்.

இதுவரை நடந்த 6 அணுசக்தி போர்களின் விளைவுகளை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு நடைபெற்றது. ஆய்வு முடிவுகள் Nature Food என்ற இதழில் வெளியாகின.

ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முழுமையாக ஒரு அணு ஆயுதப் போர் நடந்தால் அது உலக மக்கள் தொகையில் பாதியை அழித்துவிடும் என ஆய்வு கூறியிருக்கிறது. சுமார் 500 கோடி மக்கள் இதனால் கொல்லப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Nuclear Bomb
Nuclear BombTwitter

மேலும், இந்த போர் உலகளாவிய பஞ்சத்தை ஏற்படுத்தும். உலகளாவிய உணவு உற்பத்தியில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் உள்ளூர் மயமாக்கப்பட்ட போர் நடந்தால் கூட உணவு உற்பத்தி 7% குறையும். அமெரிக்கா - ரஷ்யா இடையே போர் நடந்தால் 3 முதல் 4 ஆண்டுகளில் உணவு உற்பத்தி 90% குறையும்.

கால நிலை மாற்றத்தில் பேரழிவு ஏற்படுத்தும் விளைவுகளுக்கு இந்த போர் காரணமாக இருக்கலாம். அதிக வெப்பத்தினால் ஓசோன் படலம் அழிந்துவிடும்.

Nuclear Bomb
ரஷ்யா - உக்ரைன் போர் : இப்போது நடப்பது என்ன? அமெரிக்க ஆயுதங்கள் நிலை என்ன? Latest Report
Putin
PutinNewsSense

இந்த ஆய்வின் ஆசிரியரும் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக பேராசியருமான ஆலன் ரோபோக், "உலகில் அணுசக்தி போர் நடைபெறாமல் நாம் தடுக்க வேண்டும். அதைத்தான் ஆய்வுமுடிவுகள் நமக்கு தெரிவிக்கின்றன." என்று கூறினார்.

இரண்டாம் உலகப்போர் முடிவில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டின் தாக்கம் இன்னும் நீடிக்கிறது.

தற்போது, உக்ரைன் அணுஉலை அருகே ரஷ்ய ஏவுகனைத் தாக்குதல் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Nuclear Bomb
உக்ரைன் ரஷ்யா போர்: இறுதியில் ரஷ்யா வீழ வாய்ப்பு இருக்கிறதா? - அமெரிக்கா கூறுவது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com