இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தப்பி ஓடி ஏழு வாரங்களுக்குப் பிறகு நாடு திரும்பியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பெரும் மக்கள் போராட்டத்துக்கு வழிவகுத்தது. அடிப்படை வசதிகள் கூட கேள்விக்குறியாகிவிடும் என்ற நிலையில் மக்கள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பதவி விலகவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் கடந்த 9ம் தேதி ஜனாதிபதி மாளிகை மற்றும் அலுவலகத்தைக் கைப்பற்றினர். இலங்கையில் பொருளாதார நெருக்கடியைத் தீர்வு காண முடியாததால், கோபமடைந்த அந்நாட்டு மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபர் பதவி விலகக் கோரி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து ஜூலை 13 ஆம் தேதி நாட்டை விட்டு கோத்தபய ராஜபக்சே தப்பியோடினார். அதன் பின்னர் வெளிநாட்டிற்கு சென்ற அவர் தனது இலங்கை அதிபர் பதிவை ராஜினாமா செய்தார்.
மாலத்தீவு, அதன் பின்னர் சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தில் கோத்தபய ராஜபக்சே தஞ்சம் புகுந்தார். ஆனால், கோத்தபய ராஜபக்சே சட்டப்பூர்வமான பாஸ்போர்ட் வைத்திருப்பதால் அவர் 90 நாட்கள் வரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் தங்கலாம் என தாய்லாந்து வெளியுறவுத் துறை தெரிவித்திருந்தது.
இந்த சூழ்நிலையில், இன்று கோத்தபய ராஜபக்ச மீண்டும் இலங்கை திரும்புகிறார். கிட்டதட்ட 2 மாதங்களுக்குப் பிறகு பாங்காக்கில் இருந்து கொழுப்பு திரும்பியுள்ளார் கோத்தபய ராஜபக்சே.
இலங்கை வந்த அவரை அமைச்சர்கள் அதிகாரி சிலர் வரவேற்றதாக கூறப்படுகிறது. கொழுப்பு அருகே விஜேரமா மாத்வா என்ற இடத்தில் உள்ள மாளிகையில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், பலத்த பாதுகாப்பு அளிக்கப்படுள்ளதாகவும் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அவர் அரசியலில் ஈடுபடுவது குறித்து அவர் தான் முடிவு செய்வார் என்று மகிந்த கூறியிருக்கிறார்
நாடுதிரும்புயிருக்கும் கோத்தபய மீண்டும் அரசியலில் ஈடுபடமாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா கூறியுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust