Isang Yun: அன்று உளவாளி; இன்று இரு கொரியாவும் கொண்டாடும் இசை கலைஞன் - ஒரு நெகிழ்ச்சி கதை!

இசங் யுன் வடகொரியத் தலைவரின் அழைப்பை ஏற்று, அவரைச் சந்தித்தது தென் கொரியத் தலைமையை அதிருப்தியில் ஆழ்த்தியது. 1967 ஆம் ஆண்டு வாக்கில், அப்போது தென் கொரியாவின் உயர் தலைவராக இருந்த பார்க் சுங் ஹீ (Park Chung Hee), தன் அதிகாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டார்.
Isang Yun : இசையால் கொரியாவை இணைக்க முயன்ற - உளவாளியாக முத்திரை குத்தப்பட்டது ஏன்?
Isang Yun : இசையால் கொரியாவை இணைக்க முயன்ற - உளவாளியாக முத்திரை குத்தப்பட்டது ஏன்?ட்விட்டர்
Published on

ஒரு நாடு இரண்டாகப் பிரியும் போது, ஓர் இசைக் கலைஞரால் என்ன செய்துவிட முடியும். அதிகபட்சமாக வருத்தப்பட்டு ஒரு பாடலையோ அல்லது ஒரு ஆல்பத்தயோ வெளியிடலாம். மிகப் பிரபலமான இசைக் கலைஞராக இருந்தால் தன் நாட்டின் அதிபர், பிரதமர் போன்றவர்களைச் சந்தித்து கோரிக்கை வைக்கலாம்.

ஆனால் இங்கு ஒரு இசைக் கலைஞர், தன் கண் எதிரே தன் நாடு இரண்டாகப் பிரிவதைப் பார்த்து, மீண்டும் அந்நாட்டை ஒருங்கிணைக்க தன் வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவிட்டு இருக்கிறார். 

அப்பேர்ப்பட்ட உன்னத இசைக் கலைஞரின் பெயர் இசங் யுன் (Isang Yun). இவருக்குக் கடந்த 2010 ஆம் ஆண்டு தென்கொரியாவின் தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள டாங்யங் (Tongyeong) என்கிற சிறு நகரத்தில் ஒரு சிலை நிறுவப்பட்டது. 

அச்சிலையை உருவாக்கியது வடகொரியாவைச் சேர்ந்த Mansudae Art Studio என்கிற நிறுவனம் என்பது கவனிக்கத்தக்கது. இப்படி வட கொரியாவில் உருவாக்கப்பட்ட ஒரு சிலையை, எப்படி தென் கொரியா தன் நிலப்பரப்பில் நிறுவ அனுமதித்தது? 

தென்கொரியாவின் தெற்கு கடற்கரை பகுதியில் சன்சியாங் (Sancheong) என்கிற மாகாணத்தில் 1917 ஆம் ஆண்டு பிறந்தார் இசங் யுன்.

மிக இளம் வயதிலேயே அவரது குடும்பம் டாங்யங் நகரத்துக்கு அருகில் ஒரு கிராமத்தில் குடியேறியது.

பதின் பருவத்திலேயே கொரிய சுதந்திர இயக்கங்களில் பங்கெடுத்தார். எதிர்ப்பு இயக்கங்களோடு திரை மறைவாகச் செயல்பட்டது மற்றும் பங்களிப்பின் காரணமாகச் சிறையில்கூட பொழுதைக் கழித்திருக்கிறார் இந்த இசைக் கலைஞர்.

1940களில் ஜப்பானின் ஓசாகா நகரத்துக்குச் சென்று இசையமைப்பது குறித்துப் படித்தார். அங்கிருந்து திரும்பியவர் டாங்யங் நகரத்திலேயே இசை கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். 1945ஆம் ஆண்டு வாக்கில்  இரண்டாக உடைந்தது கொரியா.

Isang Yun : இசையால் கொரியாவை இணைக்க முயன்ற - உளவாளியாக முத்திரை குத்தப்பட்டது ஏன்?
நாய்க்கு தங்க சிலை : வட கொரியா கிம் -ஐ தெரியும் இந்த துர்க்மெனிஸ்தான் அதிபரை தெரியுமா?

