ஜப்பான் : உலகின் பழமையான ஓட்டல் இது தான்! எப்போது கட்டப்பட்டது?

தகவல்களின் அடிப்படையில், இந்த விடுதியை 52 தலைமுறைகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் பராமரித்து வருகின்றனர். கால மாற்றத்துக்கு ஏற்றவாறு மார்டனான மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டன.
ஜப்பான் : உலகின் பழமையான ஓட்டல் இது தான்! எப்போது கட்டப்பட்டது?
ஜப்பான் : உலகின் பழமையான ஓட்டல் இது தான்! எப்போது கட்டப்பட்டது?ட்விட்டர்
Published on

நாம் வெளியூர்களுக்கு செல்லும்போது எங்கு தங்குவது என்பது தான் நமக்கு முதல் யோசனையாக இருக்கும். நாள் முழுவதும் சுற்றித்திரிந்தாலும், படுத்து உறங்க பாதுகாப்பான, நல்ல இடத்தை தேடி அலைவோம்.

டெண்ட், சத்திரம், காட்டேஜ், ஓட்டல்கள் என நமக்கு தங்குவதற்கு நிறைய ஆப்ஷன்கள் இருக்கின்றன.

அந்த காலத்தில் எல்லாம் சத்திரம் தான், இப்போது தான் ஓட்டல்கள் உருவெடுத்தன என்றால், அப்படியல்ல எனக் கூறுகிறது கின்னஸ் உலக சாதனைகள்.

கின்னஸ் உலக சாதனைகள் உலகின் மிகப் பழமையான விடுதியை கண்டறிந்துள்ளது. நிஷியமா ஓன்சேன் கெயுன்கான் எனப் பெயர்கொண்ட அந்த விடுதியானது கி.பி 705ல் திறக்கப்பட்டுள்ளது.

இந்த விடுதி ஜப்பானில் அமைந்துள்ளது. சுமார் 1,318 ஆண்டுகள் பழமையான இந்த விடுதி ஜப்பானின் அகைசி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது.

ஃபுஜிவாரோ மாஹிதோ என்பவர் இதனை 705 ஏ டி இல் நிறுவினார். ஃபுஜிவாரோவின் குடும்பத்தார், அந்த காலத்தில் விருந்தோம்பலில் சிறந்து விளங்கினர். இதனால், இந்த விடுதி நிறுவப்பட்டதாம்.

கெயுன்கான் காலத்தில் இந்த விடுதி நிறுவப்பட்டதால் இந்த பெயர் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது

ஜப்பான் : உலகின் பழமையான ஓட்டல் இது தான்! எப்போது கட்டப்பட்டது?
கண்ணுக்கே தெரியாத வீடு - எங்கே இருக்கிறது இந்த invisible house? என்ன ஸ்பெஷல்?

தகவல்களின் அடிப்படையில், இந்த விடுதியை 52 தலைமுறைகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் பராமரித்து வருகின்றனர். கால மாற்றத்துக்கு ஏற்றவாறு மார்டனான மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டன.

இயற்கையின் அழகை கண்டு ரசிக்கும் வகையில் விடுதியின் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. விடுதிக்கு அருகில் நீரூற்றுகளும் இருக்கிறது.

இந்த விடுதி 705 ஏடி முதல் இன்றுவரை மக்கள் பயன்பாட்டில் தான் இருக்கிறது

ஜப்பான் : உலகின் பழமையான ஓட்டல் இது தான்! எப்போது கட்டப்பட்டது?
1,375 அடி ஆழம்; உலகின் முதல் பாதாள ஓட்டல் - ஒரு இரவுக்கு கட்டணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com