இலங்கை : பொருளாதார நெருக்கடி தீவு தேசத்தை தொடர்ந்து திவாலை நோக்கி நகரும் இந்த 12 நாடுகள்

அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, பணவீக்கம், கடன் அதிகரிப்பு போன்றவை நாடுகளின் பொருளாதாரத்தை எரிக்கும் காரணிகளாக இருக்கின்றன. இதன் விளைவாக லெபனான், இலங்கை, ரஷ்யா, சுரினாம் மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகள் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன
இலங்கை பொருளாதார நெருக்கடி
இலங்கை பொருளாதார நெருக்கடிNewsSense
Published on

இலங்கையின் பொருளாதார நெருக்கடி அந்நாட்டு அதிபரையே வெளிநாட்டிற்கு தப்பி ஓட வைத்திருக்கிறது. தெற்காசிய நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானும் கடன் பிரச்னையில் தவித்து வருகிறது. இந்தியாவிலும் பல மாநிலங்களும் அதிக கடன் வாங்கி பற்றாக்குறையில் தத்தளித்து வருகின்றன.

இந்தப் போக்கு வளரும் நாடுகள் பலவற்றுக்கு உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு வளரும் நாடுகள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. பாரம்பரிய கடன் நெருக்கடியைத் தாண்டி நாடுகளின் செலாவணிகள் வீழ்ச்சியடைவது, அன்னிய செலாவணி அல்லது டாலரின் இருப்பு காலியாவது போன்றவை அனைத்தும் இந்நாடுகளில் இருக்கின்றன.

இலங்கை
இலங்கை NewsSense

அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, பணவீக்கம், கடன் அதிகரிப்பு போன்றவை இந்நாடுகளின் பொருளாதாரத்தை எரிக்கும் காரணிகளாக இருக்கின்றன. இதன் விளைவாக லெபனான், இலங்கை, ரஷ்யா, சுரினாம் மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகள் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. ரஷ்யாவின் அண்டை நாடான பெலராஸ் திவாலின் விளிம்பில் உள்ளது. இதற்கு மேல் குறைந்தபட்சம் ஒரு டஜன் நாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

ஒரு பத்திரத்தின் அடிப்படை புள்ளி மதிப்பு என்பது பத்திர விலைகளின் விலை ஏற்ற இறக்கம் 0.01% அல்லது அதன் விநியோகத்தில் 1 அடிப்படைப் புள்ளி மாற்றம் ஆகும். பத்திர வருவாயும் அவற்றின் விலைகளும் தலைகீழ் உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. முதிர்வுக்கான திருப்பம், கூப்பன் விகிதம் மற்றும் முக மதிப்பு போன்ற காரணிகள் பத்திரத்தின் விநியோகத்திற்கும் விலைக்கும் இடையிலான உறவைப் பாதிக்கின்றன. தற்போது 1000 அடிப்படை புள்ளிகள் பத்திர பரவல்களில் உயர்ந்திருக்கின்றன. இது பொருளாதார நெருக்கடி உள்ள நாடுகளில் நிலவுகிறது.

அர்ஜெண்டினா:

இந்த 1000 அடிப்படைப் புள்ளிகளை கணக்கிட்டால் உலகில் 400 பில்லியன் டாலர் கடன் ஆபத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். அர்ஜெண்டினா மட்டும் இதுவரை 150 பில்லியன் கடனில் சிக்கியிருக்கிறது. இந்நாட்டில் இரு பத்தாண்டுகளாகவே பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை மோசமாக இருக்கிறது. இதற்கு முன்னரே இந்நாட்டில் நெருக்கடி முற்றி உணவுக் கலகங்களெல்லாம் நடந்திருக்கின்றன.

அர்ஜெண்டினா அரசாங்கம் 2024 வரை கணிசமாக கடன் அடைக்க வேண்டியதில்லை என்றாலும் அதன் பிறகு கடன் அடைக்க வேண்டிய சுமை அதிகம். அர்ஜெண்டினாவின் வலிமையான துணை அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டாஸ் ஐஎம்எஃப் உடனான ஒப்பந்தத்தை மீறலாம் என்ற கவலை எழுந்துள்ளது.

எகிப்து, ஈக்வடார்:

அர்ஜெண்டினாவைத் தொடர்ந்து எகிப்தும் தென்னமெரிக்க நாடான ஈக்வடாரும் 40 முதல் 45 பில்லியன் டாலரை கடனாக வைத்திருக்கின்றன. இத்தகைய கடன் நெருக்கடியை சமாளிக்கலாம் என சில நாடுகள் நினைக்கின்றன. குறிப்பாக உலகளாவிய சந்தை நிலைபெற்று, பன்னாட்டு நிதி முனையம் - ஐஎம்எஃப் உதவி வழங்க வந்தால் நிலைமையை சரிசெய்யலாம் என்று அந்நாடுகள் நினைத்தாலும் பாதிப்பு ஏற்படப் போவது உறுதி.

