இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம் என்றே சொல்லலாம். ஏனென்றால் ஒவ்வொரு வீரருக்கும் பக்தர்களைப் போல வணங்கக் கூடிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
சமகாலத்தில் அப்படிப்பட்ட மிகப் பெரிய ரசிகர்பட்டாளத்துக்கு சொந்தக்காரர் விராட் கோலி. ஸ்டேடியத்தில் மட்டுமல்லாமல் சமூகவலைத்தளங்களிலும் அவருக்கு அலை அலையாக மக்கள் திரள்வர்.
இன்ஸ்டாகிராமில் அவருக்கு 253 மில்லியன் ஃபாலோவர்கள் இருக்கின்றனர். இந்தியாவிலேயே ஏன் ஆசிய கண்டத்திலேயே அவர் தான் அதிகமாக பின்தொடரப்படும் நபர்.
இந்த புகழ் தான் கோலிக்கு அதிக செல்வத்தைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. இந்திய விளம்பர சந்தையில் தவிர்க்க முடியாத நபராக உருவாகியிருக்கிறார் விராட்.
விராட் கோலியின் சொத்து மதிப்பு இப்போது 1050 கோடி என அறிக்கைகள் கூறுகின்றன. உலக அளவில் பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவராக உருவாகியிருக்கிறார்.
பெங்களூருவைச் சேர்ந்த வர்த்தக மற்றும் முதலீட்டு நிறுவனமான ஸ்டாக் க்ரோ உலகிலேயே அதிகமாக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர் கோலிதான் எனக் கூறுகிறது.
கிரிக்கெட் மட்டுமல்லாமல் விளம்பரங்கள், இன்ஸ்டாகிராம், தனிப்பட்ட சொத்துகள் மற்றும் பிற பிசினஸ்களில் இருந்து விராட் கோலிக்கு வரும் வருமானத்தை ஸ்டாக் க்ரோவின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பிசிசிஐ-யில் விராட் கோலி ஏ+ பிரிவில் இருக்கிறார் என்பதனால் அவருக்கு ஆண்டு வருமானமாக 7 கோடி ரூபாய் வழங்கப்படும். தவிர ஒரு டெஸ்ட் போட்டியில் 15 லட்சம், ஒரு நாள் போட்டியில் 6 லட்சம், டி20 போட்டியில் 3 லட்சம் வழங்கப்படும்.
கிரிக்கெட் தாண்டி அவர் இந்தியன் சூப்பர் லீகில் கோவா எஃப்.சி அணியையும் ஒரு டென்னில்ஸ் அணியையும் ப்ரோ மல்யுத்த அணியையும் வைத்திருக்கிறார்.
ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடும் அவர் 15 கோடி ஆண்டு வருமானம் ஈட்டுகிறார்.
அவர் சொந்தமாக சில பிராண்ட்களையும் வைத்திருக்கிறார். உணவகங்களை நடத்துகிறார் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சிலவற்றில் முதலீடு செய்துள்ளார். உதாரணமாக எம்பிஎல், ப்ளூ ட்ரைப், யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ்பிஸ், ஸ்போர்ட்ஸ் கான்வோ என சொல்லிக்கொண்டு போகலாம்.
விராட் ஒரு விளம்பரத்தில் நடிக்க 7.5 முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். இவர் 18க்கும் மேற்பட்ட பிராண்ட்களுக்காக விளம்பரங்களில் நடிக்கிறார். இவற்றில் இருந்து ஆண்டுக்கு 175 கோடி வரை பணம் சம்பாதிக்கிறாராம்.
சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்படும் விராட் கோலி அவரது ட்விட்டர் கணக்கில் ஒரு பதிவுக்கு 2.5 கோடியும் இன்ஸ்டாகிராமைப் பொருத்தவரை 8.9 கோடியும் பணம் சம்பாதிக்கிறார் எனக் கூறப்படுகிறது.
விராட் பல சொகுசு கார்களை வைத்துள்ளார். மும்பையில் உள்ள அவரது வீடு 34 கோடி மதிப்புடையதாம். குர்கானில் உள்ள வீடு 80 கோடி எனக் கூறப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust