பாலிக்கு ஒரு ட்ரிப் தான்! சுற்றுலா சென்றதன் மூலம் கோடீஸ்வரர்களான சூப்பர் ஜோடி - எப்படி?

பாலிக்கு சுற்றுலா சென்ற தம்பதி இனிமையான பல நினைவுகளை உருவாக்கியதுடன், தங்களது சிறந்த எதிர்காலத்திற்கான சில முக்கிய முடிவுகளையும் எடுத்துள்ளனர். இந்த முடிவு அவர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கியுள்ளது.
How A Trip To Bali Changed The Lives Of This Engineer Couple? Earning Rs 18 Lakh Per Month
How A Trip To Bali Changed The Lives Of This Engineer Couple? Earning Rs 18 Lakh Per Month Twitter
Published on

நாள் முழுவதும் ஓடி ஓடி உழைத்து அலுத்துப்போய் இருக்கும் மக்களுக்கு சுற்றுலா என்பது மிகமுக்கியத் தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, இன்றைய தலைமுறையினர் சுற்றுலாவுக்காக தங்களது நேரத்தையும், பணத்தையும் ஒதுக்கி அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்க முடிகிறது.

ஏனென்றால், சுற்றுலா செல்வது மனதுக்கு அமைதியை தருவது மட்டும் இல்லாமல் தங்களது குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் விஷயமாக இருக்கிறது. இப்போதெல்லாம், நண்பர்கள் அல்லது துணையுடன் கடல் கடந்து சுற்றுலா செல்வது புதிய ட்ரெண்டிங் ஆக மாறி இருக்கிறது.

இப்படி, இந்தோனேஷியாவில் உள்ள பாலிக்கு சுற்றுலா சென்ற தம்பதி இனிமையான பல நினைவுகளை உருவாக்கியதுடன், தங்களது சிறந்த எதிர்காலத்திற்கான சில முக்கிய முடிவுகளையும் எடுத்துள்ளனர். இந்த முடிவு அவர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கியுள்ளது.

அதாவது,மோஹித் அலுவாலியா மற்றும் ஜக்ஜ்யோத் கவுர் என்ற பொறியாளர் தம்பதியினர் கடந்த 2017 ஆம் ஆண்டு பாலிக்கு சுற்றுலா மேற்கொண்டனர்.

இந்த பயணத்தின் போது அவர்களுக்கு பிளாக் பிரிண்டிங் குறித்த அறிமுகம் கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தி இந்தியாவில் புதிய தொழிலைத் துவங்க முடிவு செய்த பொறியாளர் தம்பதி அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.

பாலியில் இருந்த சந்தைகளில் இந்திய துணிகள் பிளாக் பிரிண்ட்டுடன் விற்பனை செய்யப்பட்டு, அதிக மதிப்பு பெறுவதை மோஹித் அலுவாலியா மற்றும் ஜக்ஜ்யோத் கவுர் தம்பதி கவனித்தனர்.

இந்த தயாரிப்புகளுக்கு இந்தியாவில் அதிக முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்பதும் அவர்களது கண்களுக்கு புலப்பட்டது. இந்த சிந்தனையை மூலதனமாக வைத்து புதிய தொழிலை துவங்குவதற்காக 10 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த IT பணியை விட்டு விட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு 'ராமே' (Raamae) என்ற நிறுவனத்தை துவங்கினார்கள்.

இந்த நிறுவனத்தை துவங்குவதற்கு முன்னதாக, பிளாக் பிரிண்டிங், தயாரிப்பு, ஜவுளி வணிகங்கள் மற்றும் சந்தைகளை ஆய்வு செய்த அவர்கள் பிளாக் பிரிண்டிங் செயல்பாடுகளை தெரிந்து கொள்ள ஜெய்ப்பூரில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டு நாள் பயிற்சியில் பங்கு பெற்றனர்.

தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்து கொண்ட இந்த ஜோடி பிளாக் பிரிண்டிங் தயாரிப்பு, அச்சு, வண்ணங்கள், பாரம்பரியம், வடிவமைப்பு குறித்து அறிந்து கொண்டனர்.

இதையடுத்து, 2019 ஆம் ஆண்டில் 'ராமே' என்ற நிறுவனத்தைத் துவங்கிய அவர்கள் வாலட்கள், பைகள், பர்ஸ்கள் மற்றும் தலையணை உறைகள் ஆகியவற்றை பிளாக் பிரிண்டிங்கில் வழங்கி வருகிறார்கள்.

How A Trip To Bali Changed The Lives Of This Engineer Couple? Earning Rs 18 Lakh Per Month
Travel: சிங்கபூர் முதல் பாலி வரை - சீனியர் சிட்டிசன்களுக்கான டிராவல் டெஸ்டினேஷன்ஸ்

பொதுவாக, பிளாக் பிரிண்டிங்கில் பயன்படுத்தப்படும் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை போன்ற நிறங்களை தவிர்த்து சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு இயற்கை உரங்களை இவர்கள் பயன்படுத்தினார்கள்.

அதே போல, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் நவீனத்துடன் சேர்த்து பாரம்பரியம் மிக்க வடிவமைப்புகளையும் இதில் கொடுத்தனர். இந்த நடவடிக்கை மூலம் 4 லட்சம் ரூபாய் முதலீட்டில் துவங்கிய தொழில் தற்போது 18 லட்சம் ரூபாய் வரை மாத வருமானம் ஈட்டுகிறது.

இப்போது ராஜஸ்தான், மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், மைசூர், கோவா, கேரளா, இம்பால், அசாம் மற்றும் மிசோரம் உள்ளிட்ட இந்திய நகரங்களில் இருந்தும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் அமெரிக்காவில் இருந்தும் தங்களுக்கான ஆர்டர்களை பெறுகிறார்கள் இவர்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com