ஐஸ்லாந்து : பல வாரங்களாக தொடர்ந்து நிலநடுக்கம்; வெடித்து சிதறிய எரிமலை | video

எரிமலை வெடிப்பு எச்சரிக்கை காரணமாக மீன்பிடி நகரமான கிரின்டாவிக் நகரில் இருந்து கடந்த மாதம் சுமார் 4,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஐஸ்லாந்து : பல வாரங்களாக தொடர்ந்து நிலநடுக்கம்; வெடித்து சிதறிய எரிமலை | video
ஐஸ்லாந்து : பல வாரங்களாக தொடர்ந்து நிலநடுக்கம்; வெடித்து சிதறிய எரிமலை | videoTwitter
Published on

ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை வெடித்து சிதற தொடங்கியது. பல வாரங்களாக நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் எரிமலை வெடித்து சிதறியுள்ளது. எரிமலை வெடிப்புக்கு முன்பாக நிலநடுக்கம் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ராய்ட்டர்ஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, பூமியின் மேற்பரப்பில் உள்ள பிளவு, தோராயமாக 3.5 கி.மீக்கு விரிவடைந்துள்ளது.

எரிமலை வெடிப்பு எச்சரிக்கை காரணமாக மீன்பிடி நகரமான கிரின்டாவிக் நகரில் இருந்து கடந்த மாதம் சுமார் 4,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அக்டோபர் மாதத்திற்கு பிறகு, ரெய்காவிக் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகரித்தது.

வானிலை ஆய்வின் படி ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்காவிக் தென்மேற்கில் சுமார் 40 கிமீ (25 மைல்) தொலைவில் அமைந்துள்ள கிராமத்தை நோக்கி தரைப் பிளவுகள் நீண்டுள்ளன. அந்த கிராமவாசிகள் ’தங்கள் கிராமம் வரைப்படத்திலிருந்து காணாமல் போயிவிடுவோமோ’ என்று அஞ்சுகின்றனர்.

விஞ்ஞானிகள் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி இரண்டு மைல் பள்ளத்தில் பரவியிருக்கும் தீவிர எரிமலை செயல்பாட்டைக் கண்காணித்து வருகின்றனர்.

ஐஸ்லாந்து : பல வாரங்களாக தொடர்ந்து நிலநடுக்கம்; வெடித்து சிதறிய எரிமலை | video
இந்தியாவில் இப்போதைக்கு செயலில் இருக்கும் ஒரே எரிமலை - எங்கே இருக்கிறது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com