எகிப்து நாடோ தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95% அளவை கடனாக வைத்துள்ளது. இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எகிப்தை விட்டு வெளியேறுகிறார்கள். நிதி நிறுவனமான ஜேபி மார்கன் மதிப்பிட்டேன் படி எகிப்திலிருந்து 11 பில்லியன் டாலர் வெளியேறியுள்ளது.

உக்ரைன்:

போரில் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் வரும் செப்டம்பருக்குள் 1.2 பில்லியன் டாலர் பத்திரக் கடனை திருப்ப வேண்டும். உக்ரைன் வைத்திருக்கும் வெளிநாடுகள் அளித்த உதவிப் பணம், அன்னிய செலாவணி இருப்பினால் கடனை அடைக்க முடியும். என்றாலும் உக்ரைனின் அரசு நிறுவனமான நேஃப்டோகேஸ் தனது கடனை திருப்பி அளிப்பதை இரண்டு வருடங்களுக்கு நிறுத்துமாறு கோரியிருக்கிறது. இதனால் உக்ரைன் பாதிக்கப்படலாம்.

இலங்கை பொருளாதார நெருக்கடி
இலங்கை : நாடே திவாலாகும் நிலை; சீனாவிடம் கடன் வாங்கி தவிக்கும் தீவு நாடு

துனிசியா:

துனிசியாவின் வரவு செலவுத் திட்டத்தில் 10% பற்றாக்குறை உள்ளது. இந்நாட்டின் அதிபர் கைஸ் சையத் தனது அதிகாரத்தின் மீதான பிடியை உறுதிப்படுத்தவும், நாட்டின் வலுவான தொழிலாளர் சங்கத்தின் காரணமாக ஐஎம்எஃப்பின் திட்டத்தைக் கடைப்பிடிப்பது பிரச்சினையாகலாம். துனிசியாவில் உலகின் மிக உயர்ந்த பொதுத்துறை ஊதியம் அமலில் இருக்கிறது. இதனால் தொழிலாளர் சங்கத்தின் நிர்ப்பந்தம் கடனை அடைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.


கானா:

ஆப்பிரிக்கா நாடான கானா தாறுமாறாகக் கடன் வாங்கியிருக்கிறது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85% அளவு இருக்கிறது. மேலும் கடனைத் திருப்புவதை விட வட்டி கட்டுவதே கானாவின் வாடிக்கையாக உள்ளது. மேலும் அதன் சொந்த செலாவணி அதன் மதிப்பில் கால் பங்கை இழந்துள்ளது. நாட்டின் பணவீக்கம் 30% ஆக உள்ளது.

கென்யா:

ஆப்பிரிக்க நாடான கென்யா தனது வரவில் 30% த்தை வட்டி கட்டுவதற்குப் பயன்படுத்துகிறது. அதனுடைய கடன் பத்திரங்கள் கிட்டத்தட்ட அரை பில்லியன் டாலர்கள் 2024 இல் முதிர இருக்கின்றன. இதனால் கென்யா முதலீட்டாளர்களிடமிருந்து கடன் வாங்க முடியவில்லை. ஆக இரண்டு ஆண்டுகளில் கென்யா கடும் நெருக்கடியைச் சந்திக்கும்.


எத்தியோப்பியா:

ஜி20 நாடுகளின் முயற்சியின் கீழ் கடன் நிவாரணம் பெறும் முதல் நாடு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எத்தியோப்பியா ஆகும். நாட்டின் நீண்ட கால உள்நாட்டுப் போர் பொருளாதார வளர்ச்சியை பாதித்திருக்கிறது. மேலும் எத்தியோப்பியா தனது 1 பில்லியன் டாலர் கடன் பத்திரத்திற்கான வட்டியைக் கட்டி வருகிறது.

மேலும் பல நாடுகள்ஆக ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மற்றும் சில கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பிரச்சினையின் விளிம்பில் உள்ளன. ஓரிரு ஆண்டுகளில் இந்நாடுகளில் பெரும் பொருளாதார நெருக்கடி வர இருக்கிறது. இது இந்நாடுகளோடு முடியாமல் சங்கிலித் தொடர் போல மற்ற வளரும் நாடுகளையும் பாதிக்கும். இதை பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடி
அடுத்த இலங்கை : திவாலாகும் நிலையில் பாகிஸ்தான் - என்ன நடக்கிறது அங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com