”ஆடம்பர செலவுகள் வேண்டாம்!” - எச்சரிக்கும் பெசோஸ்; பொருளாதார மந்தநிலை உருவாகிறதா?

விடுமுறை காலத்தில் பெரிய கொள்முதல்கள், ஆடம்பர செலவுகள் எதுவும் செய்ய வேண்டாம் எனவும், அவற்றை ஒத்திவைப்பது நல்லது எனவும் எச்சரித்துள்ளார் ஜெஃப் பெசோஸ்.
Jeff Bezos
Jeff BezosTwitter
Published on

அமெரிக்காவில் மந்தநிலை உருவாகும் அபாயம் இருக்கிறது என்பதால், பணத்தை தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கிறார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்.

விடுமுறை காலத்தில் பெரிய கொள்முதல்கள், ஆடம்பர செலவுகள் எதுவும் செய்ய வேண்டாம் எனவும், அவற்றை ஒத்திவைப்பது நல்லது எனவும் எச்சரித்துள்ளார் ஜெஃப் பெசோஸ்.

குறிப்பாக வரும் மாதங்களில் வீணான செலவுகள் எதுவும் செய்யவேண்டாம் என அவர் கூறியுள்ளார். முக்கியமாக அமெரிக்கர்கள் கார், டிவி போன்ற ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்திக்கொண்டு, பணத்தை சேமித்து வைப்பது நல்லது என தெரிவித்திருக்கிறார்.

உலகின் பல நாடுகளில் பொருளாதார மந்தநிலை நிலவிவருகிறது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

நெட் டேவிஸ் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வின் படி 2023 ஆம் ஆண்டில் உலகம் முழுவதுமே இதனால் பாதிக்கப்பட 98% வாய்ப்புகள் இருக்கிறது. இதற்கு முன்னர் 2008ஆம் ஆண்டில் இந்த அளவு அதிகமான மந்தநிலை நிலவியதாக சி என் என் செய்தி தளம் தெரிவிக்கிறது.

2007 ஆண்டு டிசம்பர் முதல் 2009 ஜூன் வரை நீடித்த இந்த தி கிரேட் ரெசெஷன் எனப்படும் மந்தநிலை உலக பொருளாதாரத்தையே தலைகீழாக மாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Jeff Bezos
பொருளாதார கஷ்டத்தில் பிரிட்டன் மக்கள், உதவிக்கரம் நீட்டிய நிறுவனம் - விரிவான தகவல்கள்

இந்நிலையில், சி என் என் தளத்திற்கு பேட்டியளித்தார் பெசோஸ். அமெரிக்காவில் தற்போது மக்கள் பணவீக்கத்துடன் போராடி வருகின்றனர் என குறிப்பிட்ட அவர் சிக்கனத்தை கடைப்பிடித்தால் தான் பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்பட்டாலும், அதை சமாளிக்க முடியும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

“நீங்கள் ஒரு பெரிய டிவி வாங்கும் எண்ணத்தில் இருக்கிறீர்கள் என்றால், கொஞ்சம் பொறுத்து, என்ன நடக்கிறது என்று பாருங்கள். என்னென்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதை கவனியுங்கள். புதிய கார், குளிர்சாதனபெட்டி என எதை நீங்கள் வாங்க நினைத்தாலும், பொறுமைக் காப்பது சிறந்தது.” என்றார் அமேசான் நிறுவனர்.

மேலும், பொருளாதாரம் தற்போது சரியில்லை எனக் குறிப்பிட்ட பெசோஸ், உலகளவில் நிறுவனங்கள் லே ஆஃப்களை செய்து வருகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

Jeff Bezos
Jeff Bezos : "என் வாழ்நாளுக்குள் பெரும்பாலான சொத்துக்களை தானம் செய்வேன்"- அமேசான் நிறுவனர்

ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து, மெடா நிறுவனமும் பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்திருந்த நிலையில், அமேசான் நிறுவனமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இன்னொரு புறம், பத்திரிகையாளர் மைக் எல்கன் பெசோஸின் இந்த கருத்தை விமர்சித்துள்ளார். இவர் வாங்கவேண்டாம் எனக் குறிப்பிட்ட சில பொருட்கள் அமேசானில் கிடைக்காத தயாரிப்புகள் என்பதால் தான் இந்த கருத்தை முன்வைக்கிறார் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com