அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள க்ரீனாக்ரேஸின் கிசெலா ஷோர் என்பவருக்குச் சொந்தமானது சிஹுவாஹுவா வகையைச் சேர்ந்த நாய். இந்த நாய் 21 வயது 66 நாட்களை கடந்து அதிக நாட்கள் உயிர்வாழ்ந்த நாயாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
"உலகின் மிகப் பழமையான நாய்" என்றும் அழைக்கப்படும் இந்த வகையான நாயின் ஆயுட்காலம் சராசரியாக 12 முதல் 18 ஆண்டுகள் வரை தான் இருக்கும். ஆனால் இந்த நாய் 21 வயது 66 நாட்களை கடந்து வாழ்ந்து வருகிறது.
இந்த நாய் குறித்து, இன்ஸ்டாகிராமில் கின்னஸ் அமைப்பு பதிவிட்டதைக் கண்டு நாய்க்கு சொந்தக்காரர் மகிழ்ச்சியடைந்துள்ளார். தனது செல்லப்பிராணி 20 வயதை கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதை தனது உறவினர்களிடமும், நண்பர்களிடமும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகிறார்.
கின்னஸ் உலகசாதனை புத்தகத்தில் இடம்பிடித்த செல்லப்பிராணியின் வீடியோ, இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட நிலையில், தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு17,000 க்கும் மேற்பட்டோர் லைக்குகளை கொடுத்துள்னர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com