இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோ க்ளிப் இணையவாசிகளை நடுங்கவைத்து வருகிறது. அர்ஜென்டினா நாட்டில் உள்ள மருத்துவமனையில் தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 3 மணிக்கு பதிவான அந்த 38 வினாடி சிசிடிவி காட்சியை மில்லியன் கணக்கான மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வீடியோவில் மருத்துவமனையில் எலக்ட்ரிக் கதவுகள் ஹாரர் படங்களில் வருவது போல தானாக திறப்பது தெரிகிறது. பின்னர் தானாகவே மூடவும் செய்கிறது. ஆனால் அதன் வழியாக யாருமே உள்வரவில்லை.
இது சாதாரணமாக தோன்றினாலும் இதன் பின்னர் அங்கு நடந்தவை சாதாரணமானவை அல்ல. அந்த மருத்துவமனையின் வாட்ச்மேன் தானாக எழுந்து நோயாளி வந்திருப்பது போலவே நடந்துக்கொள்கிறார்.
அவர் ஆட்கள் உள்ளே வராமல் இருப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் தடையை எடுத்தார். பின்னர் அவர் அட்டையையும் காகிதத்தையும் எடுத்து பெயர் மற்றும் விவரங்களை எழுதுகிறார்.
நோயாளியிடம் ஏதோ பேசியபடி நடந்து சென்று நோயாளிக்காக சக்கர நாற்காலியை தயார் செய்தார். ஒரு மருத்துவமனையில் இது சாதாரணமாக நடக்கக்கூடிய நிகழ்வுதான். ஒரே ஒரு மாற்றம் இங்கு நோயாளியாக யாருமே வரவில்லை அல்லது நோயாளி நம் கண்களுக்குத் தெரியவில்லை.
வீடியோவைக் காண:
பதிவுகளின் படி வீடியோவில் காணப்பட்ட 3 மணி 36 நிமிடங்களில் காவலாளி ஒரு வயதான பெண்ணை அனுமதித்துள்ளார்.
சிறிது நேரத்துக்குப் பிறகு அவர் அந்த பெண்மணிக்கு யாரும் மருத்துவம் பார்க்கவில்லை என்பதை உணர்ந்து விசாரித்திருக்கிறார்.
பின்னர் தான் தெரிந்தது அவர் பதிவில் எழுதிய பெயர், வயதில் இருந்த பெண் முந்தைய நாள் தான் அந்த மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார். இதனைக் கேட்டதும் காவலாளி அதிர்ச்சியடைந்ததாக சிலர் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை விளக்கம் அளித்தது. அதில், இங்கு பேயெல்லாம் ஒன்றும் இல்லை. காவலாளி விளையாட்டுத்தனமாக இவ்வாறு செய்தார் என்று கூறியுள்ளனர்.
அந்த மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் Guillermo Capuya, தானியங்கி கதவுகளில் பிரச்னை இருந்ததாக கூறியுள்ளார். அது பத்து மணி நேரத்தில் 28 முறை தானாக திறந்ததாக கூறினார். ஆனாலும் நெட்டிசன்கள் மருத்துவமனையின் விளக்கத்தை ஏற்க விரும்பவில்லை பலரும் பல கதைகளை கட்டி வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust