கையெழுத்து இடும் போது பேனாவிலிருந்து மை லீக் ஆனதால் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கோபமடைந்து எழுந்து செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் கடந்த 8 ஆம் தேதி மரணமடைந்ததை அடுத்து, அவரது மகன் இளவரசர் சார்லஸ் அடுத்த அரசரானார். அரசராக அறிவிக்கப்பட்ட சார்லஸ் அரச பட்டத்தை ஏற்று கையெழுத்து இடும் விழாவின் வீடியோ இணையத்தில் பரவலாக பார்க்கப்பட்டது.
அந்த வீடியோவில், தனது மேஜை மேல் நிறைய பொருட்கள் இருக்கிறது என்று கூறி சற்று கோபமடைந்தார் மன்னர். அதனை உடனடியாக அகற்றிடவும் உத்தரவிட்டார். இதற்கு இணையவாசிகள் இடையே விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது மற்றொரு வீடியோ வைரலாகியுள்ளது
இப்போது வெளியான வீடியோவில், மன்னர் சார்ல்ஸ் ஒரு ஆவணத்தில் கையெழுத்து இடுகிறார். அப்போது அதில் அவர் தேதியை 13 எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, 12 எனக் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. இதனை உணர்ந்த சார்லஸ் தேதி என்ன என்று உடனிருந்த காப்பாளரிடம் கேட்க அவர் தேதி 13 எனக் கூறுகிறார். கையொப்பமிட்ட பின்னர், தனது கைகளில் சாயம் பட்டுள்ளதை பார்த்து கோபமடைந்தார் சார்லஸ்.
"அட கடவுளே! நான் இதை வெறுக்கிறேன்...ஒவ்வொரு முறையும் இவர்கள் இப்படி செய்வதை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியாது" என்று கடிந்துகொள்ளும் வீடியோ டிவிட்டரில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
இதனையடுத்து, மன்னரின் கோபம் இணையவாசிகளின் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust