கதையல்ல நிஜம்! சமையலறைக்கு அடியில் கிடைத்த தங்க புதையல் - தம்பதிக்கு அடித்த அதிர்ஷ்டம்

இங்கிலாந்தின் வடக்கு யோர்க்‌ஷைர் பகுதியைச் சேர்ந்த அந்த தம்பதிக்கு 400 ஆண்டுகள் பழைமையான 264 தங்க நாணயங்கள் கிடைத்திருக்கின்றன. இவற்றை அவர்கள் அதிக விலைக்கு விற்கப் போவதாக தகவல்கள் வந்துள்ளன.
நாணயங்கள்
நாணயங்கள்Twitter
Published on

இங்கிலாந்தில் உள்ள ஒரு தம்பதி தங்களது வீட்டை புதுப்பிக்கும் போது கோடிக்கணக்கில் மதிப்புடைய தங்க நாணயங்களை கண்டறிந்துள்ளனர்.

புதையல்களை நாமெல்லாம் படங்களில் கதைகளில் தான் பார்த்திருப்போம். ஆனால் உண்மையில் அதெல்லாம் கிடைக்கக் கூடுமா என்ன?

நமது தொல்லியல் ஆய்வாளர்கள் சரியான இடங்களில் சரியாக தேடி பல அரிய பொருட்களை கண்டுபிடிப்பார்கள். அதுவும் ஒரு வகையில் புதையல்களை சேகரிப்பது தான். ஆனால் எந்த தேடலும் இல்லாமல் அதிர்ஷ்டத்தினால் சிலருக்கு புதையல்கள் கிடைக்கும்.

இங்கிலாந்தின் வடக்கு யோர்க்‌ஷைர் பகுதியைச் சேர்ந்த அந்த தம்பதிக்கு 400 ஆண்டுகள் பழைமையான 264 தங்க நாணயங்கள் கிடைத்திருக்கின்றன. இவற்றை அவர்கள் அதிக விலைக்கு விற்கப் போவதாக தகவல்கள் வந்துள்ளன.

அவர்கள் பெரும் புதையலில் மேலே இத்தனை ஆண்டுகளாக வசித்து வந்தது அவர்களால் நம்பமுடியாத ஒன்றாக இருந்திருக்கிறது. எதர்ச்சையாக சமையலறையின் தரையை பெயற்கும் போது இது கிடைத்துள்ளது.

அவர்களது வீடு 18ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. முதலில் அவர்கள் தரையில் ஏதோ செம்பு குழாய் போல தென்படுவதைப் பார்த்திருக்கின்றனர். பின்னர் கூர்ந்து பார்த்தபோது பெரும் அதிர்ஷ்டம் புதைந்திருப்பது கண்டறியப்பட்டது.

நாணயங்கள்
கோகினூர் முதல் நம்பிக்கை வைரம் வரை: உலகின் விலையுயர்ந்த வைரங்கள் - என்னென்ன சிறப்பு?

அந்த தம்பதியினர் ஸ்பின்க் அண்ட் சன் என்ற ஏல நிறுவனத்தை உடனடியாக அணுகியுள்ளனர். அவர்களுடன் ஒரு நிபுணரும் அந்த புதையலைப் பார்க்க வந்திருக்கிறார்.

இந்த தங்க நாணயங்களின் மொத்த மதிப்பு 2.3 கோடி ரூபாய் இருக்கலாம் என அனுமானிக்கப்பட்டது. அவை 1610 - 1727 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது.

"18ம் நூற்றாண்டில் ஏன் தங்க நாணயங்களை பாட்டிலில் அடைத்து மண்ணில் புதைக்க வேண்டும்? அப்போது இங்கிலாந்தில் வங்கி வசதிகள் இருந்ததே!" என ஆய்வாளர்கள் சிந்தித்து வருகின்றனர்.

நாணயங்கள்
எலிசபெத் மகாராணி - இளவரசர் பிலிப்பின் தசாப்தங்கள் கடந்த காதல் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com