பாப்லோ எஸ்கோபார் நிஜ ரோலெக்ஸ் : ஒரு கொலம்பிய போதைப்பொருள் கடத்தல் மன்னனின் கதை! | பகுதி 1

எஸ்கோபரின் செல்வமும் புகழும் பெருகியதால், அவர் தன்னை ஒரு தலைவராகக் கொண்டாடப்பட வேண்டும் என்று விரும்பினார்
Pablo Escobar

Pablo Escobar

Twitter

பாப்லோ எமிலியோ எஸ்கோபார் கவிரியா ஒரு கொலம்பிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஆவார். அவரது வாழ்க்கைக் காலத்தில் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட கொகேயின் போதைப்பொருளில் 80 சதவீதம் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. அன்றைய காலத்தில் ஃபோர்ப்ஸ் இதழின் உலகின் டாப் 10 பணக்காரர்களில் அவரும் ஒருவர். ஒரு போதைப்பொருள் கடத்தல்காரன் உலகின் அதிபணக்காரர்களில் ஒருவராக எப்படி ஆக முடிந்தது என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இன்றளவும் உலகில் பல பில்லியன் டாலர் புழங்கும் சட்டவிரோத தொழில்களில் முன்னணியில் இருப்பது போதைப்பொருள் வர்த்தகம்தான்.

எஸ்கோபார் 1970 களின் முற்பகுதியில் கோகோயின் வர்த்தகத்தில் நுழைந்தார். மற்ற குற்றவாளிகளுடன் இணைந்து மெடலின் கார்டலை உருவாக்கினார். ஆதரவற்றவர்களுக்கான தொண்டு திட்டங்கள், கால்பந்து கிளப்புகளுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் அவர் மக்களிடையே பிரபலமடைந்தார். பின்னர் ஆயிரக்கணக்கானோரின் கொலைக்கு அவர்தான் காரணம் என்று தெரிந்த பிறகு அவருக்கு எதிராக பொதுக்கருத்து உருவாகியது.

Marl boro

Marl boro

Facebook

எஸ்கோபாரின் ஆரம்ப கால வாழ்க்கை

எஸ்கோபார் டிசம்பர் 1, 1949 அன்று கொலம்பிய நகரமான ரியோனெக்ரோ, ஆன்டியோகுயாவில் பிறந்தார். அவரது குடும்பம் பின்னர் என்விகாடோவின் புறநகர்ப் பகுதிக்கு குடிபெயர்ந்தது.

எஸ்கோபார் ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர். அவரது தாயார் பள்ளி ஆசிரியராக இருந்தபோது அவரது தந்தை விவசாயியாக பணிபுரிந்தார். சிறு வயதிலிருந்தே, எஸ்கோபார் தனது வறிய பின்னணியிலிருந்து எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற ஒரு தனித்துவமான லட்சியத்தைக் கொண்டிருந்தார்.

எஸ்கோபார் தனது குற்றவாழ்க்கையை ஆரம்பத்திலேயே துவங்கினார். கல்லறைகளில் இருக்கும் விலை உயர்ந்த கற்களைத் திருடி விற்றார். போலியான சான்றிதழ்களைத் தயாரித்து விற்றார். பிறகு கார்களைத் திருடத் தொடங்கினார். இறுதியில் கடத்தல் தொழிலில் இறங்கினார்.

எஸ்கோபாரின் ஆரம்பகால முக்கியத்துவம் அமெரிக்க சிகரெட் பிராண்டான மார்ல்போரோ சிகரெட்டுகளை யார் கடத்தி விற்பது என்ற சண்டையில் உருவானது. அதில் அவர் கொலம்பியாவின் கடத்தல் சிகரெட் சந்தையில் கணிசமான பங்கைக் கொண்டிருந்தார். இந்த கடத்தல் சிகரெட் அத்தியாயம் எதிர்கால போதைப்பொருள் மன்னனுக்கு ஒரு பயிற்சிக் களமாக இருந்தது என்றால் மிகையில்லை.

