பூமிக்கு 1000 அடி ஆழத்தில் ஒரு புதிய காடு கண்டுபிடிப்பு - பிரபஞ்ச ரகசியத்தின் திறவுகோலா?

இந்த சிங்க் ஹோல் அதிகபட்சமாக 1,004 அடி வரை ஆழம் கொண்டதாகவும், 492 அடி அகலம் கொண்டதாகவும் இருந்ததாக சாங் யுவான்ஹை என்கிற சீனாவின் மூத்த புவியியல் பொறியாளர் சின்ஹுவா செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.
Giant sinkhole
Giant sinkholeTwitter

இயற்கைதான் தனக்குள் எத்தனை எத்தனை அற்புதங்களையும், அதிசயங்களையும் பொதித்து வைத்திருக்கிறது. இன்றுவரை அறிவியல் விஞ்ஞானிகள் புதுப்புது உயிரினங்கள், தாவரங்களை கண்டுபிடித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

பூமியே நம் கைக்குள் வந்துவிட்டதென நாம் மார்தட்டிக் கொள்கிறோம். ஆனால் இப்போது, மனிதர்களின் மூச்சுக் காற்று கூட படாத இடம் இந்த பூமியில் இருக்கத் தான் செய்கிறது.

அப்படி மனிதர்களின் கண்ணில் படாத சிங்க் ஹோல் ஒன்றை சீன விஞ்ஞானிகள் கடந்த வெள்ளிக்கிழமை கண்டுபிடித்து, அதில் இறங்கி சில ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர்.

Giant sinkhole
Giant sinkholeTwitter

சிங்க் ஹோல் என்றால் என்ன?

எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு பெரிய நிலபரப்பில் தாழ்வாக இருக்கும் பகுதி. அதில் எத்தனை நீர் சென்றாலும் அதை உறிஞ்சிக் கொள்ளும் அமைப்பையே சிங்க் ஹோல் என்பர்.

சரி, ஒரு சிங்க் ஹோலைக் கண்டுபிடிப்பதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இந்த சிங்க் ஹோலின் மறுபுறத்தில் அடர்ந்த காடுகள் உருவாகியுள்ளன என்பது தான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விஷயம்.

சீனாவில் குவாங்சி சுவாங் (Guangxi Zhuang) என்கிற மாகாணத்தில் இந்த பிரமாண்ட சிங்க் ஹோல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகச் சீனாவின் சின்ஹுவா செய்தி முகமை கூறியுள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் அம்மாகாணத்தில் பிங்கே (Pinge) என்கிற கிராமத்துக்கு அருகில் லெயே (Leye) என்கிற கவுன்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Giant sinkhole
Giant sinkholeTwitter

இந்த சிங்க் ஹோல் அதிகபட்சமாக 1,004 அடி வரை ஆழம் கொண்டதாகவும், 492 அடி அகலம் கொண்டதாகவும் இருந்ததாக சாங் யுவான்ஹை என்கிற சீனாவின் மூத்த புவியியல் பொறியாளர் சின்ஹுவா செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

இந்த சிங்க் ஹோலின் மறுபுறத்தில் சுமார் 131 அடி உயரத்துக்கு மரங்கள் வளர்ந்திருக்கின்றன. அம்மரத்தின் கிளைகள், சிங்க் ஹோலின் துளை வழியாக வானத்தை நோக்கி வளர்ந்திருந்தன.

இந்த சிங்க் ஹோலில் உருவாகி இருக்கும் குகையில் ஆராய்ச்சி மேற்கொள்ள சென் லிக்சின் (Chen Lixin) தலைமையிலான அணி ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை களமிறங்கியது.

Giant sinkhole
தமிழர்கள் ஆதிக்குடிகள் : 4,200 ஆண்டுகள் முந்தைய இரும்புக் காலம் - அசத்தலான கண்டுபிடிப்பு

சிங்க் ஹோலின் தரை தளத்தில் மனிதர்களின் தோல் பட்டை அளவுக்கு (சுமார் 2.5 - 3 அடிக்கு)அடர்த்தியாக செடி கொடிகள் வளர்ந்திருந்ததாக சென் லிக்சின், சீனாவின் சின்ஹுவா செய்தி முகமையிடம் கூறினார்.

'இந்த அடர்ந்த குகையில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத, அறிவியலால் விளக்கம் கொடுக்கமுடியாத உயிரினங்கள் இருக்கலாம். அப்படி இருந்தால் அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை' என சென் லிக்சின் கூறினார்.

லெயே கவுன்டியில் மட்டும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் மொத்த சிங்க் ஹோல்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது என்றும் சின்ஹுவா கூறியுள்ளது.

புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படுவதெல்லாம் சரி தான், அது கொரோனா வைரஸ் போல மனிதர்களை கடுமையாக பாதித்து முடக்காத உயிரினங்களாக இருந்தால் மெத்த மகிழ்ச்சி.

Giant sinkhole
KGF சொல்லும் எல் டொராடோ : தங்க நகரம் உண்மையில் இருந்ததா? - சாகச வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Giant sinkhole
சாண்டி ஐலேண்ட்: தோன்றி மறையும் மாயத் தீவு - வியக்கும் உலகம்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com