Genghis Khan: இவருக்கு 1.6 கோடி பேரன்கள்- எத்தனை பெண்களுடன் உறவு கொண்டார்? அதிர்ச்சி தகவல்

உலகில் இப்போது செங்கிஸ்கானுக்கு 16 மில்லியன் பேரன்கள் இருப்பதாக 2003ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. செங்கிஸ்கான் தான் சென்ற இடங்களில் எல்லாம் எண்ணற்ற குழந்தைகளைப் பெற்றுக்கொண்டார். எந்த கணக்கு வழக்கும் கிடையாது.
Genghis Khan: இவருக்கு 1.6 கோடி பேரன்கள்- எத்தனை பெண்களுடன் உறவு கொண்டார்? அதிர்ச்சி தகவல்
Genghis Khan: இவருக்கு 1.6 கோடி பேரன்கள்- எத்தனை பெண்களுடன் உறவு கொண்டார்? அதிர்ச்சி தகவல்Twitter
Published on

செங்கிஸ்கான். உலக வரலாற்றில் கேட்டுதுமே குலைநடுங்க வைக்கும் பெயர்களில் ஒன்று. நாடோடியாக இருந்த மங்கோலிய மக்களை இணைத்து ஒரு பேரரசை உருவாக்கிய தலைவர்.

எதிரி எவராக இருந்தாலும் இரக்கமே காட்டாத இரத்த வெறி பிடித்த போர்வீரன். எந்த களத்தையும் தனக்கு சாதகமாக மாற்றி வெற்றி பெறக் கூடிய தந்திரசாலி.

கிட்டத்தட்ட 22% உலகின் நிலத்தை தனது ஒற்றைக் குடையின் கீழ் கொண்டுவந்த பேரரசன். இவரது வாழ்க்கைமுறை பல வரலாற்றாசிரியர்களால் ஆராயப்பட்டும் மர்மமாகவே இருக்கிறது.


12-13ம் நூற்றாண்டில் ஆசியா, ஐரோப்பாவில் போர் காரணமாக பல லட்சம் மைல்கள் கடந்து சென்ற செங்கிஸ்கான், ஒரு பெரிய வழித்தோன்றலை உருவாக்கியிருக்கிறார்.

உலகில் இப்போது செங்கிஸ்கானுக்கு 16 மில்லியன் பேரன்கள் இருப்பதாக 2003ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. செங்கிஸ்கான் தான் சென்ற இடங்களில் எல்லாம் எண்ணற்ற குழந்தைகளைப் பெற்றுக்கொண்டார். எந்த கணக்கு வழக்கும் கிடையாது.

செங்கிஸ்கான் இறந்து 8 நூற்றாண்டுகள் கடந்துவிட்டாலும் இன்றும் அவரது டி.என்.ஏ அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

குறிப்பாக அவர் ஆண்ட பகுதிகளில் பலருக்கும் ஒரே தாத்தாவாக செங்கிஸ்கான் இருக்கிறார். இங்கு இருக்கும் 8% ஆண்களுக்கு ஒரே மாதிரியான y குரோமோசோம்கள் இருப்பது 2003 ஆய்வில் தெரியவந்தது. தந்தையிடம் இருந்து மகனுக்கு கடத்தப்படும் y குரோமோசோம்கள் பெருமளவில் மாறாமல் இருக்கும்.

செங்கிஸ்கானுக்கு 6 மனைவிகள் இருந்தனர். ஆனால் உடலுறவு என்பது எவ்வித தடையும் இல்லாமல் எண்ணற்ற பெண்களுடன் தொடர்ந்தது. உலக மக்கள் தொகையில் 0.5% செங்கிஸ்கான் பங்களிப்பில் இருந்து வந்தது.

இந்த கணக்கை வைத்து செங்கிஸ்கானுக்கு அவரது வாழ்நாளில் எத்தனை குழந்தைகள் இருந்திருக்கலாம் எனக் கணக்குப் போட்டுப் பார்த்தால்.... பிரமிக்க வைக்கிறதே அன்றி அந்த எண்ணைத் தேடுவது நடக்காத செயல்.

செங்கிஸ்கான் வறுமையில் வளர்ந்தவர். மங்கோலிய நாடோடிகளை இணைத்து ஒரு படையைத் திரட்டினார். 20,000 பேருடன் அதிகாரத்தில் இருந்த தாதர்களை அடக்கினார். அதன் பிறகு பெரும்படையைச் சேர்த்து உலகைக் கைப்பற்ற புறப்பட்டார்.

ஒவ்வொரு பகுதியையும் கைப்பற்றும் போது 3 அடிக்கு உயரமான எல்லா ஆண்களையும் கொலை செய்ய உத்தரவிடுவார். பெண்களில் பலரைத் தேர்ந்தெடுத்து உடலுறவு கொள்வார்.

Genghis Khan: இவருக்கு 1.6 கோடி பேரன்கள்- எத்தனை பெண்களுடன் உறவு கொண்டார்? அதிர்ச்சி தகவல்
மங்கோலியா: கூடாரம் தான் வீடு, ஆடுகள் தான் சொந்தம் - செங்கிஸ்கான் ஆண்ட மக்களின் வாழ்வு!

எதிரிகளை விரட்டி அடிப்பதும், அவர்களை நேசிப்பவர்களில் கண்ணீரைப் பார்ப்பதும் மகிழ்ச்சியான விஷயங்கள் என்றார் செங்கிஸ்கான். எதிரியின் குதிரையில் சவாரி செய்வதும், அவர்களது மனைவிகளையும் மகள்களையும் தங்கள் கையில் வைத்திருப்பதை பெருமையாக உணர்ந்தார்.

இந்த வெறியுடன் இன்றைய ரஷ்யா, சீனா, ஈராக், கொரியா, கிழக்கு ஐரோப்பா மற்றும் இந்தியாவின் பகுதிகளை வென்றார். இதற்காக கிட்டத்தட்ட 4 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொன்றுகுவித்தார்.

Genghis Khan: இவருக்கு 1.6 கோடி பேரன்கள்- எத்தனை பெண்களுடன் உறவு கொண்டார்? அதிர்ச்சி தகவல்
செங்கிஸ்கான் கல்லறை : ரகசியம் காக்க காரணம் இதுதானா?



இந்த உலகில் 200 ஆண்களில் ஒருவர் தனது வழித்தோன்றலாக இருக்குமளவு இனப்பெருக்க பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளார் செங்கிஸ்கான். ஆயிரக்கணகான பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. குறைந்தது 1000 பெண்கள் கருவுற காரணமாக இருந்திருக்கிறார்.

செங்கிஸ்கான் மர்மமான முறையில் இறந்து போனார். அவரது கல்லறை இருக்கும் இடம் இன்றும் அறியப்படாததாக இருக்கிறது. செங்கிஸ்கான் கல்லரைக்கு பின்னாலும் மர்மமான கதைகள் மறைந்திருக்கிறது. அதனைத் தோண்டி அவரது மரபணுக்களை சோதனை செய்ய முடிந்தால் இந்த ஆர்வமூட்டும் கதையில் இன்னும் பல முடிச்சுகளை அறிவியல் உலகால் அவிழ்க்க முடியும்.

Genghis Khan: இவருக்கு 1.6 கோடி பேரன்கள்- எத்தனை பெண்களுடன் உறவு கொண்டார்? அதிர்ச்சி தகவல்
செங்கிஸ்கான் கல்லறை : உலகை நடுங்க வைத்த ஒரு மர்ம வரலாறு - அட்டகாச தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com