ஜப்பானிடமிருந்து கொரியா விடுதலை பெற்ற பிறகு 1955 ஆம் ஆண்டு சீயோல் கலாச்சார பரிசை வென்ற முதல் இசைக் கலைஞர் இசங் யுன்தான்.

அதனைத் தொடர்ந்து அவர் பாரிஸ் நகரத்திற்கும், அதன்பிறகு பெர்லின் நகரத்திற்கும் பயணித்தார். அங்குதான் அவருக்கு ஒன்றுபட்ட கொரியா தொடர்பான பார்வை உருவெடுக்கத் தொடங்கியது. தன் நாட்டின் சுதந்திரத்துக்காகப் பங்களித்தவருக்கு, அவருடைய நாடு இரண்டாக உடைவதை எப்படிப் பார்க்க முடியும்.

வடகொரியா உடன் நெருங்கிய தொடர்பு

தன் சிந்தனையில் உதயமான ஒன்றுபட்ட கொரியா குறித்த யோசனையே வெறுமனே மனதில் தேக்கி வைத்துக் கொள்ளாமல், செயலில் காட்டத் தொடங்கினார். ஜெர்மனியின் தலைநகரத்தில், ஒன்றுபட்ட கொரியா குறித்து வடகொரியாவின் பல்வேறு அதிகாரிகள் மற்றும் ராஜீகரீதியான தூதர்கள் போன்றவர்களை அடிக்கடி சந்தித்துப் பேசும் அளவுக்கு இசங் யுன்னுக்கு செல்வாக்கு இருந்தது.

அப்போது வடகொரியாவும் இசங் யுன்னை பெருமதிப்போடு நடத்தியது. அந்த மரியாதையின் வெளிப்பாடாக 1963 ஆம் ஆண்டு, வடகொரியாவின் அதிஉயர் தலைவராக இருந்த இரண்டாம் கிம் சாங், இசைக் கலைஞர் இசங் யுன்னை வடகொரியா வருமாறு அழைப்பு விடுத்தார்.

இரண்டாம் கிம் சாங்
இரண்டாம் கிம் சாங்Twitter

இசங் யுன் வடகொரியத் தலைவரின் அழைப்பை ஏற்று, அவரைச் சந்தித்தது தென் கொரியத் தலைமையை அதிருப்தியில் ஆழ்த்தியது. 1967 ஆம் ஆண்டு வாக்கில், அப்போது தென் கொரியாவின் உயர் தலைவராக இருந்த பார்க் சுங் ஹீ (Park Chung Hee), தன் அதிகாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டார்.

இசைக் கலைஞர் இசங் யுன் உடன் 34 பேரும் கொரியன் சென்ட்ரல் இன்பர்மேஷன் ஏஜென்சி என்று அழைக்கப்பட்ட உளவு அமைப்பால் மேற்குப் பெர்லினில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

வடகொரியா உடனான தொடர்புகளைச் சுட்டிக்காட்டி, இசங் யுன் ஒரு உளவாளி எனக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிற்காலத்தில் அவருக்கு அந்த தண்டனை பத்தாண்டுகளாகக் குறைக்கப்பட்டது. இசங் யுன் தென் கொரியச் சிறையில் துன்புறுத்தப்பட்டதாகவும், பல உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுத் துன்பப்பட்டதாகவும் யுன் பீஸ் ஃபவுண்டேஷன் என்கிற அமைப்பு கூறுகிறது. 

நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை வைத்து தன் கருத்தை வெளிப்படையாகக் கூறி வந்த இசங் யுன் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிராகச் சர்வதேச அளவில் பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

இதில் இகோர் ஸ்ட்ராபென்ஸ் (Igor Stravinsky), கார்ல்ஹேன்ஸ் ஸ்டாக்ஹாசென் (Karlheinz Stockhausen) ஆகியோர் அடக்கம். சர்வதேச அதிருப்தியைத் தொடர்ந்து இசங் யுன்னை 1969 ஆம் ஆண்டு விடுதலை செய்தது தென் கொரியா.

