உக்ரைன் ரஷ்யா போர்: இறுதியில் ரஷ்யா வீழ வாய்ப்பு இருக்கிறதா? - அமெரிக்கா கூறுவது என்ன?

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா ஒரு சிறு வெற்றியை மட்டுமே கண்டிருக்கிறது, அதோடு ரஷ்யாவின் ஆயுத பலம் தீரும் தருவாயில் இருக்கிறது. எங்கள் மதிப்பீட்டின் படி அடுத்த சில வாரங்களுக்குள், ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்த போதுமான ஆயுதங்கள் மற்றும் ஆட்களின்றி தடுமாறும்.
russia - ukraine war
russia - ukraine warNewsSense
Published on

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு மத்தியிலான போர் கடந்த 2022 பிப்ரவரி முதல் தீவிரமடைந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான போர் எப்படி முடிவுக்கு வரும், யார் போரில் வெற்றி பெறுவார் என்கிற பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் உலகமே திணறிக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட நேரத்தில், பிரிட்டன் நாட்டின் எம் ஐ 6 உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் ரிச்சர்ட் மோர் ஒரு புதிய கருத்தைக் கூறி, சர்வதேச அரசாங்கங்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கிறார்.

ரஷ்யாவின் குறிக்கோள்

உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யாவால் தொடர்ந்து இந்த ராணுவ பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது. ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு ஏற்படலாம் எனக் கூறியுள்ளார்.

உக்ரைனின் அதிபர் வொலொடிமைர் செலென்ஸ்கியை (Volodymyr Zelenskyy) பதவியிலிருந்து நீக்குவது, கைவ் நகரத்தைக் கைப்பற்றுவது, மேற்கில் ஒரு ஒற்றுமையின்மையை விதைப்பது போன்றவை ரஷ்யாவின் குறிக்கோள்களாக இருந்தது.

விளாதிமிர் புதின் தலைமையிலான ரஷ்ய தரப்பு, உக்ரைன் போரில் தொடக்கத்திலிருந்தே எந்த ஒரு இலக்கையும் முழுமையாக வெற்றி கொள்ள முடியவில்லை என அமெரிக்காவில் உள்ள காலராடோ நகரத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்பென் பாதுகாப்பு சம்மேளனத்தில் பேசினார் ரிச்சர்ட் மோர்.

russia - ukraine war
ரஷ்யா இணைக்கப் போகும் உக்ரைன் நாட்டின் பகுதிகள், கோபமான அமெரிக்கா - விரிவான தகவல்கள்
Russia-Ukraine War
Russia-Ukraine WarTwitter

உக்ரைன் ரஷ்யா மீது தாக்குதல்

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா ஒரு சிறு வெற்றியை மட்டுமே கண்டிருக்கிறது, அதோடு ரஷ்யாவின் ஆயுத பலம் தீரும் தருவாயில் இருக்கிறது.

எங்கள் மதிப்பீட்டின் படி அடுத்த சில வாரங்களுக்குள், ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்த போதுமான ஆயுதங்கள் மற்றும் ஆட்களின்றி தடுமாறும்.

ஏதோ ஒரு வகையில் ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும், அது உக்ரைன், ரஷ்யா மீது தாக்குதல் நடத்தும் வாய்ப்பைக் கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

russia - ukraine war
ரஷ்யா - உக்ரைன் போர் : இப்போது நடப்பது என்ன? அமெரிக்க ஆயுதங்கள் நிலை என்ன? Latest Report

ஆயுதங்கள்

இதைக் கேட்க அருமையாக இருக்கலாம் ஆனால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்துவது, உக்ரைன் நாட்டுக்கு மேற்கத்திய நாடுகளிடமிருந்து ஆயுதங்கள் கிடைப்பதைப் பொருத்தது. ஏற்கனவே மேற்கு நாடுகளின் ஆயுதங்கள், பல நேரங்களில் உக்ரைனுக்கு வெகு தாமதமாகவே வந்து சேர்வதாக ஒரு குற்றம்சாட்டு இருப்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

சில போர்கள் வெற்றிகள், இந்த முழு போரையும், ராணுவ பிரசாரத்தையும் வென்றுவிடலாம் என நினைவூட்டக் கூடிய முக்கியமான வெற்றியாக இருக்கலாம் என்றும் கூறினார்.

russia - ukraine war
ரஷ்யாவிடம் அணு ஆயுதங்கள் உள்ளதா ? அமெரிக்கா, ஐரோப்பா சேர்ந்து ரஷ்யாவை வெல்ல முடியுமா?
putin
putinNews Sense

புதின் உடல்நிலை

நாம் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம். உக்ரைன் நாட்டை இப்போரில் ஆதரிப்பது அல்லது உக்ரைன் பலமான இடத்திலிருந்து பேச வேண்டும் என்கிற எண்ணத்தைத் தொடர்ந்து ஆதரிக்க, சீனா ஒரு முக்கிய காரணம். சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங் ஒரு கழுகு போல உக்ரைன் ரஷ்யா பிரச்சனையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் எனக் கூறியுள்ளார் ரிச்சர்ட் மோர்.

இந்த கூட்டத்தில் ரஷ்யாவின் அதிபர் விளாதிமிர் புதினுக்கு உடல்நிலை மோசமாக இருப்பதாகக் கூறப்படும் செய்தி குறித்துக் கேட்ட போது, அதற்கு எந்த ஒரு வலுவான ஆதாரங்களும் இல்லை என்று கூறினார். அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏவின் இயக்குநர் வில்லியம் பேர்னும் புதின் உடல்நிலை குறித்த சர்ச்சைக்கு ஆதாரமில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com