சாலைகளே கிடையாது, எங்கும் ஹெலிகாப்டர் தான் - உலகின் மிக பெரிய தீவு நாடு பற்றி தெரியுமா?

உலகிலேயே காலியான நாடு இது தான். ஒரு நபருக்கு 7000 சதுர கிலோமீட்டர் நிலம் உள்ளது. ஆனால் நாட்டின் 90% நிலப்பகுதி காலியாகதான் உள்ளது. வடதுருவத்தில் உள்ள இந்த வினோத நாடு குறித்து தெரிந்துகொள்ளலாம்.
சாலைகள் கிடையாது, ஹெலிகாப்டர் மட்டும் தான் - உலகின் மிக பெரிய தீவு நாடு பற்றி தெரியுமா?
சாலைகள் கிடையாது, ஹெலிகாப்டர் மட்டும் தான் - உலகின் மிக பெரிய தீவு நாடு பற்றி தெரியுமா?Twitter

கிரீன்லாந்து உலகின் மிகவும் காலியான நாடாகும். கிரீன்லாந்தில் உள்ள 21 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பு முழுவதும் நமக்காக காத்திருப்பது வெறும் 57,000 மக்கள் தான். 

அதாவது ஒரு நபர் வாழ 7,000 சதுர கிலோமீட்டர் பரப்பு நிலம் இருக்கிறது. 99% நிலம் இங்கு காலியாக உள்ளது. இந்த பரப்பின் பெரும்பகுதியில் ராட்சத ஐஸ் கட்டிகள் தான் இருக்கிறது. 

பல மலைகளும், நீர்வீழ்ச்சிகளுமாக செழித்திருக்கிறது நிலப்பகுதி. உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்து தனக்குள் வைத்திருக்கிற அற்புதங்களைத் தெரிந்துகொள்ளலாம். 

கிரீன்லாந்தின் ஐஸ் நிலம்

கிரீன்லாந்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கடலோர கிராமங்களில் தான் மக்கள் வசிக்கின்றனர். இந்த நாட்டின் 80 விழுக்காடு நிலப்பரப்பு ஐஸ் கட்டிகளால் ஆனது தான்.

இப்போது காலநிலை மாற்றம் காரணமாக ஐஸ் கட்டிகள் பெருமளவில் உருகத் தொடங்கிவிட்டன. ஆனால் இந்த ஐஸ் கட்டிகள் 4 லட்சம் ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரீன்லாந்து மக்கள்

மிகவும் குறைந்த மக்கள் தொகை என்பதனால் கிரீன்லாந்தில் ட்ராஃபிக் என்பதே கிடையாது. வானலாவிய கட்டடங்கள் கிடையாது, எனவே நம்மை நச்சரிக்கும் சத்தமும் கிடையாது.

இங்குள்ள மக்கள் மிகவும் நட்புணர்வுடன் நடந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. பெரும்பாலும் கிரீன்லாந்து நாட்டுமக்கள் இன்யூட் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

சைபீரியாவைப் பூர்வீகமாக கொண்டிருந்த இவர்கள் 13 நூற்றாண்டில் கனடாவைக் கடந்து கிரீன்லாந்தில் வந்து தங்கியதாகக் கூறப்படுகிறது.

ஐஸ்லாந்தில் இருந்து வடதிசை மக்கள் 10 நூற்றாண்டில் கிரீன்லாந்து வந்து வசித்திருக்கின்றனர். ஆனால் அதன் பிறகு அவர்களைப் பற்றிய தரவுகள் இல்லை.

இது மட்டுமல்ல 4000 ஆண்டுகளாக கிரீன்லாந்தில் மனிதர்கள் வசிக்கின்றனர். ஆனால் நிலையாக யாரும் தங்கியதில்லை.

தனித்தனியான குடியேற்றங்கள்

முன்னதாக கூறியது போலவே கிரீன்லாந்து மக்கள் தனித்தனியான கடலோர கிராமங்களில் வசிக்கின்றனர். இவற்றில் ஒரு கிராமத்தில் இருந்து மற்றொன்றுக்கு செல்ல சாலை வசதியோ அல்லது ரயில் வசதியோ கிடையாது.

பெரும்பாலும் மக்கள் ஹெலிகாப்டர்களைத் தான் பயன்படுத்துகின்றனர். அல்லது ப்ராபலர் பிளேன்கள். உள்ளூர்வாசிகள் கடல் வழியாக கப்பலிலும் பயணிக்கின்றனர்.

பக்கத்து ஊர்களுக்கு ஐஸ் வழியாக நாய் வண்டிகளில் பயணம் செய்யும் பழக்கமும் இருக்கிறது.

சாலைகள் கிடையாது, ஹெலிகாப்டர் மட்டும் தான் - உலகின் மிக பெரிய தீவு நாடு பற்றி தெரியுமா?
பின்லாந்து எனும் பூலோக சொர்க்கம் - உலகிலேயே மகிழ்ச்சியான நாடாக இருப்பது ஏன் தெரியுமா?

வட அமெரிக்க நாட்டில், ஐரோப்பிய அரசியல்

வட அமெரிக்க கண்டத்தின் பகுதியாக இருக்கிறது கிரீன்லாந்து. ஆனால் இது அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படையில் ஐரோப்பாவுடன் இணைந்துள்ளது.

