டி20 உலகக் கோப்பை போட்டிக்காக ஆஸ்திரேலியா சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க ஒரு பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார்.
அவர் அந்த பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் போது அவரின் கழுத்தை நெரித்ததாகவும், பலவந்தமாக ஆணுறை இல்லாமல் உடலுறவு கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
தனுஷ்க குணதிலக்க மீது 4 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. உடலுறவு கொள்ள அந்த பெண் சம்மதித்ததாக குணதிலக்க காவல்துறை விசாரணையில் கூறி குற்றச்சாட்டுகளை மறுத்தார். ஆனால் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை.
குணதிலக்க நாட்டை விட்டு தப்பி ஓட வாய்ப்பு உள்ளதாக காவல்துறையினர் கூறியிருக்கின்றனர். குணதிலக்க மீது என்னென்ன குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன? அந்த பெண்ணுக்கும் அவருக்கு இடையில் என்ன நடந்தது? என்ற கேள்விகளுக்கு கடந்த புதன்கிழமை வெளியான காவலர்களின் ஆதாரங்கள் பற்றிய ஆவணங்களில் பதில் கிடைக்கின்றது.
இலங்கை கிரிக்கெட் வீரரான குணதிலக்கவுக்கு கடந்த அக்டோபர் 29ம் தேதி டிண்டரில் அறிமுகமாகியிருக்கிறார் அந்த 29 வயது பெண்.
இருவரும் சில நாட்கள் பேசிய பிறகு நவம்பர் 2ம் தேதி சிட்னியில் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளனர். அந்த பெண்ணின் வீட்டுக்குச் செல்வதற்கு முன்னர் இரவு உணவு மற்றும் மது அருந்தியிருக்கின்றனர்.
அந்த பெண்ணின் வீட்டில் குணதிலக்க பலவந்தமாக பாலுறவில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கு மூச்சு திணறும் வண்ணம் 3 முறை அவரது கழுத்தை நெரித்துள்ளார். ஒரு முறை 30 நொடிகள் வரை நெரித்ததாக அவணங்கள் கூறுகின்றன.
அப்போது தான் உயிருக்கு அஞ்சியதாக அந்த பெண் கூறியுள்ளார். மேலும் குணதிலக்கவிடம் இருந்து தன்னால் தப்பிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
குணதிலக்கவிடம் ஆணுறை அணியுமாறு அந்த பெண் கூறியுள்ளார். ஆனால் உடலுறவில் ஈடுபடும் போது ஆணுறை தரையில் கிடந்ததைத் தான் பார்த்ததாக அந்த பெண் கூறியுள்ளார்.
உடலுறவின் போது துணைக்குத் தெரியாமல் ஆணுறையை கழற்றுவது குற்றம் என கடந்த ஜுன் மாத அமலான சட்டத் திருத்தங்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்த பெண், "ஆணுறை இல்லாமல் பாலுறவு கொள்வதற்கோ அல்லது மூச்சுத் திணறலுடன் பாலுறவு கொள்வதற்கோ தான் சம்மதிக்கவில்லை" என்று காவல்துறையில் கூறியுள்ளார்.
மறுநாள் அந்த பெண் இரண்டு நபர்களிடம் இது குறித்து பேசியுள்ளார். ஒரு மனநல ஆலோசகரிடம் பேசியுள்ளார். 5ம் தேதி காவல்துறையில் புகார் கொடுப்பதற்கு முன்னதாக மருத்துவரிடம் பேசியுள்ளார்.
அந்த பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகினாரா என தடவியல் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. மேலும் மூச்சுத் திணறல் காரணமாக ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா எனவும் பரிசோதனை செய்துள்ளனர். நவம்பர் 6ம் தேதி குணதிலக்க கைது செய்யப்பட்டார்.
இலங்கை கிரிக்கெட் வாரியம் அனைத்துவகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து குணதிலக்கவை இடை நிறுத்தியுள்ளது. மேலும் கிரிக்கெட் வாரியம் சார்பாக ஒரு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust