ரஷ்யா யாகுட்ஸ்க் - உலகின் குளிர்ச்சியான இந்த நகரம் குறித்து தெரியுமா?

உலகின் மிக குளிரான நகரமாக யாகுட்ஸ்க் கருதப்படுகிறது. இந்தக் குளிரில் நாம் வெற்றுடம்பில் நின்றால் விரைவில் மரணிப்போம்
பனி
பனிTwitter
Published on

யாகுட்ஸ்க் நகரம் ரஷ்யாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சகா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். குளிர்காலத்தில் இந்நகரத்தின் வெப்பநிலை -44 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்குக் குறையும். இந்நகரத்தின் மிகக் குறைந்த வெப்ப நிலை 1987 பிப்ரவரியில் -89 டிகிரி ஃபாரன்ஹீட் அளவாகப் பதிவாகியிருக்கிறது.

0 டிகிரியில் நீர் பனிக்கட்டியாகும். அதுவே - 44 டிகிரி ஃபாரன் ஹீட் என்றால் உயிர் வாழ்வது என்பது கடும் போராட்டமாக இருக்கும். இந்தக் குளிரில் நாம் வெற்றுடம்பில் நின்றால் விரைவில் மரணிப்போம். இந்தக் குளிரைத் தாங்கக் கூடிய சூடான கவச உடைகளைக் கொண்டு முழு உடலையும் மறைத்தால் மட்டுமே இங்கு வாழ்வது சாத்தியம்.

யாகுட்ஸ்க் நகரம் லீனா நதிக்கரையில் அமைந்திருக்கிறது. குளிர் காலத்தில் இந்நதி உறைந்து பனிக்கட்டியாகி விடும்.

இந்நகரத்தின் வரலாறு சில நூறாண்டுகளிலிருந்து துவங்குகிறது. கிபி 1632 ஆம் ஆண்டில் சைபீரியாவை ஆய்வு செய்த ரஷ்ய கோசாக்ஸ் இன மக்களால் இந்நகரத்தில் முதன்முறையாக மரங்களால் உருவாக்கப்பட்ட கோட்டை கட்டப்பட்டது.

கோசாக்ஸ் இன மக்கள் உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் புல்வெளிகளில் தோன்றிய கிழக்கு ஸ்லாவிய கிறித்தவ பாரம்பரிய மக்கள் குழுவாகும்.

உறைந்த ஏரி
உறைந்த ஏரிPexels

இவர்கள் அரை நாடோடிகளாகவும், அரை இராணுவமயமாக்கப்பட்ட மக்களாகவும் இருந்தனர். இவர்கள்தான் யாகுட்ஸ்க் நகரின் முதல் குடிமக்கள். பின்னர் இந்த நகரம் சிறைவாசிகளுக்காக நடத்தப்பட்டது. அதன் பிறகு கனிம வளங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே இது ஒரு முறையான நகரமாக மாறியது.

தற்போது இந்நகரத்தில் 2,50,000க்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.

யாகுட்ஸ்க் நகரத்தில் நவீன உயரமான கட்டிடங்கள், சோவியத் கால அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பழைய மரவீடுகள் எல்லாம் கலந்து இருக்கின்றன. இந்த நகரம் நூற்றுக்கணக்கான மீட்டர் ஆழமான உறைந்த மண்ணில் கட்டப்பட்டிருக்கிறது. இது ஒரு போதும் உருகாது.

பனி
பல சாம்ராஜ்ஜியங்களை வீழ்த்திய ரத்தம் குடிக்கும் நாடோடி வீரர்கள் - சிதியர்கள் கதை

பெரும்பாலான கட்டிடங்களின் அடித்தளப்பகுதிகள் கடினமான மரங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் கட்டிடங்களின் வெப்பம் கீழே இருக்கும் உறைந்த மண்ணை உருக்காது.

குளிர்காலத்தில் யாகுட்ஸ்க் நகரம் மிகக்குளிரான மூடுபனியால் மூடப்பட்டிருக்கும். குளிர்காலத்தில் தெருக்களில் நடமாடவே முடியாது. கோடைக் காலத்தில் நகரத்திற்குச் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இங்கு அருங்காட்சியகங்கள் மற்றும் திரையரங்குகள் உள்ளன. கோடைக் காலத்தில் லீனா நதியில் படகுகளில் பயணிக்கலாம். இந்தப் பயணத்தின் மூலம் அளவில்லா இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்கலாம்.

பனி பிரதேசம்
பனி பிரதேசம்Pexels

யாகுட்ஸ்க் நகரத்தைச் சுற்றி நிலக்கரி, தங்கம், சுரங்கம் போன்ற கனிம வளங்கள் உள்ளன. பல சுரங்க நிறுவனங்கள் தமது தலைமையகத்தை நகரத்தில் வைத்துள்ளன. சுரங்கத் தொழில்தான் யாகுட்ஸ்க் நகரின் முக்கியமான பொருளாதார நடவடிக்கையாகும். இந்த வட்டாரத்தில் விமானப் போக்குவரத்தை நடத்தும் யாகுடியா ஏர்லைன்ஸின் தலைமையகமும் யாகுட்ஸ்க் நகரத்தில்தான் உள்ளது.

பனி
தேசாந்திரியின் தடங்கள் : ஏன் சுவீடன், நார்வே சொர்க்கபுரியாக இருக்கிறது? | பகுதி 1

ரஷ்யத் தலைநகரம் மாஸ்கோவிற்கும் யாகுட்ஸ்க் நகருக்கும் இடையிலான தூரம் 8,468 கி.மீ. ஆகும். இரு நகரங்களும் லீனா நெடுஞ்சாலையால் இணைக்கப்பட்டுள்ளது. யசைகா கோடை விழா ஜூன் கடைசி வார இறுதியில் நகரில் நடைபெறும். அப்போது பல்வேறு கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுகள் நடைபெறும்.

பனி
லிச்சென்ஸ்டீன் எனும் பூலோக சொர்க்கம் - ஆஹா இப்படியும் ஒரு நாடா?

உலகின் அதிகமான குளிரைக் கொண்டுள்ள இந்த நகரத்திற்கு ஒரு முறை சென்று பாருங்கள். என்ன வெயில் என்று சகித்துக் கொள்வதாக நினைத்துக் கொள்ளும் நமக்கு இந்நகரின் குளிர் ஒரு கொடிய நரகமாக இருக்கும். ஆனால் அங்கே இருக்கும் மக்களுக்கோ அந்நகரம் அவர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் பிறந்த மண்.

பனி
எட்டி : இமயமலை பனி மனிதன் இருப்பது உண்மையா? - மர்ம உயிர் பற்றி ஆய்வாளர்கள் சொல்வதென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com