Pablo Escobar Family

Pablo Escobar Family

Twitter

எஸ்கோபரின் மனைவி, மகன் மற்றும் மகள்

1976 இல், எஸ்கோபார் 15 வயதான மரியா விக்டோரியா ஹெனாவோவை மணந்தார். தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர், ஒரு மகன், ஜுவான் பாப்லோ மற்றும் ஒரு மகள், மானுவேலா.

இன்று எஸ்கோபரின் மகன் செபாஸ்டியன் மரோக்வின் என்ற பெயரில் ஊக்கமளிக்கும் பேச்சாளராக (motivational speaker) உள்ளார். மாரோக்வின் கட்டிடக் கலையில் உயர் படிப்பு முடித்தார். 2015-ம் ஆண்டு அவர், “பாப்லோ எஸ்கோபார்: மை ஃபாதர்" எனும் புத்தகத்தை எழுதி வெளியிட்டார். இந்த நூல் உலகின் மிக மோசமான போதைப்பொருள் அரசனுடன் வளர்ந்த கதையைச் சொல்கிறது. மேலும் அவர் தனது தந்தை தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் அவர் தனது தந்தை பின்பற்றப்பட வேண்டிய முன்னுதாரணமான நபர் அல்ல என்று கூறினார். "ஒரு சமூகமாக நாம் ஒருபோதும் செல்லக்கூடாத பாதையை அவர் நமக்குக் காட்டினார். ஏனென்றால் அது சுய அழிவுக்கான பாதை. வாழ்வு பற்றிய நன்மதிப்புகளை இழக்கும் பாதை. அங்கு வாழ்க்கை முக்கியத்துவம் பெறுவதை நிறுத்திக் கொள்கிறது" என்றும் அவர் கூறினார். ஒரு போதைப்பொருள் மன்னனது மகன் இப்படி பேசுவது அதிசயமான ஒன்று.

எஸ்கோபாரின் பசுமையான மற்றும் விரிந்த தோட்டம். ஹசியெண்டா நெப்போல்ஸ் என்று அழைக்கப்படும், அதில் உலகெங்கிலும் உள்ள கவர்ச்சியான விலங்குகளால் நிரப்பப்பட்ட ஒரு மிருகக்காட்சிசாலை மற்றும் அதன் தோட்டங்களில் ஒன்றில் டைனோசர்களின் பெரிய சிற்பங்கள் ஆகியவை அடங்கும்.

Medellín Cartel

Medellín Cartel

Facebook

மெடலின் கார்டெல்

கோகோயின் வர்த்தகத்தில் கொலம்பியா ஆதிக்கம் செலுத்தியது தற்செயலாக அல்ல. 1970 களின் முற்பகுதியில், இந்நாடு கஞ்சாவின் முதன்மையான கடத்தல் இடமாக மாறியது.

ஆனால் கோகோயின் சந்தை வளரத் துவங்கியவுடன் கொலம்பியாவின் புவியியல் அமைவிடம் அதற்கு முக்கியமான களமாக அமைந்தது. தென் அமெரிக்காவின் வடக்கு முனையில் இருக்கும் கொலம்பியாவிற்கு அருகேதான் கோகோ சாகுபடி நடக்கும் மையைங்களைக் கொண்டிருக்கும் பெரு நாடும், பொலிவியா நாடும் அமைந்துள்ளது. இதனால் கொலம்பியா உலகளாவிய கொகோயின் சந்தையை அமெரிக்கா வழியாக அமைத்துக் கொண்டது. அமெரிக்காதான் போதைப்பொருளின் மிகப்பெரும் சந்தையாகும். இதனால் அமெரிக்காவிற்கு அருகில் இருக்கும் நாடாக கொலம்பியா இருந்ததால் ஒரு குறுகிய பயணத்தில் போதைப்பொருள் அமெரிக்காவை சென்றடைந்துவிடும்.

