Dinosaur Footprint
Dinosaur FootprintCanva

உணவகத்திற்கு சென்றவருக்கு கிடைத்த அதிசய பொருள் - டைனோசர் கால்தடமா? ஆராய்ச்சி சொல்வதென்ன?

சீனாவில் உணவகத்திற்கு சென்ற பழங்காலவியல் ஆர்வலர் ஒருவருக்கு அசாதாரணமான ஒரு விஷயம் தென்பட்டிருக்கிறது. எதோ பெரிய பற்கள் வடிவத்திலான தடத்தைக் கண்டிருக்கிறார்
Published on

நீங்கள் ஒரு உணவகத்திற்கு சாப்பிடுவதற்காகப் போகும் போது, அங்கு எதேச்சையாக ஒரு மிகப்பெரிய ஆச்சரியமான பொருள் ஒன்று கிடைத்தால் எப்படி இருக்கும்? சீனாவைச் சேர்ந்த ஒரு பழங்காலவியல் ஆர்வலர் ஒருவருக்கு அப்படி ஒரு அதிசயம் தான் நடந்திருக்கிறது.

கடந்த ஜூலை 10 அன்று, Ou Hongtao வழக்கம் போல் லெஷானில் (சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள) உணவகத்திற்குச் சென்றார், அப்போது அவரது கண்களில் மிகவும் அசாதாரணமான ஒரு விஷயம் தென்பட்டிருக்கிறது. உணவகத்தின் முற்றத்தில், எதோ பெரிய பற்கள் வடிவத்திலான தடத்தைக் கண்டிருக்கிறார். அது அவருக்கு டைனோசர் கால்தடங்களாக இருக்குமோ என்கிற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.

அதன் பிறகு இந்த தகவலை, சீனாவின் புவி அறிவியல் பல்கலைக்கழகத்தின் பழங்காலவியல் துறைக்கு தெரிவித்திருக்கிறார். அங்கிருந்து, இணை பேராசிரியர் டாக்டர் லிடா ஜிங் தலைமையிலான குழு ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த குழுவின் ஆராய்ச்சியின் முடிவில், Ou Hongtao-வின் அனுமானங்கள் விரைவில் உறுதிப்படுத்தப்பட்டன.

ஒரு 3D ஸ்கேனரைப் பயன்படுத்தி, இரண்டு ப்ரோன்டோசொரஸ்கள், பிரமாண்டமான க்வாட்ரூப் சௌரோபாட் டைனோசர்களின் இனத்தால் விட்டுச் செல்லப்பட்ட கால்தடமாக இருக்கலாம் என்பதை அந்த குழு கண்டறிந்தது. சுமார் 145 முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரெட்டேசியஸ் காலத்தில், உலகம் முழுவதும் டைனோசர்கள் செழித்திருந்த காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று டாக்டர் லிடா ஜிங் தெரிவித்தார்.

Dinosaur Footprint
8 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த பறக்கும் டைனோசர் - படிமம் கண்டுபிடிப்பு

நான்கு தடித்த கால்கள் மற்றும் மிக நீண்ட கழுத்து கொண்ட இந்த டைனோசர்கள் தான் இதுவரை இருந்த நில விலங்குகளில் மிகப்பெரியதாக நம்பப்படுகிறது. அவை 122 அடி நீளமும், 70 டன் எடையும் கொண்ட பிரம்மாண்டமான உயிரினமாக இருந்திருக்கின்றன. மூன்று பேருந்துகளின் நீளம் மற்றும் 10 ஆப்பிரிக்க யானைகளின் எடையைக் கொண்டவையாக அவை இருந்தன. 8 மீட்டர் நீளமுள்ள அந்த கால்தடங்களைப் பாதுகாப்பதற்காக, இப்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சீனாவில், நாட்டின் விரைவான வளர்ச்சியால் பழங்காலவியல் துறை பாதிக்கப்பட்டுள்ளது. அதீதமான கட்டுமான திட்டங்களின் காரணமாக எண்ணற்ற புதைபடிவங்களை அழிந்து வருகின்றன. அப்படியான சூழ்நிலையில், இந்த கண்டுபிடிப்பானது சீன மக்களால் மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த அடிச்சுவடுகள் இத்தனை ஆண்டுகளாக அப்படியே இருந்தது பெரிய அதிர்ஷ்டம் என்று வல்லுநர்கள் ஆச்சரியத்தோடு தெரிவிக்கிறார்கள். உணவகத்திற்கு முன்பு, இந்த இடத்தில் ஒரு கோழி பண்ணை இருந்திருக்கிறது. அங்கு மணல் மற்றும் அழுக்கு ஆகியவை இந்த அச்சுகளைப் பாதுகாக்க உதவியிருக்கலாம் என்றும் அவர்கள் கருதப்படுகிறது.

இந்த உணவகம் தொடங்குவதற்கு முன்பு, கட்டுமானத்தின் போது, உணவகத்தின் உரிமையாளர், இயற்கையான கல் தோற்றத்தை அவர் விரும்பியதே, இன்று இந்த அரிய டைனோசர் கால்தடம் கண்டறியப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

Dinosaur Footprint
முட்டைக்குள் முட்டை, அதுவும் டைனோசர் முட்டை - ஆச்சரியத்தில் அறிவியலாளர்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com