King Charles III முடிசூட்டு விழாவுக்காக லண்டன் கொண்டு வரப்பட்ட கல் - என்ன காரணம்?

எடின்பெர்க் கோட்டையில் வைக்கப்பட்டிருந்த இந்த கல், கடந்த 25 ஆண்டுகளில் முதன் முறையாக அங்கிருந்து வேறோரு இடத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது எனக் கூறியுள்ளது இந்த கல்லை பாதுகாத்து வரும் ஹிஸ்டாரிக் என்விரான்மெண்ட் ஸ்காட்லாந்து (HES).
King Charles III முடிசூட்டு விழாவுக்காக லண்டன் கொண்டு வரப்பட்ட கல் - என்ன காரணம்?
King Charles III முடிசூட்டு விழாவுக்காக லண்டன் கொண்டு வரப்பட்ட கல் - என்ன காரணம்?ட்விட்டர்
Published on

இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவுக்காக வரலாற்று சிறப்புமிக்க ஸ்டோன் ஆஃப் ஸ்கோன் (Stone of Scone) ஸ்காட்லாந்திலிருந்து லண்டனுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

விதியின் கல் (stone of destiny) எனவும் அழைக்கப்படும் இந்த ஸ்டோன் ஆஃப் ஸ்கோன் ஸ்காட்லாந்தின் முடியாட்சியின் சின்னமாக பார்க்கப்படுகிறது.

எடின்பெர்க் கோட்டையில் வைக்கப்பட்டிருந்த இந்த கல், கடந்த 25 ஆண்டுகளில் முதன்முறையாக அங்கிருந்து வேறோரு இடத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது எனக் கூறியுள்ளது இந்த கல்லை பாதுகாத்து வரும் ஹிஸ்டாரிக் என்விரான்மெண்ட் ஸ்காட்லாந்து (HES).

பல ஆண்டுகளாக இரண்டாம் எலிசபெத் ஆட்சியில் இருந்ததால், ஸ்டோன் ஆஃப் ஸ்கோன் தேவைப்படவில்லை!

தற்போது அவரது மறைவுக்கு பிறகு இங்கிலாந்தின் அரசர் ஆகியுள்ளார் மூன்றாம் சார்லஸ்.

இந்த ஸ்டோன் ஆஃப் ஸ்கோனில் தான் பல நூற்றாண்டுகளாக பிரிட்டனில் மன்னர்கள் முடி சூட்டப்பட்டனர். அடுத்த வாரம் தற்போதைய இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா நடைபெறவுள்ளதால் பலத்த பாதுகாப்போடு அக்கல் தற்போது லண்டனுக்கு எடுத்துவரப்படுகிறது.

கடந்த வியாழனன்று இந்த கல் ஸ்காட்லாந்து கோட்டையிலிருந்து அகற்றப்பட்டது.

அரசர் முடிசூட்டு விழாவுக்கு பிறகு மீண்டும் அது தனது நிரந்தர இருப்பிடமான ஸ்காட்லாந்து கோட்டைக்கே திரும்ப எடுத்துவரப்படும்.

King Charles III முடிசூட்டு விழாவுக்காக லண்டன் கொண்டு வரப்பட்ட கல் - என்ன காரணம்?
Queen Elizabeth II: இனி இங்கிலாந்து பாஸ்போர்ட் செல்லாதா? ராணியின் மறைவால் குழப்பம்

“தேசத்தின் முக்கிய சின்னமான இந்த கல்லை பாதுகாப்பாக எடுத்துவந்து மீண்டும் அதன் இடத்திற்கே கொண்டு சேர்ப்பது மிகப் பெரிய பொறுப்பு.

இதனை சரிவர செய்து முடிக்க சிறப்பு குழுக்கள் உட்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு அதீத கவனம், திறன் மற்றும் நிபுணத்துவம் தேவைப்படுகிறது” எனக் கூறினார் HESன் சேகரிப்புகளின் தலைவரான கேத்தி ரிச்மண்ட்.

1296ஆம் ஆண்டு அப்போதைய அரசராக இருந்த முதலாம் எட்வர்ட் இந்த கல்லினை ஸ்காட்லாந்திடமிருந்து கைப்பற்றினார். 1308 இல் முடிசூட்டு நாற்காலியில் அது இணைக்கப்பட்டது.

அந்த நாற்காலி 1399 இல் ஹென்றி IV தொடங்கி இங்கிலாந்து மற்றும் பிரிட்டிஷ் மன்னர்களின் முடிசூட்டு விழாக்களில் பயன்படுத்தப்பட்டது.

King Charles III முடிசூட்டு விழாவுக்காக லண்டன் கொண்டு வரப்பட்ட கல் - என்ன காரணம்?
Queen Elizabeth : இங்கிலாந்து ராணியின் இறப்பை முன்கூட்டியே கணித்த மர்ம நபர் - வைரல் ட்வீட்

1950 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று, வெஸ்ட்மின்ஸ்டரிலிருந்து ஸ்காட்டிஷ் தேசியவாதிகளால் ஸ்டோன் ஆஃப் ஸ்கோன் மீட்கப்பட்டது.

ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு 500 மைல்கள் (800 கிமீ) தொலைவில் ஸ்காட்லாந்தில் உள்ள அர்ப்ரோத் அபேயின் உயரமான பலிபீடத்தில் மீட்கப்பட்டது.

பின்னர் அதிகாரப்பூர்வமாக 1996 இல் ஸ்காட்லாந்திற்கு நிரந்தமாக மாற்றப்பட்டது. அடுத்த வாரம் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவுக்கு பிறகு மற்றும் சார்லஸின் ஸ்காட்லாந்திற்கே திரும்பும்.

King Charles III முடிசூட்டு விழாவுக்காக லண்டன் கொண்டு வரப்பட்ட கல் - என்ன காரணம்?
King Charles III : லீக்கான பேனா மை - கோபமடைந்த இங்கிலாந்து மன்னர் சார்லஸ் - வைரல் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com