வாரத்தின் சிறந்த நாள் வெள்ளி தான்! கின்னஸ் சாதனைகள் அறிவிப்பு- நெட்டிசன்கள் கருத்து என்ன?

Monday ட்வீட்டை ரீட்வீட் செய்த கின்னஸ் சாதனைகள் பக்கம், வாரத்தின் சிறந்த நாள் ஆக வெள்ளிக் கிழமையை தேர்வு செய்துள்ளது.
friday
fridaytwitter

இந்த பதிவிற்கு ஆதரவாக கமன்ட் செக்ஷனில் நெட்டிசன்கள் கருத்துகளை தெறிக்கவிட்டனர்.

இந்நிலையில், தற்போது அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்த கின்னஸ் சாதனைகள் பக்கம், வாரத்தின் சிறந்த நாள் ஆக வெள்ளிக் கிழமையை தேர்வு செய்துள்ளது.

அந்த ட்வீட்டில்,"எனில் இது வெள்ளிக் கிழமையை வாரத்தின் சிறந்த தினமாக மாற்றுகிறது" என தலைப்பிடப்பட்டிருந்தது.

இதற்கும் நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒரு தரப்பு இந்த கருத்தை ஏற்றுக்கொண்டாலும், மற்றொரு தரப்பு, சனிக் கிழமையை தான் சிறந்த தினம் என அறிவிக்கவேண்டும் என சொல்லி வருகின்றனர்.

பள்ளிக்கூடம், கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் என, உலகளவில் மக்களுக்கு திங்கள் கிழமை என்பது விரும்பத்தகாத நாளாக தான் இருக்கிறது. வாரத்தின் துவக்கமே நமக்கு சாதகமாக அமையாவிட்டால், வாரம் முழுவதும் அலுப்பும் சோர்வும் இருக்கும், நம் மன நிலையும் பாதிக்கும் என்பது பரவலான கருத்து.

திங்கள் வந்தாலே வெள்ளி கிழமை எப்போது வரும், இரண்டு நாட்கள் விடுமுறை எப்போது என தான் பெரும்பாலும் மக்கள் சிந்திக்கின்றனர். நண்பர்களை சந்திப்பது, வெளியில் செல்வது, குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது, நல்ல உறக்கம், பிடித்தவற்றை சாப்பிடுவது என மனதை இளக செய்யும் விஷயங்களை செய்யவே வார இறுதியை நோக்கி காத்திருக்கின்றனர்.

வாரத்தின் மோசமான நாள் திங்கள் எனில், சிறந்த நாள் வெள்ளியா? சனியா? உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்...

friday
பொன்னியின் செல்வன்: காதலில் தோற்ற இளவரசன்... இணையத்தை ஆக்கிரமித்த ஆதித்த கரிகாலன் மீம்ஸ்
friday
”செல்லம் ஐ லவ் யூ...” ட்ரோல் வீடியாவை ஷேர் பண்ண பிரகாஷ்ராஜ்- திரிஷாவின் க்யூட் ரியாக்ஷன்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com