Google Maps: உடைந்த பாலத்துக்கு வழிகாட்டிய GPS, உயிரிழந்த நபர் - கூகுள் மீது வழக்கு!

பலமுறை பலர் வலியுறுத்தியும் கூகுள் நிறுவனம் பாலம் குறித்த தகவலை அப்டேட் செய்யவில்லை என புகாரில் கூறப்பட்டுள்ளது.
Google Maps: உடைந்த பாலத்துக்கு வழிகாட்டிய GPS, உயிரிழந்த நபர் - கூகுள் மீது வழக்கு!
Google Maps: உடைந்த பாலத்துக்கு வழிகாட்டிய GPS, உயிரிழந்த நபர் - கூகுள் மீது வழக்கு!Twitter
Published on

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகணத்தைச் சேர்ந்த பிலிப் பாக்சன் கூகுள் மேப் தொழில்நுட்பட்த்தை பயன்படுத்தி பயணித்துள்ளார். அவருக்கு ஒரு உடைந்த பாலம் வழியாக வழிகாட்டியதால் ஆற்றில் கவிழ்ந்துள்ளார். அந்த நபர் இறந்துவிட்ட நிலையில் அவரது குடும்பம் கூகுள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

பாக்சன் ஒரு மருந்து விற்பனையாளர். அவரது குழந்தையின் பிறந்தநாள் விழாவில் இருந்து புதிய பாதையில் செல்லும் போது கூகுள் மேப் ஒரு பாலத்தைக் கடக்க வழிகாட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பாலம் 9 ஆண்டுகளுக்கு முன்னரே உடைந்திருக்கிறது. மறுசீரமைப்பு செய்யப்படவே இல்லை.

இந்த சாலையில் இருந்த தடுப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் எச்சரிக்கை பலகைகள் எதுவும் இல்லை என பின்னர் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

புகாரில் கூறியிருப்பதன்படி, பலமுறை பலர் வலியுறுத்தியும் கூகுள் நிறுவனம் பாலம் குறித்த தகவலை அப்டேட் செய்யவில்லை. கூகுள் மீதும் அந்த பாலத்துடன் தொடர்புடைய சொத்து மேலாண்மை நிறுவனங்கள் மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூகுளில் பாலத்தின் நிலவரத்தை அப்டேட் செய்துள்ளார். அப்போது கூகுள் நிறுவனமும் அதனை மதிப்பாய்வு செய்வதாக பதில் மெயில் அனுப்பியிருக்கிறது. இந்த இ-மெயிலை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர்.

இந்த பாலம் உள்ளூர் அல்லது நார்த் கரோலினா மாநில அரசால் நிர்வகிக்கப்படவில்லை. இதனை பராமரிக்க வேண்டிய நிறுவனம் கலைக்கப்பட்டுவிட்டது என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Google Maps: உடைந்த பாலத்துக்கு வழிகாட்டிய GPS, உயிரிழந்த நபர் - கூகுள் மீது வழக்கு!
கூகுள்: ஒரு மணிநேர வேலை, ஆண்டுக்கு ரூ.1 கோடி வருமானம்- என்ன சொல்கிறார் 20 வயது இஞ்சினியர்?

"என் குழந்தைகள் அப்பா ஏன்? எப்படி இறந்தார்? எனக் கேட்கின்றனர். அவர்களிடம் சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் எதுவும் இல்லை. ஏனெனில் வளர்ந்த பெண்ணாக எனக்கே ஜிபிஎஸ் மற்றும் பாலத்துக்கு பொறுப்பானவர்கள் மனித உயிர் மீது சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்தார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை" என பிலிப்பின் மனைவி ஆலிசா பாக்சன் கூறியிருக்கிறார்.

தங்கள் குடும்பத்தின் இழப்புக்கு குறிப்பிடாத இழப்பீடும், காரணமானவர்களுக்கு தண்டனையும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் பாக்ஸன் குடும்பத்தினர் சட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Google Maps: உடைந்த பாலத்துக்கு வழிகாட்டிய GPS, உயிரிழந்த நபர் - கூகுள் மீது வழக்கு!
அமெரிக்கா: நியூயார்க் முதல் டெக்ஸாஸ் வரை - நீளும் மர்மங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com