அதிர்ஷ்டம்! சமையலறையில் கிடைத்த தங்க நாணயங்கள் 7 கோடிக்கு ஏலம் - பணமழையில் தம்பதி

இப்போது அந்த சமையலறைக்கு கீழே கிடைத்த 264 தங்க நாணயங்களும் 754,000 யூரோக்களுக்கு அதாவது 6,92,83,561 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. ஏல நிறுவனம் இந்த தொகை மிக மிக அதிகம் என்று கூறுகிறது.
அதிர்ஷ்டம்! சமையலறையில் கிடைத்த தங்க நாணயங்கள் 7 கோடிக்கு ஏலம் - பணமழையில் தம்பதி
அதிர்ஷ்டம்! சமையலறையில் கிடைத்த தங்க நாணயங்கள் 7 கோடிக்கு ஏலம் - பணமழையில் தம்பதிTwitter

இங்கிலாந்தில் உள்ள வீட்டின் சமையலறையில் கண்டெடுக்கப்பட்ட தங்க நாணயங்கள் கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் வடக்கு யோர்க்‌ஷைர் பகுதியைச் சேர்ந்த அந்த தம்பதிக்கு 1610 - 1727 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த 264 தங்க நாணயங்கள் கிடைத்தன. இவற்றை அவர்கள் அதிக விலைக்கு விற்க முயற்சிகள் செய்தனர்.

இப்போது அந்த சமையலறைக்கு கீழே கிடைத்த 264 தங்க நாணயங்களும் 754,000 யூரோக்களுக்கு அதாவது 6,92,83,561 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. ஏல நிறுவனம் இந்த தொகை மிக மிக அதிகம் என்று கூறுகிறது.

நாணயங்கள்
நாணயங்கள்Twitter

லண்டனின் ப்ளூம்ஸ்பரி என்ற இடத்தைச் சேர்ந்த Spink & Son auctioneers என்ற நிறுவனம் இந்த ஏலத்தை மேற்கொண்டது. தங்க நாணயங்கள் தனித்தனியாக ஏலமிடப்பட்டதால் பலரும் நாணயங்களை வெல்ல முடிந்தது.

7 கோடிக்கு விற்கப்பட்டுள்ள இந்த நாணயங்களின் இன்றைய மதிப்பு சுமார் 91 லட்சம். 18ம் நூற்றாண்டு தொடர்பாக கண்டறியப்பட்ட பொக்கிஷங்களில் இது தான் மிகப் பெரியது என்று ஏல நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.

சாதாரணமாக சமையலறையை ஆழப்படுத்துவதற்காக தரையைத் தோண்டிய நபர்களுக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைத்தது இங்கிலாந்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அதிர்ஷ்டம்! சமையலறையில் கிடைத்த தங்க நாணயங்கள் 7 கோடிக்கு ஏலம் - பணமழையில் தம்பதி
கதையல்ல நிஜம்! சமையலறைக்கு அடியில் கிடைத்த தங்க புதையல் - தம்பதிக்கு அடித்த அதிர்ஷ்டம்

இந்த நாணயங்களில் 1720ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு தங்க நாணயம் மட்டும் அதிகபட்சமாக 57 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது.

பழமையான பொருட்கள் திட்டமிட்டுத் தேடும் தொல்லியல் நிபுணர்களுக்கு கூட கிடைக்காத அதிர்ஷ்டம் சாதாரண தம்பதிக்கு கிடைத்ததும், அவர்கள் அதனை சரியாக நிபுணர்களை வைத்து சோதித்து ஏலத்தில் விட்டனர்.

இதற்கிடையில் இந்த தங்க புதையல் செய்தி உலகமெங்கும் பரவ ஏலத்துக்கு மவுசு அதிகரித்தது. 2.3 கோடி ரூபாய்க்கு விற்கப்படலாம் என நிபுணர்கள் கண்டித்திருந்தனர். ஆனால் மொத்த ஏல முடிவில் நாணயங்கள் 6.9 கோடிக்கு விற்கப்பட்டுள்ளன.

அதிர்ஷ்டம்! சமையலறையில் கிடைத்த தங்க நாணயங்கள் 7 கோடிக்கு ஏலம் - பணமழையில் தம்பதி
காணாமல் போன மனைவியை 11 ஆண்டுகளாக தேடி வரும் கணவர் - ஒரு நெகிழ்ச்சி கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com