2000 ஆண்டுகள் பழமையான சீனப் பெருஞ்சுவரை இடித்த இரண்டு ஆசாமிகள் - என்ன நடந்தது?

அவர்கள் ஜே.சி.பி-யைப் பயன்படுத்தி சுவரை உடைத்ததை ஒப்புக்கொண்டனர். அவர்கள் மீது கலாச்சார நினைவுச் சின்னத்தை சேதப்படுத்தியதாக வழக்கு தொடந்துள்ளனர்.
2000 ஆண்டுகள் பழமையான சீனப் பெருஞ்சுவரை இடித்த இரண்டு ஆசாமிகள் - என்ன நடந்தது?
2000 ஆண்டுகள் பழமையான சீனப் பெருஞ்சுவரை இடித்த இரண்டு ஆசாமிகள் - என்ன நடந்தது?Twitter
Published on

சீனர்களின் மாபெரும் கலாச்சார அடையாளமான சீனப் பெருஞ்சுவரில் சரி செய்ய முடியாத சேதத்தை இரண்டு நபர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

2000 ஆண்டுகளாக கட்டப்ப்பட்ட இந்த சுவரை உடைத்த இருவரும் கட்டடத் தொழிலாளர்களாம். சேங், வாங் என்ற இராண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சீனப் பெருஞ்சுவரில் சேதம் இருப்பதை காவல்துறையினர் ஆகஸ்ட் 24ம் தேதி கண்டறிந்திருக்கின்றனர். அவர்கள் அருகில் உள்ள ஹரிங்கர் மாவட்டத்தில் இரண்டு சந்தேகத்துக்கு இடமான நபர்களைக் கண்டுபிடித்தனர்.

அவர்கள் ஜே.சி.பி-யைப் பயன்படுத்தி சுவரை உடைத்ததை ஒப்புக்கொண்டனர். அவர்கள் மீது கலாச்சார நினைவுச் சின்னத்தை சேதப்படுத்தியதாக வழக்கு தொடந்துள்ளனர்.

கி.மு 220ம் ஆண்டு முதல் கி.பி 1600 வரை இந்த சுவர் கட்டப்பட்டு வந்தது. இது ஒரே நீட்டத்துக்கு கட்டப்பட்ட சுவர் அல்ல. மாறாக பல கோட்டைச்சுவர்களின் தொகுப்பாக உருவானது.

கிழக்கே கடற்கரை முதல் மேற்கே வடக்கு சீனாவில் இருக்கும் கோபி பாலைவனம் வரை சீனப் பெருஞ்சுவர் நீண்டுள்ளது. இதன் மொத்த நீளம் 2100 கிலோமீட்டருக்கும் மேல்.

கட்டுமான தொழிலாளர்கள் உடைத்த பகுதி மிங் வம்சத்தினர் கட்டிய பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். சீனப்பெருஞ்சுவரின் சில பகுதிகள் அரண்மனைப் போல பெரியதாக வலிமையானதாக இருந்தாலும் பல பகுதிகள் காலத்தால் சேதமடைந்து மண் மேடுபோலவே தோற்றமளிக்கின்றன.

2000 ஆண்டுகள் பழமையான சீனப் பெருஞ்சுவரை இடித்த இரண்டு ஆசாமிகள் - என்ன நடந்தது?
Nushu : ஆண்களுக்கு தெரியாமல் சீன பெண்கள் பயன்படுத்திய இரகசிய மொழி - 400 ஆண்டுகால வரலாறு!

1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பகுதிகள் சேதமடைவதை புரிந்துகொள்ள முடிகிறது. மறுபுறம் உரிய பராமரிப்பு இன்றி சீனப் பெருஞ்சுவர் பழுதடைந்து வருகிறது. பெய்ஜிங்குக்கு அருகில் இருக்கும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் பகுதி மட்டுமே நன்றாக பராமரிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஒரு நினைவுச் சின்னத்தைப் பாதுகாப்பதில் அரசு மட்டுமல்லாமல் மக்களும் பங்களிக்க வேண்டியது அவசியம். கிராமங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளின் வழியே செல்லும் சுவரில் இருந்து கற்களை உள்ளூர்வாசிகள் கழற்றி எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

2000 ஆண்டுகள் பழமையான சீனப் பெருஞ்சுவரை இடித்த இரண்டு ஆசாமிகள் - என்ன நடந்தது?
பாவோபாப்: தண்ணீரை சேர்த்து வைக்கும் ஆப்பிரிக்காவின் அதிசய மரங்கள் - தமிழகம் வந்தது எப்படி?

2016ம் ஆண்டு பெய்ஜிங் டைம்ஸ் என்ற பத்திரிகை 30 விழுக்காடு சீனப் பெருஞ்சுவர் காணாமல் போய்விட்டதாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. யுனஸ்கோ நினைவுச் சின்னங்கள் பட்டியலில் இருக்கும் சீனப் பெருஞ்சுவர் 8 விழுக்காடு மட்டுமே நல்ல நிலையில் உள்ளது.

1960 முதல் சீனப் பெருஞ்சுவரை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துவருகிறது. இந்த நிலையில் இரண்டு நபர்கள் அதிக தூரம் சுற்றி செல்வதற்கு சலித்து சீனப் பெருஞ்சுவரை இடித்துள்ளது அதிர்ச்சியளித்துள்ளது.

2000 ஆண்டுகள் பழமையான சீனப் பெருஞ்சுவரை இடித்த இரண்டு ஆசாமிகள் - என்ன நடந்தது?
பாகிஸ்தான் நாட்டில் பட்டையை கிளப்பும் சீன தேசத்து பீர் - இதுதான் அந்த அடிபொலி காரணம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com