Coober Pedy: பாலைவன பூமிக்குள் பளபளக்கும் வினோத நகரம்- சுரங்கங்களில் வாழும் மக்களின் கதை!

50 டிகிரி செல்ஸியஸ்ஸை கூட அசால்டாக பார்க்கும் இந்த மக்கள், "இங்கு சில நாட்கள் வாழ்ந்தீர்கள் என்றால், மீண்டும் நிலத்துக்கு மேல் ஒரு வீட்டில் வசிக்க விரும்பமாட்டீர்கள்" என அடித்துச் சொல்கின்றனர்.
Coober Pedy: பாலைவன பூமிக்குள் பளபளக்கும் நகரம்- சுரங்கங்களில் வாழும் மக்களின் கதை!
Coober Pedy: பாலைவன பூமிக்குள் பளபளக்கும் நகரம்- சுரங்கங்களில் வாழும் மக்களின் கதை!News Sense
Published on

கூப்பர் பெடி ஆஸ்திரேலியாவில் உள்ள பெரும்பாண்மை நிலப்பகுதிகளைப் போன்ற பலைவனம் தான்.

ஆனால் இங்கு வசிக்கும் மக்கள் மிகவும் சாதுர்யமாக இருந்து உலகின் மிக வினோதமான நகரமாக இதனை மாற்றியுள்ளனர்.

செயற்கை கோள் வழியாக பார்த்தாலும் கூட நிலத்துக்கு மேல் அது வெறும் சிவந்த பாலைவனமாகத்தான் தெரியும்.

ஆனால் பூமிக்கு அடியில் பல வீடுகள், தேவாலயங்கள், அருங்காட்சியகம், திரையரங்கம், உணவகம், பார், அலுவலகங்கள் எனப் பலவற்றைப் பார்க்க முடியும்.

One Year of Newssensetn
One Year of Newssensetn

ஆஸ்திரேலியாவின் தெற்கு மாகாணமான அடிலாய்டு பிராந்தியத்தில் அமைந்திருக்கிறது கூப்பர் பெடி. இங்கு 1500 வீடுகளுக்கு மேல் இருக்கின்றன. கிட்டத்தட்ட 4000 பேர் இங்கு வசிக்கின்றனர்.

பாலைவனமான இந்த பகுதியில் பகல் நேரத்தில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும். கோடைக்காலத்தில் 53 டிகிரி செய்சியஸ்ஸை கூட தொட்டுவிடும்.

குளிர்காலத்தில் நிஜமாகவே சொல்லாத இடம் கூட குளிரில் உறைந்துவிடும்.

இந்த இரண்டு மோசமான நிலைகளிலிருந்தும் பூமிக்கடியில் இருக்கும் வீடுகள் காக்கின்றன.

சிறப்பு என்னவென்றால் இங்கு குளிர்காலத்தில் ஹீட்டரோ, வெயில் காலத்தில் ஏசியோ கூட தேவைப்படாது.

பூமிக்கடியில் பதுங்கியிருப்பது என்றால் ஏதோ எலிவலையில் இருப்பது போலவோ அல்லது சென்னையில் பேச்சிலர்கள் குகையில் வாழ்வது போலவோ தோணலாம்.

ஆனால் இந்த வீடுகள் 5 ஸ்டார் ஹோட்டல்களை விஞ்சிவிடும் அளவு ஆடம்பரமானவை.

இணையதள வசதியுடன் நவீனமயமான வாழ்க்கையையே கூப்பர் பேடி மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு வசிப்பதிலிருக்கும் ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், பக்கத்து ஊர் என்று எதுவும் கூப்பர் பேடிக்கு இல்லை. இது நாட்டில் மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து வெகு தொலைவில் அமைந்திருக்கிறது.

கூப்பர் பேடியின் மக்களைப் பற்றி நிச்சயமாக பேசியாக வேண்டும்.

இங்குள்ள மக்களில் 60% பேர் நிலத்துக்கு அடியில் வசிக்கின்றனர்.

