தாய்லாந்து: நாய் குட்டி மீது போலீசார் வழக்கு - என்ன காரணம்?

தாய்லாந்து தலைநகரான பாங்காக்கில் வழி தவறி காணாமல்போன ஒரு கோல்டன் ரிட்ரீவரை மீட்ட போலீசார், அதன் மீது காணாமல் போன குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்து, அதன் உரிமையாளர் வரும்வரை உணவுகள், படுத்துக்கொள்ளக் கம்பளி என அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர்
Golden Retrievar
Golden RetrievarFacebook
Published on

கடந்த திங்கட்கிழமை அன்று ஒரு குட்டி நாய் லைஃப் வயர்லெஸ் காண்டோ, விட்டியாயு நுயா சாலையில் (Life Wireless Condo, Witthayu Nuea Road) சுற்றித்திரிவதாக பாங்காகின் லும்பினி காவல் துறையினருக்கு பொது மக்கள் தகவலளித்தனர். இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த நாய்க்குட்டியை மீட்டு அதன் உரிமையாளருக்காக காத்திருந்தனர். எனினும் யாரும் வந்து அந்த நாய்க்குட்டியை அழைத்து செல்லாததால் அதை அவர்களுடனே எடுத்துச் சென்றனர்.

Police Charge on dog
Police Charge on dogFacebook

பின்னர் அதை காவல் நிலையத்தில் வைத்து, விளையாட்டாக ஒரு குற்றவாளியை படம் பிடிப்பது போலவே பிடித்துள்ளனர். காணாமல் போனதற்காக அதன் மீது ஒரு வழக்கும் பதிவு செய்திருந்தனர் பாங்காக் போலீசார். பின்னர் ஒரு வெள்ளை நிற போர்டில், அதன் பெயரை கோல்டன் ரிட்ரீவர் என்றெழுதி, கீழே அந்த நாய்க்குட்டி கண்டுபிடிக்கப்பட்ட இடம், நேரம் ஆகியவற்றை எழுதி, அதன் மீது சாட்டப்பட்ட குற்றத்தையும் எழுதி முகநூலில் ஒரு புகைப்படத்தையும், காணொலியையும் வெளியிட்டது காவல் துறை.


இதன் மூலம் ஒருவேளை அந்த செல்ல பிராணியின் உரிமையாளர் அதனை மீட்டுச் செல்ல வசதியாக இருக்குமென்பதால் இவ்வாறு செய்துள்ளனர். பின்னர் உரிமையாளர் வரும்வரை, அதற்கு உணவு மற்றும் படுத்துக்கொள்ளக் கம்பளி என சிறு பிள்ளைபோல நாய்க்குட்டியைச் சீராட்டியுள்ளனர்.

Golden Retrievar
ஃபுளோரிடா : கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த நாய் - ஏன் தெரியுமா?

இந்த பதிவை கண்ட அதன் உரிமையாளர் கூ கின் யுவான் காவல் நிலையத்துக்கு விரைந்து தன் செல்ல பிராணியை பெற்றுக்கொண்டார். அதனுடன் வாக்கிங் செல்ல வெளியில் வந்த போது திடீரென மழை பெய்ததால், நாய்க்குட்டியை ஒரு பையில் பாதுகாப்பாக வைத்துவிட்டு, அருகிலுள்ள கடைக்கு சென்று உணவும், குடையும் வாங்கி வருவதற்குள் நாய் ஓடிவிட்டதாகவும், எங்கு தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்றிருந்த போது தான் போலீசாரின் பதிவைக் கண்டு அங்கு வந்ததாக கூ கின் தெரிவித்தார்.

பின்னர் பத்திரமாக அந்த நாய் குட்டியை கூ கின்னிடம் போலீசார் ஒப்படைத்தனர். கூ கின் வருவதற்கு முன் பலரும் இந்த அழகான குட்டிநாய்யை தத்தெடுத்துக்கொள்ள முன்வந்ததாகவும், உரிமையாளர் வரும் வரை காத்திருக்கபோவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படி ஒரு வேளை உரிமைகோரி யாரும் வரவில்லை என்றால், தங்களோடு காவல்துறை நாயாக அதை வளர்க்க முடிவெடுத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com