குறிப்பாக நார்வே மற்றும் டென்மார்குடன் பல சங்கங்களில் இணைந்துள்ளது. 1814 முதல் கிரீன்லாந்து டேனிஷ் பகுதியாக கருதப்பட்டது.

டேனிஷ்-நார்வே ஒன்றியம் உடைந்த போது முழுமையாக டென்மார்க் அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தது கிரீன்லாந்து. 27 ஆண்டுகள் கழித்து தன்னாட்சி உரிமையைப் பெற்றது. 2009 ஆண்டு முதல் தான் கிரீன்லாந்து சுயமாக ஆட்சி செய்துகொள்கிறது.

சாலைகள் கிடையாது, ஹெலிகாப்டர் மட்டும் தான் - உலகின் மிக பெரிய தீவு நாடு பற்றி தெரியுமா?
நியூசிலாந்து : மனிதர்கள் கடைசியாக குடியேறிய நாடு - 'இயற்கை சொர்க்கமாக' இருப்பது ஏன்?
இவர்கள் வடக்கு ஐரோப்பிய மக்கள், ஆனால் ஆசிய முக அமைப்பைக் கொண்டுள்ளனர்!

கிரீன்லாந்து கலாச்சாரம்

நார்வேயுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தாலும் கலாச்சாரத்தில் ஐரோப்பிய நாடுகளை விட முற்றிலும் மாறுபட்டது கிரீன்லாந்து.

இங்குள்ள மக்கள் கிரீன்லாந்திக், டேனிஷ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். இன்யூட் கலாச்சாரம் சுற்றுலாப்பயணிகள் வருகையால் நவீனமடைந்திருக்கிறது.

கிரீன்லாந்து தலைநகர் நூக்கில் பிரகாசமான வண்ணம் பூசிய பாரம்பரிய மரவீடுகளும் அதே வேளையில் புதிதாக கட்டப்பட்ட அலுவலக கட்டடங்களும், ஷாப்பிங் மால்களும் இருக்கும்.

கிரீன்லாந்து கலாச்சாரத்தில் திமிங்கல வேட்டை மற்றும் சீல் வேட்டை ஆகியவை முக்கியமான அம்சங்கள். ஆனால் சர்வதேச அளவில் இந்த உயிரினங்களைக் காக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதால் இந்த இறைச்சிகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளனர்.

காலநிலை மாற்றம்

கிரீன்லாந்தில் மிக கண்கூடாக காலநிலை மாற்றத்தின் விளைவுகளைப் பார்க்க முடியும். 2003 முதல் ஒவ்வொரு ஆண்டும் கிரீன்லாந்தில் இருந்து 1 கோடி டன் ஐஸ் ஷீட் கடலில் கரைகிறது.

ஒவ்வொரு நாளும் நிலத்தில் இருந்து ஐஸ் கட்டிகள் பிரிந்து செல்வதை பார்க்க முடியும். கிரீன்லாந்தில் உள்ள பனிக்கட்டிகள் முழுமையாக மூழ்கினால் உலக அளவில் கடல் மட்டம் 23 அடி உயரும் என அறிஞர்கள் கூறுகின்றனர்.

கிரீன்லந்து மக்களின் பரிணாமம்!

கிரீன்லாந்து மக்கள் பல நூற்றாண்டுகளாக பனியில் வாழ்கின்றனர். பனியில் நாம் அதிக நேரம் இருக்கும் போது நமது கண்கள் அதிக வெக்கையால் அவதிப்படுவதால் திறக்க முடியாமல் போவது போல ஆகிவிடும்.

இந்த சிரமத்தில் இருந்து தப்பிக்க இன்யூட் மூதாதையர்கள் மரத்தால் ஆன கண்ணாடி போன்ற பொருளை கண்டுபிடித்தனர். இது உலகின் முதல் சன்கிளாஸ் எனலாம்.

ஆனால் பல ஆண்டுகள் கழிய, பனியில் இருப்பதற்கு ஏற்றவாறு கிரீன்லாந்து மக்களின் முக அமைப்பு மாறத் தொடங்கிவிட்டது. அவர்களின் கண்களுக்கு மேலும் கீழும் அதிக சதை வளரத் தொடங்கியது.

மனித பரிணாமத்தில் கண்கூடான சாட்சியாக இந்த மக்கள் இருக்கின்றனர். இவர்கள் வடக்கு ஐரோப்பிய மக்கள், ஆனால் ஆசிய முக அமைப்பைக் கொண்டுள்ளனர்!

சாலைகள் கிடையாது, ஹெலிகாப்டர் மட்டும் தான் - உலகின் மிக பெரிய தீவு நாடு பற்றி தெரியுமா?
Russia Yakutsk : -62°C இறங்கிய உலகின் குளிரான நகரம் - உறைந்துவிடும் அச்சத்தில் மக்கள்!

கிரீன்லாந்து முழுவதும் ஐஸ்நிலமாக இருந்தாலும் கோடைகாலத்தில் தெற்கு பகுதியில் வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்குமாம்.

கோடையில் சூரியன் மறையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாலைகள் கிடையாது, ஹெலிகாப்டர் மட்டும் தான் - உலகின் மிக பெரிய தீவு நாடு பற்றி தெரியுமா?
வெனிஸ் முதல் மெக்சிகோ வரை : விரைவில் கடலில் மூழ்கப்போகும் அழகிய நகரங்கள் - ஏன் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com