எஸ்கோபார், கோகோயின் வர்த்தகத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற விரைந்து செயல்பட்டார். 1975 ஆம் ஆண்டில், கொலம்பியாவின் மெடெல்லின் நகரத்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஃபேபியோ ரெஸ்ட்ரெப்போ கொலை செய்யப்பட்டார். அவரது கொலை, எஸ்கோபரின் உத்தரவின் பேரில் நடந்தது என்று நம்பப்படுகிறது. இக்கொலைக்கு பிறகு எஸ்கோபார் உடனடியாக அதிகாரத்தைக் கைப்பற்றி, உலகம் பார்த்திராத ஒன்றாக ரெஸ்ட்ரெபோ செய்து கொண்டிருந்த போதைப்பொருள் கடத்தல் செயல்பாட்டை விரிவுபடுத்தினார்.

Pablo Escobar

Pablo Escobar

Twitter

தன்னை ஒரு ராபின் ஹூடாக மக்களிடம் நிலை நிறுத்திக்கொண்டார்

எஸ்கோபாரின் தலைமையின் கீழ், பொலிவியா மற்றும் பெருவில் அதிக அளவு கோகோ பேஸ்ட் வாங்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. பிரபலமற்ற மெடலின் கார்டலை பிரபலமாக்க எஸ்கோபார் ஒரு சிறிய குழுவுடன் இணைந்து பணியாற்றினார்.

1980களின் நடுப்பகுதியில், எஸ்கோபார் 30 பில்லியன் டாலர் மதிப்புடைய நிகர மதிப்பைக் கொண்டிருந்தார். மற்றும் ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் பூமியில் உள்ள டாப் 10 பணக்காரர்களில் ஒருவராக பெயரிடப்பட்டார். ரொக்கம் அவரிடம் தண்ணியாக பாய்ந்தது. எஸ்கோபார் தனது அளப்பறிய பணத்தை கொண்டு செல்வதற்காகவே ஒரு லியர்ஜெட் விமானத்தை வாங்கினார்.

அந்த நேரத்தில், எஸ்கோபார் அமெரிக்காவிற்குள் கடத்தப்பட்ட கோகோயின் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றைக் கட்டுப்படுத்தினார். ஒவ்வொரு நாளும் 15 டன்களுக்கு மேல் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. எஸ்கோபாரின் மெடலின் கார்டெல் ஒரு வாரத்திற்கு 420 மில்லியன் டாலர்களை ஈட்டியது.

எஸ்கோபரின் செல்வமும் புகழும் பெருகியதால், அவர் தன்னை ஒரு தலைவராகக் கொண்டாடப்பட வேண்டும் என்று விரும்பினார். சில வழிகளில் அவர் தன்னை ஒரு ராபின் ஹூட் போன்ற நபராக நிலைநிறுத்திக் கொண்டார். பல உள்ளூர் மக்கள் எஸ்கோபாரை உண்மையில் அப்படிக் கொண்டாடினர். அவர் ஏழைகளுக்கான சமூக திட்டங்களை விரிவுபடுத்தும் வண்ணம் ஏராளமான பணத்தை செலவழித்தார்.

பின்னர் போலீசில் பிடிபட்டாலும் அவர் தனது சிறையை மாளிகை போல வடிவமைத்து ஆடம்பர வசதிகளுடன், தனது அடியாட்களுடன் வாழ்ந்தார். இப்படி ஒரு கூத்தை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அதை பாகம் 2-ல் காண்போம்..

2ம் பாகம்

Pablo Escobar

பாப்லோ எஸ்கோபார் : நார்கோஸ் - நெட்பிலிக்ஸ் சீரியலாக வரும் அளவிற்கு என்ன செய்தார்?| பாகம் 2

Pablo Escobar

பாப்லோ எஸ்கோபார் : நார்கோஸ் - நெட்பிலிக்ஸ் சீரியலாக வரும் அளவிற்கு என்ன செய்தார்?| பாகம் 2

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com