வாட்ஸ் அப்பில் Thumbs Up காட்டினால் ஒப்பந்தத்திற்கு ஓகே - கனடா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கெண்ட் அதற்கான கட்டண ரசீதுகளை டாக்குமெண்ட் ஆக குறுஞ்செய்தி மூலம் அனுப்பியிருக்கிறார். மறுபுறம் இருந்த ஆஷ்டர் என்ற விவசாயியும் இதற்கு சரி என்று கூறுவது போல தம்ப்ஸ் அப் இமோஜியை பதிலுக்கு அனுப்பியுள்ளார்.
Thumbs Up
Thumbs Up Canva
Published on

ஒருவர் தம்ப்ஸ் அப் காட்டினால் இனி அது ஒப்பந்த உடன்படிக்கைக்கு சமம் என பொருள்படும் என்று கனடா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பொதுவாக மனிதர்கள் பேசும் பாஷைகளில் சைகை மொழியும் உண்டு. ஆனால் இந்த சைகை மொழியானது எந்த ஒரு அதிகாரப்பூர்வ செயலுக்குமான ஒப்புதலாக கருதப்படாது. எழுத்துப்பூர்வமாக ஒருவர் கூறுவது, சில இடங்களில் வாய் வழியாக ஒருவர் சொல்வது ஒப்புதலாக ஏற்கப்படுகிறது.

ஆனால் இனி ஒருவர் தம்ப்ஸ் அப் காட்டினால் அது அவர் முன்வைக்கப்பட்டுள்ள உடன்படிக்கையை ஏற்றுக்கொள்கிறார் என்று பொருள்படும், அது ஒருவரது கையெழுத்திற்கு சமம் என்று கனடா நாட்டு நீதிபதி டிமத்தி கீன் தீர்ப்பு வழங்கியுள்ளார்

கெண்ட் மிக்கெல்பொரோ என்ற நபர் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சர் என்பவரிடம் ஆளி விதைகள் ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்வது தொடர்பாக குறுஞ்செய்தி மூலம் ஒப்பந்தன்கள் போட்டிருக்கிறார்.

கெண்ட் அதற்கான கட்டண ரசீதுகளை டாக்குமெண்ட் ஆக குறுஞ்செய்தி மூலம் அனுப்பியிருக்கிறார். மறுபுறம் இருந்த ஆஷ்டர் என்ற விவசாயியும் இதற்கு சரி என்று கூறுவது போல தம்ப்ஸ் அப் இமோஜியை பதிலுக்கு அனுப்பியுள்ளார்.

சைகை மொழியில் தம்ப்ஸ் அப் காண்பித்தால் அது ஒருவர் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்வதாக பொருள்படும்.

Thumbs Up
திருமண உறவில் ஈடுபட்டு குழந்தை பெறுவதற்கு பரோல் வழங்கி ராஜஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு

இந்த ஆளிவிதைகளை விவசாயி ஆஷ்டர் ஒரு புஷலுக்கு 13 டாலர் என்ற கணக்கில் 86 டன்கள் விற்பதாக கெண்ட்டிடம் ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஆனால் வியாபாரம் முடியும் முன்னரே ஆளிவிதைகளின் விலை அதிகரித்ததால் ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ளார்.

இதனையடுத்து, கெண்ட் தன்னை ஏமாற்றிய ஆஷ்டர் மீது வழக்கு தொடுத்தார்.

குறுஞ்செய்தியில் தம்ப்ஸ் அப் சொன்னால், அது ஒப்பந்தத்தின் அனைத்து விதிமுறைகளுக்கும் ஒப்புக்கொண்டு உடன்படிக்கை செய்வதாகவே அர்த்தம் என கெண்ட் வாதாடினார். ஆஷ்டர் இதனை மறுத்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ஆஷ்டரின் முந்தைய வணிகங்களை ஆராய்ந்தனர். அதனடிப்படையில், ஆஷ்டர் அனுப்பிய தம்ப்ஸ் அப் இமோஜி ஒப்பந்தத்திற்கு அவர் சம்மதித்ததாகவே ஏற்றுக்கொள்ளப்படும் என்று தீர்ப்பளித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட கெண்ட்டிற்கு 82,000 கனடிய டாலர்கள் நஷ்டயீடாக வழங்கவேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

Thumbs Up
விவாகரத்துக்குப் பின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை - உயர் நீதிமன்றம் தீர்ப்பு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com