இவர்கள் மிகுந்த படைப்பாற்றல் கொண்டவர்கள். நிலத்துக்கு அடியில் வசித்தாலும் தங்களது வீட்டை புதுமையானதாக உருவாக்கியிருக்கின்றனர்.

50 டிகிரி செல்ஸியஸ்ஸை கூட அசால்டாக பார்க்கும் இந்த மக்கள், "இங்கு சில நாட்கள் வாழ்ந்தீர்கள் என்றால், மீண்டும் நிலத்துக்கு மேல் ஒரு வீட்டில் வசிக்க விரும்பமாட்டீர்கள்" என அடித்துச் சொல்கின்றனர்.

இந்த மக்கள் பெரும்பாலும் சுரங்கத் தொழிலில் தான் ஈடுபடுகின்றனர்.

கூப்பர் பேடி உருவான கதை!

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இளைஞர் இந்த பாலைவனப் பகுதியிலிருந்து ஒபல் (Opal) என்ற மினுமினுக்கும் தாதுக்கல் ஒன்றைக் கண்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து இந்த பாலைவன மணலில் ஒளிந்திருக்கும் ஒபலைத் தோண்டி எடுக்க பல சுரங்கங்கள் அமைக்கத் தொடங்கினர்.

சுரங்கத் தொழிலில் ஈடுபட மக்களும் இங்கு குவிந்தனர்.

அதிகபட்சமான வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாத மக்கள் சுரங்களுக்குள் சென்று தங்கத் தொடங்கியிருக்கின்றனர்.

Coober Pedy: பாலைவன பூமிக்குள் பளபளக்கும் நகரம்- சுரங்கங்களில் வாழும் மக்களின் கதை!
தமிழ் நாட்டில் உள்ள இந்த 4 நீர்வீழ்ச்சிகள் குறித்து தெரியுமா? - ஓர் அட்டகாச பயணம்
சுரங்கத் தொழில்
சுரங்கத் தொழில்

1970-80களில் இங்கு ஆயிரக்கணகான சுரங்கங்கள் இருந்தன. அப்போது ஒபல் அதிகபட்ச வருமானத்தை அளித்து வந்தது.

ஆனால் இப்போது நூற்றுக்கணக்கான சுரங்கங்களில் மட்டுமே ஒபல் எடுக்கும் வேலை நடைபெறுகிறது.

கைவிடப்பட்ட சுரங்கங்களை மக்கள் வீடுகளாக்கி வசித்து வருகின்றனர்.

2018ம் ஆண்டு முதல் கூப்பர் பேடியில் உள்ள வீடிகளுக்கு புதுபிக்கத் தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

Coober Pedy: பாலைவன பூமிக்குள் பளபளக்கும் நகரம்- சுரங்கங்களில் வாழும் மக்களின் கதை!
ரஷ்யா யாகுட்ஸ்க் - உலகின் குளிர்ச்சியான இந்த நகரம் குறித்து தெரியுமா?

ஆஸ்திரேலியாவிலேயே சூரிய மின்சக்தி உற்பத்திக்கு சிறந்த பகுதியாக கூப்பர் பேடி திகழ்கிறது. இந்த நகரத்துக்கு தேவையான 70% மின்சக்தியை சூரிய மின் ஆற்றலாகப் பெறுகிறார்கள்.

இந்த நகரம் தன்னிறைவாக இயங்குவதனால் புதிதாக மக்கள் இங்கு குடியேறி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் மற்ற சுரங்கத் தொழில் நடைபெறும் இடங்களையும் நிலத்தடி வாழ்க்கைக்கு ஊக்கப்படுத்துகிறது கூப்பர் பேடி.

Coober Pedy: பாலைவன பூமிக்குள் பளபளக்கும் நகரம்- சுரங்கங்களில் வாழும் மக்களின் கதை!
குரங்களுக்கு சொத்துரிமை அளித்துவரும் வினோத கிராமம்! - பாரம்பரியத்தை இழக்கிறதா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com