இந்தியா : இலங்கை, பாகிஸ்தானை விட மகிழ்ச்சியற்ற நாடு! - மகிழ்ச்சி எப்படி அளவிடப்படுகிறது?

அண்டை நாடான சீனா, நேபாளம், பொருளாதார பிரச்னைகளை எதிர்கொண்டுவரும் பாகிஸ்தான், ஏன் போரை எதிர்கொண்டுவரும் உக்ரைன் கூட இந்தியாவை விட மகிழ்ச்சியான நாடாக அளவிடப்பட்டுள்ளது.
இந்தியா : இலங்கை, பாகிஸ்தானை விட மகிழ்ச்சியற்ற நாடு! - மகிழ்ச்சி எப்படி அளவிடப்படுகிறது?
இந்தியா : இலங்கை, பாகிஸ்தானை விட மகிழ்ச்சியற்ற நாடு! - மகிழ்ச்சி எப்படி அளவிடப்படுகிறது?Canva
Published on

உலக மகிழ்ச்சி அறிக்கை கடந்த மார்ச் 20ம் தேதி வெளியானது முதல் அதனைச் சுற்றிய பேச்சுகள் எழுந்துள்ளன.

பின்லாந்து தொடர்ந்து 6வது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக திகழ்கிறது. டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து, இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.

இந்தியா 137 நாடுகளில் 126வது இடத்தைப் பெற்றிருக்கிறது. மகிழ்ச்சியற்ற நாடுகள் என எடுத்துக்கொண்டால் இந்தியா 12வது இடத்தைப் பிடிக்கிறது.

அண்டை நாடான சீனா, நேபாளம், பொருளாதார பிரச்னைகளை எதிர்கொண்டுவரும் பாகிஸ்தான், ஏன் போரை எதிர்கொண்டுவரும் உக்ரைன் கூட இந்தியாவை விட மகிழ்ச்சியான நாடாக அளவிடப்பட்டுள்ளது.

இந்தியாவை விட மகிழ்ச்சியற்ற நாடுகளாக மடகாஸ்கர், தான்சானியா, ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகள் உள்ளன. ஆஃப்கானிஸ்தான் உலகிலேயே மகிழ்ச்சியற்ற நாடாக இருக்கிறது.

இந்தியா இவ்வளவு மோசமான நாடாக கருதப்படுவது எதனடிப்படையில்? எப்படி ஒரு நாட்டின் மகிழ்ச்சியை அளவிடுகின்றனர் என்பதைப் பார்க்கலாம்.

மகிழ்ச்சி எப்படி அளவிடப்படுகிறது?

உலக நாடுகளின் பல்வேறு தரவுகளின் அடிப்பையில் கெல்லப் வேர்ட் கணக்கெடுப்பு ஏஜென்சி இந்த பட்டியலைத் தயாரிக்கிறது.

ஒவ்வொரு நாட்டிலும் 3000 பேர்வரை தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகள் அடிப்படையில் தரவுகள் அமைகின்றன.

இந்தக் கேள்விகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பெருந்தன்மை, சமூக ஆதரவு, சுதந்திரம் மற்றும் ஊழல் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டவை.

எடுத்துக்காட்டாக,

நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொண்டபோது உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாராவது உங்களுக்கு உதவி செய்தார்களா? - என்று கேள்விகள் கேட்கப்படும்.

இந்த கேள்விக்கு எவ்வளவு திருப்திகரமாக பதிலளிக்கப்படுகிறது என்பதைப் பொருத்து 0 - 10 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

இந்த கேள்வி உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை நீங்கள் எந்த அளவு நம்புகிறீர்கள் என்பதைக் காட்டுகிறது.

இது போன்ற பல கேள்விகளின் மூலம் பல மதிப்பெண்கள் பெறப்பட்டு அவற்றின் சராசரியாக இறுதி மதிப்பெண் கிடைக்கிறது.

முதலிடத்தில் உள்ள பின்லாந்தின் மதிப்பெண் 7.8, கடைசியிடத்தில் உள்ள ஆப்கானிஸ்தாம் 1.8 மற்றும் இந்தியா 4.0.

இந்தியா : இலங்கை, பாகிஸ்தானை விட மகிழ்ச்சியற்ற நாடு! - மகிழ்ச்சி எப்படி அளவிடப்படுகிறது?
ஆஸ்திரியா முதல் பின்லாந்து வரை : உலகின் மகிழ்ச்சியான நாடுகள் எவை தெரியுமா?

வாழ்க்கையில் நமக்கு விருப்பமான விஷயங்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும் நம் மகிழ்ச்சியில் அடங்கியுள்ளது. தொழிலைப் போலவே, மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம், விருப்பமான உணவை உண்ணும் சுதந்திரம், விருப்பமான ஆடைகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் போன்றவை இதில் அடங்கும்.

நமக்கு ஒவ்வொரு விஷயத்திலும் எவ்வளவு சுதந்திரம் கிடைக்கிறது என்பதையும் மகிழ்ச்சிக்கான அளவீட்டில் வைத்துள்ளனர்.

மேலும், மகிழ்ச்சியாக இருப்பவர் மற்ற மனிதர்கள் நலனிலும் அக்கறைக்கொள்கிறார் என்பதைக் குறிப்பிட்டு, எதாவது தொண்டு நிறுவனத்துக்கு பணம் கொடுத்திருக்கிறோமா எனவும் கேள்விகள் கேட்கப்படுகிறது.

முக்கியமாக நாட்டில் இருக்கும் ஊழல் குறித்தும் கேள்விகள் இருக்கின்றன. ஏனெனில் சமூகமாக நமது மகிழ்ச்சியை கெடுக்கும் ஒரு முக்கியமான விஷயம் ஊழல்.

மகிழ்ச்சியாக இருப்பது மனித வாழ்வில் மிகவும் அவசியமான ஒன்று.

சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன், மக்களின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ஐநா அனைத்து அரசுகளிடமும் கூறிவருகிறது.

இந்தியா : இலங்கை, பாகிஸ்தானை விட மகிழ்ச்சியற்ற நாடு! - மகிழ்ச்சி எப்படி அளவிடப்படுகிறது?
பின்லாந்து எனும் பூலோக சொர்க்கம் - உலகிலேயே மகிழ்ச்சியான நாடாக இருப்பது ஏன் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com