சிறையிலிருந்து வெளிவந்த இசங் யுன், உடனடியாக மேற்குப் பெர்லினுக்கு திரும்பினார். தொடர்ந்து வடகொரியாவுக்கும் பயணித்தும், அங்குள்ள அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசியும் வந்தார்.

ஜெர்மனிக்குத் திரும்பிய இசங் யுன், தொடர்ந்து இசையமைத்து வந்தார் அதே நேரத்தில் தென்கொரியா ஜனநாயகமயமாக வேண்டும் என்பதற்கும் தன் ஆதரவைத் தெரிவித்து வந்தார். 1979 ஆம் ஆண்டு பார்க் சாங் கொல்லப்பட்ட பிறகு ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு என பல்வேறு பிரச்சனைகளைத் தொடர்ந்து சுன் டூ ஹ்வன் (Chun Doo Hwan) என்பவர் அடுத்த உயர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் இசங் யுன்னை மிகக் கடுமையாகப் பாதித்தது. அதனைத் தொடர்ந்து Exemplum in Memoriam Kwangju-யை ஆல்பத்தை வெளியிட்டார் என்கிறது என்கே நியூஸ். ஆர்க் என்கிற வலைத்தளம். அதை 1982ஆம் ஆண்டு பியாங்யங் நகரக் கச்சேரியிலும் வாசித்தார்.

இசங் யுன் தொடர்ந்து தென் கொரியாவின் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்தாலும், வட கொரியாவால் சகல மரியாதையோடு நடத்தப்பட்டார். கடந்த 1984ஆம் ஆண்டு இரண்டாம் கிம் சங் யுன் "இசங் மியூசிக் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்" என்கிற பெயரில் ஒரு அமைப்பையே உருவாக்கினார். அதோடு யுன் பெயரில் ஒரு இசைத் திருவிழாவையும் தொடங்கினார்.

Isang Yun : இசையால் கொரியாவை இணைக்க முயன்ற - உளவாளியாக முத்திரை குத்தப்பட்டது ஏன்?
வட கொரியா: கிம் ஜாங் உன் வம்சத்தின் விறுவிறுப்பான கதை | பகுதி 1

அந்த உன்னதக் கலைஞரின் மனதில் "ஒருங்கிணைந்த கொரியாவே" நிறைந்து இருந்தது. ஒரு கட்டத்தில் இரு தரப்பு அரசங்களிடமும் பேசி இசை பரிமாற்ற  நிகழ்ச்சிகளை நடத்தக் கோரினார்.

அந்த முயற்சி 1998ஆம் ஆண்டு பலன் கொடுத்தது. கொரியா இரண்டாகப் பிரிந்து சுமார் 53 ஆண்டுகளுக்குப் பிறகு பியாங்யங் நகரத்தில் சியோல் பாரம்பரிய இசைத் திருவிழா நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சியோல் நகரத்தில் பியாங்யங் இசைக் குழுவின் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

1995ஆம் ஆண்டு காலமான இசங் யுனா ஒருநாளும் தன் குழந்தைப் பருவத்தில் வளர்ந்த டாங்யங் (Tongyeong) நகரத்துக்குச் செல்ல முடியவில்லை. அவர் இறந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு தான் தென் கொரிய அரசு, அவர் மீது உளவு பார்த்ததாகக்  பொய் குற்றம் சுமத்தப்பட்டதாக ஒப்புக் கொண்டது.

கடந்த 2010ஆம் ஆண்டு தான் தென் கொரியாவில் உள்ள டாங்யங் நகரத்தில், வட கொரியாவின் Mansudae Art Studio என்கிற நிறுவனம் உருவாக்கிய இசங் யுன்னின் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை, இசங் யுன் கண்ட ஒருங்கிணைந்த கொரியா கனவின் தொடக்கப் புள்ளியாகக் கூட அமையலாம். அமையும் என நம்புவோம்.

Isang Yun : இசையால் கொரியாவை இணைக்க முயன்ற - உளவாளியாக முத்திரை குத்தப்பட்டது ஏன்?
வட கொரியா: கிம் ஜாங் உன் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்துவது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com