"நான் உடல் ரீதியில் ஈர்க்கப்பட்டுள்ளேன்" - சிகப்பு வேலியுடன் பெண்ணின் விசித்திர காதல்

Objectum sexual என்பது எரிகாவின் பாலினமாகக் கருதப்படுகிறது. அவர் தன்னை பொருட்களின் மீது உணர்வு ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஈர்ப்பு கொண்டுள்ளவராகக் குறிப்பிடுகிறார். முன்னதாக 2007ம் ஆண்டு இவர் ஈபிள் டவரை திருமணம் செய்து கொண்டார்.
Erika Eiffel
Erika EiffelTwitter
Published on

தான் ஒரு சிகப்பு வேலியைக் காதலிப்பதாகக் கூறும் அமெரிக்கப் பெண் இணையத்தில் வைரலாகி வருகிறார்.

50 வயதாகும் எரிகா லாப்ரி என்ற பெண் தான் ஒரு சிகப்பு வேலியைக் காதலிப்பதாக கூறியுள்ளார். இவர் ஒரு வில் வித்தை வீரர். பொருட்களின் மீதான காதலுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் எனப் போராடி வருகிறார்.

தற்போது இவர் தனது புதிய காதல் குறித்துப் பேசியுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் எரிகா ஒரு வேலியின் மீது அமர்ந்து அதனை தொட்டுப்பார்த்து தனது காதலை வெளிப்படுத்துகிறார்.

"இங்கு இப்படி ஒரு வேலி கிடைக்கும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இவர் மிகச் சரியாக இருக்கிறார்..." என வீடியோவில் பேசும் எரிகா அந்த வேலியைப் மற்ற ஆண்களே பொறாமைப்படும் அளவு புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

Objectum sexual என்பது எரிகாவின் பாலினமாகக் கருதப்படுகிறது. அவர் தன்னை பொருட்களின் மீது உணர்வு ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஈர்ப்பு கொண்டுள்ளவராகக் குறிப்பிடுகிறார். முன்னதாக 2007ம் ஆண்டு இவர் ஈபிள் டவரை திருமணம் செய்து கொண்டார்.

ஈபிள் டவரை திருமணம் செய்து கொண்ட பின்னர் எரிகா உலகளவில் புகழ் பெற்றார். அவர் அப்போது தனது பெயரை எரிகா ஈபிள் என மாற்றிக்கொண்டார்.

இது ஒரு உடல் ரீதியான ஈர்ப்பும் கூட என்று கூறும் எரிகா அந்த வீடியோவில் வேலியுடன் பேசவும் செய்கிறார்.

எரிகா மட்டுமின்றி பலர் இது பொருட்களைக் காதலிப்பது குறிப்பிடத்தக்கது. குக்கரை திருமணம் செய்து கொண்ட ஆண், பொம்மையைத் திருமணம் செய்துகொண்ட பெண் என இதன் பட்டியல் நீளம்.

நம் கிராமங்களில் கழுதைக்கும் வாழை மரத்துக்கும் கல்யாணம் செய்து வைக்கும் மூட நம்பிக்கைகள் இருந்தது. ஆனாலும் இந்த மனிதர்கள் உண்மையாக இவற்றைக் காதலாக கருதுவது ஆச்சரியமாகவும் வியப்புக்குரியதாகவும் உள்ளது.

Erika Eiffel
பொம்மையை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண் - குழந்தை பிறந்ததுள்ளதாக நெகிழ்ச்சி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com